தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

நீங்களும் செய்யலாம்: கலம்காரி பிளாக் பிரின்ட்டிங் - அருணா

நீங்களும் செய்யலாம்: கலம்காரி பிளாக் பிரின்ட்டிங் - அருணா
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்களும் செய்யலாம்: கலம்காரி பிளாக் பிரின்ட்டிங் - அருணா

நீங்களும் செய்யலாம்: கலம்காரி பிளாக் பிரின்ட்டிங் - அருணா

கோடையின் கொடுமையிலிருந்து தப்பிப்பதற் கென்றே காட்டன் உடைகளைச் சேகரித்து வருபவர்கள் இருக்கிறார்கள். அந்த உடைகள் மட்டுமே உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்துவிடுகின்றனவா என்றால் சந்தேகம் தான். பருத்தி உடைகள் என்றாலும் அவற்றில் சேர்க்கப்படுகிற சாயங்கள், அவை பெறப்படும் பொருள்கள் எனப் பல விஷயங்களும் அதற்குக் காரணமாகின்றன என்பதே உண்மை.

நீங்களும் செய்யலாம்: கலம்காரி பிளாக் பிரின்ட்டிங் - அருணா

துளியும் கெமிக்கல் சேர்க்காத, இயற்கையான சாயங்களைக்கொண்டு துணிகளுக்கு நிறமேற்றி, அதிலும் பெண்கள் மத்தியில் எப்போதும் மவுசு குறையாமலிருக்கும் கலம்காரி வேலைப்பாடுகளுடன் கூடிய பிளாக் பிரின்ட்டிங் டிசைன்களை முயற்சிசெய்து வெற்றியும் கண்டிருக்கிறார் அருணா விஜயகுமார். திருவள்ளூரைச் சேர்ந்த தொழில்முனைவோரான இவர், தனது முழுநேரத் தொழிலான பிளாக் பிரின்ட்டிங்கை, இயற்கையோடு இயைந்த தொழிலாக மாற்றியிருக்கிறார்.

‘`பிழைப்புக்காக சென்னை வந்தோம். என் கணவர்தான் முதல்ல பிளாக் பிரின்ட்டிங் பண்ணிட்டிருந்தார். அவருக்கு உதவியா நானும் செய்து பழகினேன். ஒரு கட்டத்துல இந்தத் தொழிலை நானே முழுப் பொறுப்பெடுத்துச் செய்ய வேண்டிய நிலைமை வந்தது. இப்போ நான் பிரின்ட்டிங் யூனிட்டையும் கவனிச்சுக்கிட்டு, பயிற்சிகளும் கொடுக்கிறேன். ஆர்டர் பிடிக்கிறது, சப்ளை பண்றதுனு என் கணவர் எனக்கு உதவியா இருக்கார்’’ என்கிற அருணா, கலம்காரி பிளாக் பிரின்ட்டிங் பிசினஸில் ஆர்வமுள்ளோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.


என்னென்ன தேவை? முதலீடு?

காட்டன் மட்டுமன்றி பட்டு, சணல், கோட்டா  என எந்த மெட்டீரியலிலும் இதைச் செய்யலாம். செயற்கையாகத் தயாரிக்கப்படும் சிந்தெடிக் துணிகளுக்குச் செய்ய முடியாது,

நீங்களும் செய்யலாம்: கலம்காரி பிளாக் பிரின்ட்டிங் - அருணா

பூந்திக்கொட்டை, கடுக்காய், இரும்புத்தூள், பனைவெல்லம், படிகாரம், அரபிக் கம், வெங்காயத்தோல், புதினா, மஞ்சள், துளசி, டீத்தூள், மஞ்சிஷ்டா வேர், சுருள் பட்டை, செம்பருத்திப்பூ, மாதுளம்பழ ஓடு, காய்ந்த ரோஜா இதழ்கள், பீட்ரூட் தோல்... இப்படி   இயற்கையான பொருள்கள்தாம் தேவை. கடுக்காய் கலவையில் முதலில் துணிகள் ஊறவைக்கப்படும். பிறகு, மேலே குறிப்பிட்ட பொருள்களைக் கொண்டு இரண்டுவிதமான பேஸ்ட் தயாரிப்போம். அவற்றைவைத்து துணிகளில் பிரின்ட்டிங் செய்வோம். பிரின்ட் செய்த பிறகு  துணிகளை நனைத்து, வெயிலில் உலரவைத்துப் பிறகு சாயமேற்ற வேண்டும். துணிகளில் உள்ள பசை அகற்றப்படும். துணிகளில் ஏற்றிய சாயம் எத்தனை ஆண்டுகளானாலும் போகாது.

துணிகளுக்கான செலவு தனி. பிளாக்ஸ் மற்றும் டேபிளுக்கும் 5,000 ரூபாய் செலவாகும். நமக்கு விருப்பமான டிசைனை கம்ப்யூட்டர் பிரின்ட் எடுத்து, பிளாக்ஸ் செய்கிறவர்களிடம் கொடுத்தால் போதும், அவர்கள் அச்சுகளைத் தயார் செய்து கொடுப்பார்கள்.

மொத்தமாக 10,000 ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலைத் தொடங்கலாம்.

நீங்களும் செய்யலாம்: கலம்காரி பிளாக் பிரின்ட்டிங் - அருணா

என்ன சிறப்பு?

கலர் காம்பினேஷன்தான் இதில் ஹைலைட். இயற்கையான பொருள்களைக் கொண்டு சாயம் ஏற்றுவதால், இந்த நிறம்தான் வரும் என்று துல்லியமாகச் சொல்ல முடியாது. கலவையின் தன்மைக்கேற்ப, நீங்கள் எதிர்பார்க்காத வேறொரு கலர் கிடைக்கும். அது நீங்கள் நினைத்தைவிடவும் அழகான கலராகவே இருக்கும். சாயமேற்றுகிற இந்த வேலையே சுவாரஸ்யத்தைக் கொடுக்கும்.

சேலை, சல்வார், டாப்ஸ், ஸ்கர்ட், குழந்தைகளுக்கான உடைகள், ஆண்களுக்கான சட்டைகள், திரைச்சீலைகள் என எல்லாவற்றிலும் டிசைன் செய்யலாம். கலம்காரி வேலைப்பாடென்பது காலம்காலமாகத் தொடர்ந்து வருகிறது. சமீப காலங்களில் அதை வணிகப்படுத்தும் வேலையில், கெமிக்கல் சேர்த்துச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அசல் கலம்காரி வேலைப்பாடு என்பது இயற்கையான பொருள்களைக் கொண்டுதான் செய்யப்படும். சென்னையில் கலாக்ஷேத்ரா, ஆந்திராவில் காளஹஸ்தி மற்றும் மச்சிலிப்பட்டினம் போன்ற இடங்களில் மட்டும் இன்னும் இயற்கை முறையில் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த முறையில் பிரின்ட் செய்யப்பட்ட உடைகளை அணிந்து வெளியே செல்லும்போது, உடலில் உஷ்ணம் ஏறாது. சரும நோய்கள் வராது. சாயங்கள் ஏற்படுத்தும் ஒவ்வாமையை இவை ஏற்படுத்துவதில்லை. திரைச்சீலைகள் பயன்படுத்தும்போது, வீட்டுக்குள் வெப்பம் ஊடுருவுவது தடுக்கப்படும்.

நீங்களும் செய்யலாம்: கலம்காரி பிளாக் பிரின்ட்டிங் - அருணா

ஒரு நாளைக்கு எத்தனை சேலைகளில் பிரின்ட் செய்யலாம்?

ஓர் உதவியாளர் மட்டுமே போதும். சுலபமாக ஒரு நாளைக்கு ஐந்து சேலைகள் வரை பிரின்ட் செய்ய முடியும்.

விற்பனை வாய்ப்பு? லாபம்?

சேலைகளுக்குப் போடுவதென்றால், பிளெயின் சேலையை 400 ரூபாய்க்கு வாங்கலாம். வேலைப்பாடுகளுக்கு 200 ரூபாய் செலவாகும். நமக்கு 600 ரூபாய் அடக்கம் என்றால், அதைக் குறைந்தது 1,000 ரூபாயிலிருந்து விற்கலாம். 50 சதவிகிதம் லாபம் நிச்சயம். காட்டன் உடைகளை விரும்பாத நபர்களே இருக்க மாட்டார்கள். வீட்டிலிருப்போர், வேலைக்குச் செல்வோர் என எல்லோருக்கும் காட்டனும் பிடிக்கும், கலம்காரியும் பிடிக்கும். பொட்டீக்கு களில் மொத்தமாக ஆர்டர் பிடிக்கலாம்.

பயிற்சி?

ஒரே நாள் பயிற்சியில் இயற்கை முறையில் கலம்காரி பிளாக் பிரின்ட்டிங் செய்யக் கற்றுக்கொள்ளலாம். கட்டணம் 500 ரூபாய் (திருவள்ளூரில்). குழுவாகச் சேர்ந்து கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு அவர்களது இருப்பிடத்திலேயே பயிற்சி அளிக்கப்படும்.

-சாஹா,  படங்கள்: ப.சரவணகுமார்