ஸ்பெஷல் 2
ரெகுலர்
ஸ்பெஷல் 1
Published:Updated:

அழமைக் குலைக்குது பரபர லைஃப் ஸ்டைல் !

ம.மோகன், படம் : கே.கார்த்திகேயன்

##~##

''இருபது வருடங்களுக்கு முன்பிருந்த லைஃப் ஸ்டைல், இப்போது இல்லை. வேலை, உணவு என்று எல்லாவற்றிலும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டுவிட்டது. ஒரு வேளை உணவைக்கூட, ஆற அமர உட்கார்ந்து சாப்பிடக்கூட முடியாத அளவுக்கான பரபரப்பான இந்த வாழ்க்கைச் சூழல்தான், நம்முடைய அழகின் பொலிவையே கேள்விக்குள்ளாக்கிக் கொண்டுஇருக்கிறது! ஆம், பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக... மன அழுத்தம், செரிமானப் பிரச்னை, மூளைச் சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் உடம்பில் முதலில் பாதிக்கப்படும் பாகங்கள் சருமம் மற்றும் கேசம்!''

- 'வீ - கேர்’ நிறுவனத்தின் சேர்மனும், சர்டிஃபைடு ட்ரைக்காலஜிஸ்ட்டுமான பிரபா ரெட்டி, அக்கறையோடு முன் வைக்கும் நிகழ்கால உண்மை இது.  

அழமைக் குலைக்குது பரபர லைஃப் ஸ்டைல் !

கடந்த 15 வருடங்களாக பியூட்டி கேர் குறித்த நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அதில் முறையே வெற்றியும் கண்டு வருபவர் இவர். அழகுக் கலையின் புதிய பரிமாணங்கள், தற்போதைய சூழலுக்கு அவற்றை உட்படுத்திக்கொள்ளும் சூத்திரங்கள் என்று நிறைய பேசினார்.

'

அழமைக் குலைக்குது பரபர லைஃப் ஸ்டைல் !

'கெமிக்கல் புராடக்ட்டுகள் எல்லாம் அந்த நேரத்துக்கான தீர்வை மட்டுமே கொடுக்கும். பின் நாட்களில் அதனால் பல பிரச்னைகள் உண்டாகும். இதற்காகத்தான் 'டயட்டரி சப்ளிமென்ட்' (Dietary supplement) என்று அழைக்கப்படும் இயற்கை கூறுகள் வழியே தயாரிக்கப்பட்ட புராடக்ட்டுகளைக் கொண்டு சருமம் மற்றும் கேச பராமரிப்பு முறைகளைக் கையாளலாம்.

மூலிகைகளிலிருந்து பிரித்து எடுக்கப்படும் கூறுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் 'காஸ்மோசியூடிகல்ஸ்’ மற்றும் 'மீசோதெரபி’ புராடக்ட் ட்ரீட்மென்ட், சருமப் பொலிவுக்கும் முடி வளர்ச்சிக்கும் பயனளிக்கும். சருமத்துக்குள் நுழைந்து பலனளிக்கும் 'நானோ காஸ்மெடிக்ஸ் ட்ரீட்மென்ட்’, எப்போதும் இளமையை தங்க வைக்கும். கேச பிரச்னைகளுக்குக் கைகொடுக்கின்றன 'ஸ்டெம்செல் தெரபி’ மற்றும் 'பெட்டைட் தெரபி’ அழகு தொழில்நுட்பங்கள். 'பியூட்டி ஃப்ரம் இன்னர்’ ட்ரீட்மென்ட், உடலுக்கு உள்ளே உட்கொள்ளும் நியூட்ராசியூட்டிகல்ஸ் மூலம் அழகைப் பராமரிக்கும். இவற்றில் எல்லாம் கெமிக்கல் புராடக்ட்ஸ் எதுவுமே சேர்க்கப்படாமல், முழுக்க மூலிகைப் பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வெற்றி கண்டிருப்பதே, இந்த நவீன உலகின் அழகுக்கான அழகு!'' என்று சான்றிதழ் தருகிறார் பிரபா ரெட்டி!