Published:Updated:

வைரல் வீடியோ: ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட காட்டுமாடுகள்... வனத்துறை எச்சரிக்கை!

மோதிக்கொண்ட காட்டுமாடுகள்
News
மோதிக்கொண்ட காட்டுமாடுகள்

திடீரென ஆக்ரோஷமடைந்த அந்த இரண்டு காட்டுமாடுகளும் ஒன்றுக்கொன்று முட்டி மோதியுள்ளன. கொம்புகளால் இரண்டு காட்டுமாடுகளும் நீண்ட நேரம் சண்டையிட்டுக் கொண்டதைத் கண்ட உள்ளூர் மக்கள் செல்போனில் வீடியோ எடுத்து வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

வைரல் வீடியோ: ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட காட்டுமாடுகள்... வனத்துறை எச்சரிக்கை!

திடீரென ஆக்ரோஷமடைந்த அந்த இரண்டு காட்டுமாடுகளும் ஒன்றுக்கொன்று முட்டி மோதியுள்ளன. கொம்புகளால் இரண்டு காட்டுமாடுகளும் நீண்ட நேரம் சண்டையிட்டுக் கொண்டதைத் கண்ட உள்ளூர் மக்கள் செல்போனில் வீடியோ எடுத்து வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

Published:Updated:
மோதிக்கொண்ட காட்டுமாடுகள்
News
மோதிக்கொண்ட காட்டுமாடுகள்

நீலகிரியில் காடுகளை இழந்து தவிக்கும் வனவிலங்குகள் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி அலைந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய பகுதிகளில் காட்டுமாடுகள் அதிக எண்ணிக்கையில் உலவி வருகின்றன. இதனால் மனித - காட்டுமாடுகள் எதிர்கொள்ளல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

மோதிக்கொண்ட காட்டுமாடுகள்
மோதிக்கொண்ட காட்டுமாடுகள்

குடியிருப்புப் பகுதிகளில் உலவும் காட்டுமாடுகள் அருகில் செல்லவோ புகைப்படங்கள் எடுக்க முயற்சி செய்யவோ வேண்டாம் என வனத்துறையினர் தொடர்ந்து மக்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கோத்தகிரி காமராஜர் சதுக்கம் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இரண்டு காட்டுமாடுகள் நேற்று மேய்ச்சலில் ஈடுபட்டுள்ளன.

திடீரென ஆக்ரோஷமடைந்த அந்த இரண்டு காட்டுமாடுகளும் ஒன்றுக்கொன்று முட்டி மோதியுள்ளன. கொம்புகளால் இரண்டு காட்டுமாடுகளும் நீண்ட நேரம் சண்டையிட்டுக் கொண்டதைக் கண்ட உள்ளூர் மக்கள் செல்போனில் வீடியோ எடுத்து வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ வரைலாகி வருகிறது.

மோதிக்கொண்ட காட்டுமாடுகள்
மோதிக்கொண்ட காட்டுமாடுகள்

இது குறித்து எச்சரித்த வனத்துறை அதிகாரிகள், ``குடியிருப்பு பகுதிகளில் காட்டுமாடுகள் உலாவினால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வலிமையை நிரூபிக்க இரண்டு ஆண் காட்டுமாடுகளிடையே மோதல் நடப்பது வழக்கமான ஒன்றுதான். இது போன்ற சமயங்களில் அவை மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். அருகில் செல்ல வேண்டாம். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்'' என்றனர்.