தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...
பிரீமியம் ஸ்டோரி
News
14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்

ஆசியாவின் அதிவேக சைக்கிள் பெண்!

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

புனே நகரைச் சேர்ந்த 19 வயதான வேதங்கி குல்கர்னி, சைக்கிளில் அதிவேகமாக உலகைச் சுற்றிய ஆசியப் பெண் என்கிற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். தன் சைக்கிளில் 29,000 கிலோமீட்டர் தொலைவை 159 நாள்களில் கடந்திருக்கிறார். இங்கிலாந்தின் போர்ன்மவுத் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேலாண்மை பயின்றுவரும் வேதங்கி, இரண்டாண்டுகளாகவே இதற்கான பயிற்சிகளை மேற்கொண்டார்.

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...கனடாவில் கரடி துரத்தியது, ஸ்பெயினில் வழிப்பறி, ரஷ்யாவில் கடும்பனியில் நடுங்கியது என மோசமான சம்பவங்களைச் சந்தித்திருக்கிறார். விசா சிக்கலால் ஐரோப்பாவில் கடும் குளிர்காலத்தில் சிக்கிக்கொண்டார்.

“19 வயதுப் பெண்ணுக்குத் தங்கள் முழு ஒத்துழைப்பையும் உத்வேகத்தையும் என் பெற்றோர் தந்தனர். எந்த சிக்கலான சூழலிலும், நான் மீண்டு வந்துவிடுவேன் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது” என்று வேதங்கியும், “அவளது மன உறுதிதான் அவளை இந்த இடத்துக்குக் கொண்டுசேர்த்திருக்கிறது” என்று தந்தை விவேக் குல்கர்னியும் கூறியுள்ளனர்.

உலகம் சுற்றிய வாலிபத்துக்கு வாழ்த்துகள்!

கைவிடப்பட்ட குழந்தைக்குப் பாலூட்டிய பெண் கான்ஸ்டபிள்!

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

ஹைதராபாத் நகரின் உஸ்மானியா பொது மருத்துவமனை அருகே நின்றுகொண்டிருந்த முகம்மது இர்ஃபானிடம் தன் இரண்டு மாதக் கைக்குழந்தையை ஒப்படைத்துவிட்டு, தண்ணீர் குடித்துவிட்டு வருவதாகச் சொல்லிச்சென்றார் பெண் ஒருவர். சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. அழத் தொடங்கிய குழந்தையை அருகிலுள்ள அஃப்சல்கஞ்ச் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் முகம்மது. காவலர் எம்.ரவீந்தர் குழந்தையின் நிலையை வேறொரு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளான தன் மனைவி பிரியங்காவுக்கு தெரிவித்து வரச்சொன்னார். “அழுதுகொண்டிருந்த குழந்தையைக் கண்டதும் ஒரு தாயான எனக்கு அதன் நிலை புரிந்துபோனது. உடனடியாகக் குழந்தையைத் தூக்கிப் பாலூட்டினேன்” என்கிறார் பிரியங்கா.
 
குப்பை பொறுக்கி வாழ்க்கையை ஓட்டி வந்த அந்தப் பெண் குழந்தையைத் தொலைத்த நாளன்று போதையில் இர்ஃபானிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். ஒரு வழியாக குழந்தையைக் காணாமல் போன 24 மணி நேரத்துக்குள் தாயிடம் ஒப்படைத்த காவல்துறையினர், அவரைக் கடுமையாக எச்சரித்தும் அனுப்பினர். பெண் கான்ஸ்டபிள் பிரியங்காவுக்கு உயர் காவல்துறை அதிகாரிகள் பாராட்டைத் தெரிவித்துப் பரிசு வழங்கியுள்ளனர்.

இரு துருவத் தாய்கள்!

மந்தனாவின் மாபெரும் சாதனை!

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

ர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி ஒவ்வோர் ஆண்டும் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்து, விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, கடந்த ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான `ரேஷல் ஹேஹோ ஃப்ளின்ட்' விருதைப் பெறுகிறார். 22 வயதான இளம் ஆட்டக்காரரான மந்தனா, உலகின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் என்ற விருதையும் பெறுகிறார். 2018-ல் 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மந்தனா, 669 ரன்களைக் குவித்து 66.90 என்கிற சராசரிப் புள்ளிகளைப் பெற்றிருக்கிறார். 25 டி-20 மேட்சுகளில் மொத்தம் 622 ரன்களை எடுத்து 130.67 என்கிற ஸ்ட்ரைக் ரேட்டையும் எட்டிப்பிடித்துள்ளார்.

இந்தப் பெருமைக்குரிய விருது பெறும் இரண்டாவது இந்திய வீராங்கனையாவார் மந்தனா. இதற்குமுன் 2007-ம் ஆண்டு இந்த விருதினை வென்றிருக்கிறார் ஜுலான் கோஸ்வாமி. “இது போல நம் விளையாட்டுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் நம்மை இன்னும் உற்சாகப் படுத்தும்; நம் அணிக்காக இன்னமும் உழைக்க வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும்” என்று கூறியிருக்கிறார் மந்தனா.

கிரிக்கெட் கில்லிராணி!

நாடு போற்றும் நரசம்மா!

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

1940-ம் ஆண்டு தன் இருபதாவது வயதில் தன் பாட்டியுடன் முதல் பிரசவத்தைப் பார்த்தார் நரசம்மா. அன்று முதல், தன் இறுதிமூச்சு வரை 15,000-க்கும் அதிக பிரசவங்களை இலவசமாகப் பார்த்திருக்கிறார். கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம் பவகடா பகுதியைச் சேர்ந்தவர் இவர். கல்வியறிவு இல்லாத நரசம்மாவுக்கு மொத்தம் 12 குழந்தைகள். 2014-ம் ஆண்டு தும்கூரு பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. `சுலகிட்டி' (மருத்துவச்சி) என்கிற அடைமொழியும் இவருக்கு வந்து சேர்ந்தது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நரசம்மாவுக்கு `பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவித்தது மத்திய அரசு. பழங்குடியினப் பெண்கள் பலருக்குப் பிரசவம் பார்க்கும் வாய்ப்பு நரசம்மாவுக்குக் கிடைத்தது. அந்தப் பெண்கள் மூலம் நிறைய இயற்கை மருத்துவமும் கற்றுக்கொண்டார். அதுவே இவருக்குப் பெரும் வெற்றியைத் தேடித்தந்தது. கருவிலிருக்கும் குழந்தையின் நாடித்துடிப்பு, தலை இருக்கும் நிலை போன்றவற்றை வெகு திறமையாகத் தெரிந்துகொள்ளக்கூடியவர் நரசம்மா. தனக்குத் தெரிந்த இந்தப் பிரசவம் பார்க்கும் பணியை, மகள் ஜெயம்மா உட்பட கிட்டத்தட்ட 180 பெண்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் தன் 98-வது வயதில் உடல்நலக் குறைவால் பெங்களூரில் காலமானார்.

நரசம்மாவுக்கு நம் நன்றியும் இரங்கலும்...

அயர்லாந்து நாட்டில் பணியைத் தொடங்கும் கருக்கலைப்பு மையங்கள்!

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

யர்லாந்து நாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் கருக்கலைப்பு செய்ய பெண்களுக்கு அனுமதியளிப்பது குறித்த வாக்கெடுப்பு நடந்தது. அதில் 66.4% பேர் அந்நாட்டின் கருக்கலைப்பு சட்டத்தின் எட்டாவது திருத்தத்தை மாற்ற வேண்டும் என்று வாக்களித்திருந்தனர். பிறக்காத குழந்தைக்குத் தாய்க்கு ஈடான சம உரிமையை வழங்கியிருந்த அந்தச் சட்டம், பாலியல் வன்முறை, தாயின் உடல்நலத்துக்கு ஆபத்து போன்ற எந்தக் காரணத்துக்காகவும் கருக்கலைப்பு செய்வதைத் தடை செய்திருந்தது. இந்தியப் பெண்ணான சவீதா ஹலப்பனாவர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும்கூட, கருக்கலைப்பு மறுக்கப்பட்டு மரணமடைந்தது அங்கு பெரும் அதிர்வலைகளை உருவாக்கி, பெண்களின் நலனுக்கு எதிரான இந்தச் சட்டத்தை எதிர்த்து மக்களை ஒன்று திரட்டச் செய்தது.

இதன்பின் அரசு சட்டத் திருத்தம் செய்தது. பெண்ணின் விருப்பத்தின் பேரில் ஒன்பது வாரங்கள் வரை ஜிபி எனப்படும் பொது மருத்துவர்களும், ஒன்பது முதல் பன்னிரண்டு வாரங்கள் வரை பொது மருத்துவமனைகளும் கருக்கலைப்பு செய்ய இந்த சட்டம் வழிவகை செய்கிறது. 12 வாரங்களுக்குப் பிறகு, மிக அத்தியாவசியக் காரணங்களுக்காக மட்டுமே கருக்கலைப்பு செய்துகொள்ளலாம் என்றும் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 9 அரசுப் பொது மருத்துவமனைகளில் இந்த உதவி வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கருக்கலைப்பு செய்ய விரும்பும் பெண்களுக்கு 24 மணிநேர ஹெல்ப்லைன் ஒன்றையும் அமைத்திருக்கிறது.

பெண்ணுடல் மீதான உரிமை அவளுக்கே!

உலக சாதனை படைத்திருக்கும் வனிதா மதில்!

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பரிமலை கோயிலுக்குள் 50 வயதுக்குட்பட்ட பெண்களும் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், சில கட்சிகளும் வலதுசாரி இயக்கங்களும் இந்தத் தீர்ப்புக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடத்திவருகின்றன. இந்த எதிர்ப்பைச் சமாளிக்கும் வகையிலும், ஆண் பெண் சமத்துவத்தை முன்னிறுத்தியும், கேரளாவின் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி தலைமையில், 176 அமைப்புகள் ஒன்றிணைந்து, `வனிதா மதில்' என்ற பெயரில் பெண்களை மட்டுமே கொண்டு மனிதச்சங்கிலி இயக்கம் ஒன்றை நடத்தத் தீர்மானித்தன.

புத்தாண்டு தினத்தன்று மாலை நான்கு மணிக்கு மாநில ஹைவேயில் அணி திரளுமாறு பெண்கள் அறிவுறுத்தப்பட்டனர். 625 கிலோமீட்டர் நீண்ட இந்த மனிதச்சங்கிலியில் கரம்கோத்த பெண்களின் எண்ணிக்கை 50 லட்சம். உலகில் மிக அதிக அளவில் பெண்கள் ஒன்றுகூடிய சாதனை நிகழ்வாக இதை ‘யுனிவர்சல் ரெக்கார்ட்ஸ் ஃபோரம்’ அமைப்பு அறிவித்திருக்கிறது. இந்தச் சங்கிலியின் முதல் பெண்ணாக காசர்கோட்டில் அமைச்சர் கே.கே.ஷைலஜாவும், திருவனந்தபுரத்தின் கடைசிப்பெண்ணாக மார்க்சிஸ்ட் தலைவரான பிருந்தா காரத்தும் கைகோத்தனர். நடிகைகள் ரீமா கல்லிங்கல், பார்வதி, நீனா குருப், மாலா பார்வதி போன்றோரும் இந்த மனிதச் சங்கிலியில் பங்கேற்றனர். “ஆண் பெண் சமத்துவம் மற்றும் சம வாய்ப்பைக் கோரியே இந்த மனிதச் சங்கிலி” என்று கூறியுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

மதில்களை உடைத்த `வனிதா மதில்'!

- நிவேதிதா லூயிஸ்