Published:Updated:

``அரசு தேயிலைத் தோட்டக் கழகத்தை லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்!" - அமைச்சர் உறுதி!

tea estate wrokers
News
tea estate wrokers

நஷ்டத்தைக் குறைக்கிறோம் என்ற பெயரில் வால்பாறை மற்றும் ஊட்டி அருகில் உள்ள நடுவட்டம் பகுதியில் டேன் டீ நிறுவனத்தின் வசம் உள்ள தேயிலைத் தோட்டங்களை மீண்டும் வனத்துறை வசம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

``அரசு தேயிலைத் தோட்டக் கழகத்தை லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்!" - அமைச்சர் உறுதி!

நஷ்டத்தைக் குறைக்கிறோம் என்ற பெயரில் வால்பாறை மற்றும் ஊட்டி அருகில் உள்ள நடுவட்டம் பகுதியில் டேன் டீ நிறுவனத்தின் வசம் உள்ள தேயிலைத் தோட்டங்களை மீண்டும் வனத்துறை வசம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

Published:Updated:
tea estate wrokers
News
tea estate wrokers

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்து மீண்டும் தாய்நாடு திரும்பிய தமிழர்களுக்காகத் தொடங்கப்பட்ட நிறுவனமே டேன் டீ எனப்படும் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம். நீலகிரி மற்றும் வால்பாறையில் பல்லாயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தேயிலை பயிரடப்பட்டு தோட்டக்கூலிகளாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். டேன் டீ நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாகச் சொல்லி தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமைகளைக்கூட வழங்காத நிலையே நீடிக்கிறது.

tea estate workers
tea estate workers

நஷ்டத்தைக் குறைக்கிறோம் என்ற பெயரில் வால்பாறை மற்றும் ஊட்டி அருகில் உள்ள நடுவட்டம் பகுதியில் டேன் டீ நிறுவனத்தின் வசம் உள்ள தேயிலைத் தோட்டங்களை மீண்டும் வனத்துறை வசம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. மேலும், பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்காமல் காலந்தாழ்த்தி வருகின்றனர். ஓய்வு பெற்ற தொழிலாளர்களை உடனடியாகக் குடியிருப்பில் இருந்து வெளியேற்றுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். டேன் டீ தொடர்பாகத் தற்போதைய தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், டேன் டீ நிறுவனத்தை லாபத்தில் இயக்குவது மற்றும் தோட்ட தொழிலாளர்களின் குறைகளைக் களைவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஊட்டியில் உள்ள தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. நீலகிரி எம்.பி ராசா மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ராசா 
 | ஆய்வுக்கூட்டம்
ராசா | ஆய்வுக்கூட்டம்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி ராசா மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர், ``உலக மயமாக்குதல் கொள்கையால் இந்தியத் தேயிலைச் சந்தையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியாலும், கடந்த சில ஆண்டுகளாக நிதி பற்றாக்குறை நிலவியதன் காரணமாகத் தேயிலைச் செடிகளை உரிய முறையில் பராமரிக்க இயலாததாலும், உரங்கள் மற்றும் வேதி இடுபொருள்களின் விலை அதிகரித்தது. இக்கழகத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு அடைந்த காரணத்தால் இக்கழகத்தில் பணிபுரிய முன்வராததால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், தேயிலை அறுவடை இலக்கை எட்ட முடியாமல் இக்கழகம் தொடர் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

எனவே, உபாசியின் விதிமுறைகளின்படி தற்போதுள்ள நிரந்தர மற்றும் தற்காலிகத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கொண்டு, இருக்கும் தேயிலை நிலப்பரப்பை பராமரித்து பசுந்தேயிலை உற்பத்தி தொடர்ந்து நடைபெறும். எக்காரணத்தைக் கொண்டும் தோட்டத் தொழிலாளர்கள் வேலை இழக்க மாட்டார்கள். இக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 677 தொழிலாளர்களுக்கு பணிக்கொடை மற்றும் இதர பணப்பலன்கள் வழங்கப்பட்டும் இதுவரை அவர்கள் இக்கழக குடியிருப்பைக் காலி செய்யாமல் தற்போதும் குடியிருந்து வருகின்றனர்.

இந்நேர்வு அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் ஏற்கெனவே கட்டப்பட்டு வரும் வீடுகளை பயனாளிகளுக்கான உரிய பங்கு தொகையை செலுத்த இயல்பவர்கள், தொகையைச் செலுத்தி பெற்று பயனடையலாம்.

ஆய்வுக்கூட்டம்
ஆய்வுக்கூட்டம்

இந்த பங்கு தொகை செலுத்த இயலாதவர்கள் நடுவட்டம் மற்றும் சேரங்கோடு பகுதியில் அரசு தாமாக முன்வந்து வீடுகட்டும் திட்டத்தின் கீழ் இலவச மனைபட்டாவும் வீடுகட்ட மானியமாக தலா ரூ.2,10,000 வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மூன்றாவது வாய்ப்பாகத் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தாங்களே வீடுகட்டிக் கொள்ள விரும்புவோருக்கு இதே பகுதியில் வீட்டு மனை பட்டா இலவசமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்துக்குப் பிறகு, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் மீண்டும் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் லாபகரமாக இயங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அப்போது, கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், தேவையில்லாத செலவினங்களைக் குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகம் லாபகரமாக இயங்குவதற்கு தனியார் ஏஜென்சி கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அவர்கள் அளிக்கும் ஆய்வு அறிக்கையைத் தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்து, தேவையான நிதி ஆதாரம் பெற்று தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகம் லாபகரமாக இயங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றனர்.