Published:Updated:

நீலகிரி: பெருக்கெடுத்த வெள்ளம்; நீரில் மூழ்கிய விளைநிலங்கள்!

நீரில் மூழ்கிய விளை நிலங்கள்
News
நீரில் மூழ்கிய விளை நிலங்கள்

`ஆயிரக்கணக்கான வாழைகள் நீரில் மூழ்கின. மேலும், பயிர்களுக்கு இட்ட உரங்கள் அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. வாழைகள் அழுகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை எடுத்தால் நல்லது...' விவசாயிகள் கோரிக்கை.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகத் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் குறைந்து காணப்படுகிறது. இருப்பினும், மாவட்டத்தின் பல பகுதிகள் அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. ஆறுகளிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில், கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இந்த மழைக் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரித்தது. இதனால் முதுமலை ஊராட்சியில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை உள்ளிட்ட பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கின.

நீரில் மூழ்கிய விளைநிலங்கள்
நீரில் மூழ்கிய விளைநிலங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விளைநிலங்கள் மூழ்கியது குறித்து முதுமலை ஊராட்சி விவசாயிகள் பேசுகையில், ``நேற்று மாலை 3 மணிக்கு முதுமலை ஊராட்சிப் பகுதிகளில் கனமழை பெய்தது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, விவசாய நிலத்துக்குள் புகுந்தது. ஆயிரக்கணக்கான வாழைகள் நீரில் மூழ்கின. மேலும், பயிர்களுக்கு இட்ட உரங்கள் அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. வாழைகள் அழுகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை எடுத்தால் நல்லது" என்று கோரிக்கை வைத்தனர்.