Published:Updated:

ஏற்கெனவே விலை இல்லை, இப்போ கொப்பள நோய் தாக்கம்! கலக்கத்தில் நீலகிரி தேயிலை விவசாயிகள்!

தேயிலை கொப்பள நோய்
News
தேயிலை கொப்பள நோய்

மழைக்குப் பின் நல்ல வெயில் கிடைத்தால் மட்டுமே ஆரோக்கியமான பசுந்தேயிலை கிடைக்கும். கடந்த ஒரு மாசமா பகல் நேரத்துல நல்ல வெயில் கிடைக்கலை. மழையும் மேகமூட்டமாகவுமே இருந்தது.

ஏற்கெனவே விலை இல்லை, இப்போ கொப்பள நோய் தாக்கம்! கலக்கத்தில் நீலகிரி தேயிலை விவசாயிகள்!

மழைக்குப் பின் நல்ல வெயில் கிடைத்தால் மட்டுமே ஆரோக்கியமான பசுந்தேயிலை கிடைக்கும். கடந்த ஒரு மாசமா பகல் நேரத்துல நல்ல வெயில் கிடைக்கலை. மழையும் மேகமூட்டமாகவுமே இருந்தது.

Published:Updated:
தேயிலை கொப்பள நோய்
News
தேயிலை கொப்பள நோய்

ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட தேயிலை விவசாயமே நீலகிரியின் மிக முக்கிய தோட்டப் பயிராக இருந்து வருகிறது. நூற்றுக்கணக்கான பெருந்தேயிலைத் தோட்டங்கள், சுமார் 50,000 சிறு குறு விவசாயிகள், பல்லாயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் எனப் பெரும்பாலான நீலகிரி மக்கள் தேயிலையைத் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

தேயிலைத் தோட்டம்
தேயிலைத் தோட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நடப்பு ஆண்டில் நல்ல மழைப்பொழிவு காணப்பட்டதால் தேயிலை மகசூல் அதிகரித்திருக்கிறது. ஆனால், பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், தேயிலைச் செடிகளை கொப்பள நோய் தாக்கி வருகிறது. மகசூல் அதிகரித்திருந்தும்‌ பயனில்லை என சிறு குறு தேயிலை விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொப்பள நோய் பாதிப்பு குறித்து கலக்கம் தெரிவித்த மஞ்சூரைச்‌ சேர்ந்த விவசாயி ஒருவர், ``இந்த வருஷம் பருவமழை தாமதமா தொடங்கினாலும் நல்ல மழை கிடைச்சது. இதனால பசுந்தேயிலை மகசூலும் கணிசமா அதிகரிச்சது. மழைக்குப் பின் நல்ல வெயில் கிடைத்தால் மட்டுமே ஆரோக்கியமான பசுந்தேயிலை கிடைக்கும். கடந்த ஒரு மாசமா பகல் நேரத்துல நல்ல வெயில் கிடைக்கலை. மழையும் மேகமூட்டமாகவுமே இருந்தது.

தேயிலை கொப்பள நோய்
தேயிலை கொப்பள நோய்

இதனால பசுந்தேயிலை முழுக்க கொப்பள நோய் பாதிப்பு அதிகமா இருக்கு. கொப்பள நோய் பாதிச்ச இலையைப் பறித்து குப்பையில்தான் கொட்டணும். மஞ்சூர் சுற்று வட்டாரத்துல கொப்பள நோய் தாக்கம் அதிகமாக இருக்கு. ஏற்கெனவே விலை கிடைக்காம தவிக்கிறோம். இப்போ கொப்பள நோய் தாக்கம் வேற எங்களை வாட்டுது. அரசாங்கமா பாத்து மானியம் எதுவும் கொடுத்தால் உதவியா இருக்கும்'' என ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.