Published:Updated:

நெட் டாக்ஸ் !

மவுஸ் ஸிகா

பெண்கள் 'பின்ட்ரெஸ்ட்’ பக்கம்!

நெட் டாக்ஸ் !
##~##

 ஃபேஸ்புக், டிவிட்டர் முதலான சமூக வலைதளங்கள் போரடித்துவிட்டதா? 'சம்திங் டிஃபரென்ட்’ எதிர்பார்ப்பவர்களுக்கு விருந்தளிக்கிறது... 'பின்ட்ரெஸ்ட்’! இதைப் பற்றிய பேச்சு சூடுபிடித்துள்ளதைப் பார்த்தால், விரைவில் நம்மால் தவிர்க்க முடியாத தளமாகிவிடும் என்றே தோன்றுகிறது. பெண்களின் ராஜ்யம் கோலோச்சுவதால்... 'பெண்களின் ஃபேஸ்புக்’ என்ற செல்லப் பெயரையும் பெற்றுள்ளது.

தன்னை, 'இணையக் குறிப்புப் பலகை’ என்று அழைத்துக் கொள்ளும் இந்த தளத்தின் மூலம் அழகான புகைப்படங்கள் முதல் பயனுள்ள புத்த

கங்கள் வரை அனைத்தையும் நமக்கான பலகையில் குத்தி (pin),நண்பர்களுடன் பகிரலாம். ஃபேஸ்புக், டிவிட்டரில் உள்ள சில நல்ல அம்சங்கள் இதிலும் உள்ளன. அமெரிக்கப் பெண்களைத் தொடர்ந்து... மற்ற நாட்டினரையும் வசீகரித்துள்ள இந்த வலைதளத்தில் வலம் வர... www.pinterest.com

 ரத்த உறவுத் தோழர்கள்!

நெட் டாக்ஸ் !

அவசரமாக ரத்தம் தேவைப்படுபவர்கள் முதலில் நாட வேண்டிய வலைதளம் இது. ரத்த வகை, மாநிலம், மாவட்டம், நகரம.¢.. இந்த நான்கையும் பூர்த்தி செய்து suதீனீவீt கொடுத்தால், அடுத்த விநாடியே உங்கள் பகுதியில் உள்ள பிளட் டோனரை அடையாளம் காட்டும். ரத்த தான ஆர்வலர்கள் தங்களைப் பற்றிய விவரத்தை இந்த நம்பகமான தளத்தில் பதிவு செய்யலாம்.

ஐ.டி. இளைஞர்கள் சிலரது கூட்டு முயற்சியில் 2005-ம் ஆண்டு உருவான வலைதளம், இப்போது இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு உட்பட தென்னிந்தியாவில் குறிப்பிடத்தக்க ரத்த சேவை அளிக்கிறது. ரத்த உறவில் உங்களையும் இணைத்துக்கொள்ள: http://www.friends2support.org

 youtube 'அழகு’ ராணி!

நெட் டாக்ஸ் !

இணையத்தில் அழகுப் புயலாக உலா வரும் மிஷேல் பான் எனும் 24 வயது இளம்பெண்தான், பிரபல வீடியோ பகிர்வுத் தளமான யூடியூப்பின் ராணி! 'அதிக சந்தாதாரர்களைக் கொண்ட யூடியூப் பெண் பயனாளி’ சிறப்புடன் வீடியோக்களை அவ்வப்போது பதிவேற்றம் செய்யும் இவர், தன்னை அழகுக் கலை ஆசிரியர் என அழைத்துக் கொள்கிறார். தனது யூடியூப் பக்கத்தில் 'டெமோ’வாக பாடமும்¢ நடத்துகிறார். 19 லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களையும், 50 கோடிக்கும் மேலான வீடியோ பார்வைகளையும் கொண்ட அழகு ராணியின் யூடியூப் பக்கம் இதுதான்: http://www.youtube.com/MichellePhan

 வலைப் பூவரசி!

நெட் டாக்ஸ் !

'என்னை அதிகம் யோசிக்க வைத்த விஷயங்களை எனக்கு தெரிந்த எழுத்து நடையில் எழுதுகிறேன். இலக்கியம், இலக்கணம் தெரிந்தவளில்லை... குறைகளைச் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளும் இயல்பான மனதினள்!'

- இப்படி ஓர் அறிமுகத்துடன் வலைப்பதிவுகள் இட்டு வருகிறார், கௌசல்யா ராஜ். பசுமை, சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் தரும் இவரது எழுத்துகளில் சமூக அக்கறை மிகுந்துள்ளது. இந்த இதழின் 'வலைப் பூவரசி’ விருதுக்குரியவராகிறார். கௌசல்யா ராஜின் வலைப்பூ - http://www.kousalyaraj.com/

 உன் பேரைச்சொல்லும்போதே...

நெட் டாக்ஸ் !

நம்முடைய பெயரை, மற்றவர்கள் வாஞ்சையோடு எழுதும்போதும்... விளிக்கும்போதும் நம் நெஞ்சுக்குள் பூக்கும் பூக்களுக்கு இணையில்லைதானே! இந்த இணையப்பக்கத்தில் நுழைந்து உங்களுடைய பெயரை டைப் செய்துவிட்டு, ஹெட்

போனை மாட்டிக் கொண்டு (பொறுமையோடு) காத்திருங்களேன்... அடுத்த சில நொடிகளில் நீங்கள் மிதக்க ஆரம்பித்துவிடுவீர்கள். அழகான பாடல் ஒன்று ஒலிக்க... பூக்கள், விமானம், பலூன் என்று விதம்விதமாக உங்களுடைய பெயர் எழுதப்பட்டிருக்கும் காட்சி... ஆஹா... ஆஹா! http://www.obtampons.ca/apology

 'ஹினா’ அலை!

நெட் டாக்ஸ் !

'பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர, தனது பதவியை இழக்கிறார்,’ என தகவல் பரவ, இணையத்தில் ஆரம்பமானது கலகல கலாட்டா. டிவிட்டரில் ஒரு நாள் முழுவதும் இந்திய டிரெண்டிங்கில் முன்னிலை வகித்தார், ஹினா. 'அழகு அமைச்சரின் பதவியைப் பறிப்பது ஏமாற்றம் அளிக்கிறது’ என்பதில் தொடங்கி, 'பாகிஸ்தானின் இந்த முடிவால், அந்நாட்டுடனான இந்தியாவின் உறவில் விரிசல் ஏற்படும்’ என்பது வரை பல விதமான நையாண்டி குறுந்தகவல்கள் பறந்தன.

வெளியுறவு அமைச்சர் மாற்றப்படுவதாக வெளிவந்த தகவலை, பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் மறுத்த பின்புதான், டிவிட்டரில் 'ஹினா’ அலை ஓய்ந்தது!

நெட் டாக்ஸ் !