ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
Published:Updated:

ஒரு வாரிசு உருவாகிறது!

ம.மோகன் படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

##~##

''நவீனம், வளர்ச்சி என்கிற பெயர்களில் விளையும் மாற்றங்களால, தொன்மையான பல நடைமுறைகளை அறிந்தும், சமயத்துல அறியாமலேயும் இழந்துட்டு வர்றோம். அதுல நாடகமும் ஒண்ணு. அது முற்றிலும் காலியிடமா ஆகிடக் கூடாதுங்கற அக்கறைதான் இந்த 'சக்தி’!'' எனும் மதுவந்தி அருணின் வார்த்தைகளில் திடம்! ஒய்.ஜி.மகேந்திரனின் மகளான மதுவந்தி, கடந்த அக்டோபர் 4 முதல் 7 வரை சென்னை, ராமராவ் கலா மண்டபத்தில், 'சக்தி’ என்கிற பெயரில் மேடை நாடகத்தை இயக்கி, நடித்திருந்தது... 'ஸ்டேஜ் ஷோ' காதலர் களுக்கு பிளஸன்ட் சர்ப்ரைஸ்!

''சின்ன வயசுல அப்பாவோட மேடை நாடகங்கள்ல நானும் அப்பப்போ நடிச்சுட்டு இருந்தேன். படிப்பு, திருமணம், குழந்தை, நான் நடத்தும் பள்ளிக்கூடம்னு அடுத்தடுத்த கமிட்மென்ட்களால... நாடகத்துல முழுமையா ஈடுபட முடியாம போயிடுச்சு. கிட்டத்தட்ட 17 வருடங்கள் கழிஞ்சுடுச்சு. தாத்தா (ஒய்.ஜி. பார்த்தசாரதி), அப்பா என்று தலைமுறை தாண்டி திறம்பட தழைத்துக் கொண்டிருக்கும் எங்களோட 'யு.ஏ.ஏ' நாடக ட்ரூப்போட 60-வது வருட கொண்டாட்டத் தருணத்துல திரும்பவும் களம் புகுந்திருக்கேன். ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணியோட 'ரிவால்விங் ஸ்டேஜ்’, அனிருத்தோட  ('கொல வெறி புகழ்!’) மியூஸிக்னு புதுமையைக் கலந்து, இந்தத் தலைமுறை விரும்பும் நாடகமா 'சக்தி’யைக் கொடுத்திருக்கோம்!'' என்ற மது,

ஒரு வாரிசு உருவாகிறது!

''50 வருடங்களுக்கு முன் எல்லோரையும் கவர்ந்த 'வெயிட் அன்டில் டார்க்’ என்ற ஆங்கில படத்தின் தழுவல்ல பிறந்த கதை இது. பார்வையற்ற ஒரு பெண்ணை மையமாக வைத்து அவள் எப்படி ஏமாற்றப்படுகிறாள், அதிலிருந்து மீளும் சாதுர்யம்னு கதை சுழலும். 20 வருடங்களுக்கு முன் அப்பாவே இதை இயக்கி, நடிச்சிருக்கார். அப்பாவுக்கு என் குருதட்சணையா இந்த நாடகத்தை சமர்ப்பிக்கிறேன்!'' என்ற மதுவந்தியை... நிகழ்ச்சிக்கு வந்த லதா ரஜினிகாந்த், ஏவி.எம். சரவணன், சிநேகா - பிரசன்னா இப்படி பல செலிப்ரிட்டீஸும் பாராட்டி தள்ளினர்!