Published:Updated:

மகளிர் மேளா - 2012

வே.கிருஷ்ணவேணி படங்கள்: வீ.நாகமணி

##~##

''ஒருவேளை சோத்துக்கே வழியில்லாத நிலையில, புள்ளைங்கள எங்க படிக்க வைக்கிறதுனு நான் அழுது தீர்க்காத நாள் இல்லை. ஆனா, இன்னிக்கு என் புள்ளைங்க சந்தோஷமா ஸ்கூலுக்கு போயிட்டிருக்குதுங்க. எங்க குடும்பமும் சந்தோஷமா ஓடிட்டிருக்கு...''

- இப்படி பெருமை பொங்க பேசும் கனி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அங்கிருக்கும் காமதேனு மகளிர் சுயஉதவிக் குழுதான் இவரை ஏற்றிவிட்ட ஏணி!

இப்படி தமிழகம் முழுக்க இருக்கும் ஏணிகளால் ஏற்றம் பெற்றிருக்கும் பெண்கள் அனைவரும் சங்கமிக்கும் திருவிழா... 'சித்திரை கொண்டாட்டம் - 2012' என்கிற பெயரில் ஏப்ரல் 20 முதல் மே 20 வரை சென்னையில் நடக்கிறது.

மகளிர் மேளா - 2012

வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அமுதா ஐ.ஏ.எஸ். நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

''அழகழகான கலைப் பொருட்கள், கோடையைக் குளிர்விக்கும் கைத்தறி ஆடைகள், பெண்களுக்கான பல வகை ஆபரணங்கள், பாரம்பரிய விளையாட்டுப் பொருட்கள், பாரம்பரிய உணவுப் பொருட்கள்  கல்லூரி மாணவ/ மாணவிகள் பங்கேற்கும் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் என கலக்கலான நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.

மகளிர் மேளா - 2012
மகளிர் மேளா - 2012

 திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் மூலம் செயல்படும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என பலருக்கும் இங்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்ட அமுதா,

''இங்கே வாங்கும் பொருட்களை மட்டுமல்ல... சமுதாயத்தின் அடித்தட்டில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்தோம் என்கிற மனதிருப்தியையும் நீங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியும்'' என்றார் நெகிழ்ச்சியாக !