ஸ்பெஷல் 2
ரெகுலர்
ஸ்பெஷல் 1
Published:Updated:

கேபிள் கலாட்டா - ஒன்ஸ்மோர் ஷாப் !

ரிமோட் ரீட்டா படங்கள்: வீ.நாகமணி, சொ.பாலசுப்ரமணியன்

##~##

பிஸினஸ் சிறப்பிதழாச்சே... ஒரு பக்கம் நடிப்பு, இன்னொரு பக்கம் பிஸினஸ்னு கலக்கிட்டு இருக்கிற சில சேனல் ஸ்டார்களைப் பிடிக்கறதுதான் ரீட்டாவோட பிளான்!

'கலைஞர் டி.வி 'பொக்கிஷம்’ தொடர்ல 'கண்மணி’ ரோல்ல கலக்குற மீரா கிருஷ்ணா, 'அடிக்ட் ஆன் கெட்டிங் இன்’னு ஒரு ஷாப் வெச்சுருக்காங்க!’னு சோர்ஸ் மூலம் முதல் தகவல் அறிக்கை கிடைக்க, மீராவுக்கு ட்ரிங் ட்ரிங்.

கேபிள் கலாட்டா - ஒன்ஸ்மோர் ஷாப் !

'ஹலோ ரீட்டா! நீ நேரா கோடம்பாக்கத்துல இருக்கிற நம்ம 'ஷாப்’க்கே வந்துடு’னு மீரா வழி சொல்ல, நேர்ல ஆஜர்... ரீட்டா!

''பொக்கிஷம் தொடர் ரொம்பவே ஸ்மார்ட் ரீட்டா. திருச்செல்வம் சாரோட டைரக்ஷனாச்சே... அன்பு, பாசம்னு ஒவ்வொரு எபிசோட்லயும் சென்டிமென்ட் கச்சேரிதான்!''னு சிரிச்சவங்ககிட்ட, காதல் கணவரான கொரியோகிராஃபர் சிவக்குமார், ரெண்டு வயசுப் பையன் தன்வந்த் ரெண்டு பேரையும் நலம் விசாரிச்சுட்டு, பிஸினஸ் பத்தி கேட்டேன்.

''அடிக்ட் ஆன் கெட்டிங் இன் - பேர்லயே புரிஞ்சிருக்குமே! இங்க ஒருமுறை ஷாப் பண்ற கஸ்டமருக்கு, அடுத்தமுறை ஷாப்பிங்னு கிளம்பினாலே... எங்க ஷாப் ஞாபகத்துக்கு வந்துடணும்! அந்தளவுக்கு அட்ராக்ஷனோட லேடீஸ் டிரெஸ்ஸஸ், காஸ்மெடிக்ஸ், பேக்ஸ், ஷூஸ்னு பல வெரைட்டிகளை அடுக்கி வெச்சுருக்கோம். பேங்காக், பாம்பேனு ஃபேஷனுக்குப் பேர் போன இடங்கள்லதான் எங்க ஷாப்-க்கு பர்ச்சேஸ் செய்றோம். சீரியல்ல நான் போட்டு வர்ற என்னோட சாரீஸ், காஸ்மெடிக்ஸ் எல்லாம், என் ஷாப் அயிட்டம்ஸ்தான். அதோட மட்டுமில்லாம... என்னோட சேனல் ஏரியா ஃப்ரெண்ட்ஸ், எங்க ஊர் கோட்டயத்துல இருக்கற ஃப்ரெண்ட்ஸ்னு பலருக்கும் எங்க ஷாப்ல இருந்துதான் காஸ்மெடிக்ஸ் டெலிவரி செய்றேன்''னு படபடத்தவங்க,

''ஷூட் இல்லாத நாட்கள்ல என்னை இங்க பார்க்கலாம். பிஸினஸ் ரொம்பவே சூப்பரா போகுது. கணவரும், அவரோட சிஸ்டரும்தான் என்னை விடவும் சமர்த்தா, பொறுப்பா ஷாப்பை கவனிச்சிக்குறாங்க. ஒரு பக்கம் நடிப்பு, இன்னொரு பக்கம் பிஸினஸ்னு டிராவல் செய்றது... ஒரு த்ரில்லாதான் இருக்கு!''னு சொன்ன மீரா, 'எக்ஸ்க்யூஸ் மீ...’ சொல்லிட்டு கஸ்டமர் ஒருவரை அட்டெண்ட் பண்ணப் போனாங்க!

பிஸினஸ் ஃபர்ஸ்ட்!

சகலகலாவல்லி!

விஜய் டி.வி 'கனா காணும் காலங்கள்’ தொடர்ல கவிதைகளை நேசிக்கிற தேவதையா வர்ற திவ்யா, பெசன்ட் நகர்ல 'டான்ட்ரா’ங்கற பேர்ல, ஏர் ஃபிரெஷ் டிசைனிங் கம்பெனியை நடத்திக்கிட்டிருக்காங்க. பைக், கார் இதுலயெல்லாம் டிசைனிங் ஸ்டிக்கர் யூஸ் பண்ணுவாங்க. ஸ்டிக்கர் இல்லாம, அப்படியே பைக், கார்கள்ல தேவைப்பட்ட இடத்துல டிசைனை உருவாக்கறதுதான் ஏர் ஃபிரெஷ் டிசைனோட ஸ்பெஷல்.

கேபிள் கலாட்டா - ஒன்ஸ்மோர் ஷாப் !

''சவுத் இண்டியாவிலேயே ஏர் ஃபிரெஷ் டிசைனிங்ல வர்ற முதல் ஷாப் ரீட்டா இது. இதை நான் சிரமமில்லாம ரன் பண்றதுக்குக் காரணம், துணையா நிற்கற என் காதல் கணவர் ரேவன். அவரை உனக்குத் தெரியும்தானே?''னு கேட்டுக்கிட்ட திவ்யா,

''இப்ப விஜய் டி.வி-யில நிறைய புரோகிராம் டெஸ்க் ஜாக்கியா இருக்கார். 'ஈசன்’ படத்துல வர்ற கிளப் சாங் செட், அவரோட வொர்க்தான்'' என்று கணவர் புகழ் பாடிவிட்டு,

''பிஸினஸுக்கு நல்ல மூவ் இருக்கு ரீட்டா. பைக், கார்னு டிசைன் செய்துக்க வர்றவங்க எல்லாம், 'இப்படி ஒரு டிசைனிங் கம்பெனி நம்ம சென்னையில இல்லையேனு ஏங்கிக்கிட்டிருந்தோம். அதை இப்போ 'டான்ட்ரா’ நிறைவேத்திருக்கு!’னு சந்தோஷமா பாராட்டுறாங்க.

ஆக்டிங், பிஸினஸ் ரெண்டையும் பார்த்துக்கிறதோட, கடந்த அஞ்சு வருஷமா 'நோக்கியா’ கம்பெனியிலயும் வேலையில் இருக்கேன். அதுக்காக டைம் மேனேஜ்மென்ட்டுக்கு எல்லாம் நான் எப்பவும் சிரமப்பட்டதில்ல. பிஸியா இருக்குற வரைக்கும்தான், போர் இல்லாம லைஃப் மூவ் ஆகும்!''னு அழகா சிரிச்சாங்க திவ்யா!

சூப்பர்யா!

கோல்ட் மெடலிஸ்ட் ராகவ்!

''போன வருஷம் என்னோட 'நஞ்சுபுரம்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பார்த்தது உன்னை!''னு உரிமையோட வரவேற்ற ராகவ், எப்பவும் ஃப்ரெண்ட்லி அண்ட் ஜாலி டைப்!

கேபிள் கலாட்டா - ஒன்ஸ்மோர் ஷாப் !

''சன் டி.வி-யில ஒளிபரப்பாகிற 'பிள்ளை நிலா’ தொடர், நட்புக்காக செய்த ரோல் ரீட்டா. மொத்தமா 14 எபிசோடுகள் ஆக்ட் செய்தேன். மத்தபடி ராஜ் டி.வி-யில 'ரஜினியின் பஞ்ச் தந்திரம்’னு ஒரு புரோகிராம். ரஜினியோட படங்கள்ல வந்த பஞ்ச் டயலாக், அவரோட லைஃப் ஹிஸ்டரி ரெண்டையும் வெச்சுக்கிட்டு, கலக்கற புரோகிராம். அதுக்கு நான்தான் ஆங்கர். அப்புறம்... ஜெயா டி.வி. 'லிட்டில் மாஸ்டர்’ புரோகிராமுக்கு ஜட்ஜ்னு, ஹோம் மீடியாவோட டச் இல்லாம இந்த ராகவ்வால இருக்க முடியாதே!''

''சரி... உங்களோட கார்ப்பரேட் கம்பெனி டிரெயினர் பிஸினஸ் எப்படிப் போகுது..?''

''ஓ.... 'பர்பிள் பாரடிம் வித் மீடியா ஐடியா’ ஆபீஸ் பத்திக் கேட்கிறியா..?''னு ஆர்வமானவர்,

''பேசிக்கலா நான் கோல்ட் மெடல் சாப்ஃட்வேர் இன்ஜினீயராச்சே... அந்தத் திறமையை விட்டுட முடியுமா? அதனால மாசத்துல குறைஞ்சது ஐந்து நாட்களாவது பொலாரிஸ், ஐனாடிக்ஸ்னு நிறைய ஐ.டி. கம்பெனிகளோட வொர்க்கர்ஸுக்கு டிரெயினிங் கிளாஸ் எடுக்கப் போயிடுவேன் ரீட்டா. கம்பெனி மெயின்டனன்ஸ் தொடங்கி மேனேஜர் - எம்ப்ளாயி ரிலேஷன்ஷிப், கொடுக்கப்பட்ட வேலைகளை எப்படி லகுவா முடிக்கிறதுனு எல்லாம் கற்றுத் தருவோம். செட்ல ஒரு சின்ன கேப் கிடைச்சாலும் லேப்டாப்பை எடுத்து வெச்சுகிட்டு 'ஸ்கிரிப்ட் வொர்க்’ல இறங்கிடுவேன். 'எப்டிடா..?!’னு ஃப்ரெண்ட்ஸ் கிண்டல் அடிப்பாங்க. படிச்ச படிப்பை வீணாக்கக்கூடாதேனு இறங்கின பிஸினஸ்தான் இது. கிட்டத்தட்ட 30, 40 எம்ப்ளாயிஸை வெச்சு கைடு செய்றதுல அவ்ளோ திருப்தி!''

- ராகவ் முகத்தில் அப்படி ஒரு உற்சாகம்!

கலக்குங்க!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா - ஒன்ஸ்மோர் ஷாப் !

150

வாழ்க டிஸ்கவரி!

''டிஸ்கவரி தமிழ் சேனலில் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் 'ஃபேக்டரி மேட்’, ’மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சிகள் அற்புதமாக இருக்கின்றன. சமீபத்தில், 'ஃபேக்டரி மேட்’ நிகழ்ச்சியில்... காபி கொட்டையில் இருந்து பொடி தயாரிப்பதை நேரடியாக பார்த்தது... மனதுக்கு இனிமையாக இருந்தது. அதைப்போலவே கண்ணாடி தயாரிப்பதை அந்த தொழிற்சாலையில் இருந்து நேரடியாக ஒளிபரப்பினார்கள். மூலப்பொருட்களில் இருந்து எப்படி கண்ணாடியாக வெளிவருகிறது என்பதை காட்டியது... பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரையும் ஈர்த்தது. அறிவை வளர்க்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடரட்டும்'' என்று பூரிப்போடு சொல்கிறார் வேலூரைச் சேர்ந்த டி.விஜயலட்சுமி.

மனம் நிறைக்கும் காலைத் தென்றல்!

''பொதிகை தொலைக்காட்சியில் காலை ஏழு மணியளவில் 'காலைத் தென்றல்’ என்ற நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது. அப்போது பறவைகள், மிருகங்கள், காடு, ஏரி, நடனம், இயற்கைக் காட்சி, ஆலயம்... என விரியும் காட்சிகள்... சூப்பர்! காலையிலேயே இத்தனை நல்ல விஷயங்களைப் பார்ப்பது... மனதுக்கு நிறைவாகவும், பெருமையாகவும் இருக்கிறது'' என்று ரசித்து சொல்கிறார் சாத்தூரைச் சேர்ந்த சண்முகத்தாய் செல்லையா.

இந்தக் காட்சி தேவையா?

''விஜய் டி.வி-யில் வரும் '7 நீ’  என்கிற மெகா தொடரில், பள்ளியில் படிக்கும் தங்கள் மகளை ஆசிரியர் அடித்துவிட்டார் என்பதற்காக, ஆசிரியரை பெற்றோர் அடிப்பதாகக் காட்டினார்கள். சில பல ஆண்டுகளாகவே... ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான ரிலேஷன்ஷிப் சுமுகமாக இல்லாத நிலையில்... இப்படிப்பட்ட காட்சிகள், குழந்தைகளின் மனதை மேலும் கெடுப்பதாகவே அமையும். இதுபோன்ற காட்சிகள் இனி இடம் பெறாமல் தொடரின் இயக்குநர் பார்த்துக் கொள்ளவேண்டும்'' என்று அட்வைஸ் செய்கிறார் கோவாவைச் சேர்ந்த பிரேமா குமார்.