எஸ்.ஷக்தி படம்: வி.ராஜேஷ்
##~## |
''டீச்சிங் மாதிரி, டெய்லரிங் மாதிரி நடிப்பும் ஜஸ்ட் ஒரு புரொஃபஷன் அப்படிங்கிற உண்மையை புரிஞ்சுகிட்டா... எந்த நடிகையோட திருமண வாழ்க்கையும் ஃபெயிலியர் ஆகாது. இந்த விஷயத்துல நான் செம லக்கி!''
- செமகுதூகலமாகப் பேசுகிறார் நவ்யா நாயர்.
மலையாளத் திரை உலகின் பப்ளி கதாநாயகி நவ்யா நாயர். இரண்டு முறை கேரள அரசின் 'சிறந்த நடிகை’ விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியவர். பின்னே... தமிழ், கன்னடம் என தடம் பதித்து பரபரவென நடித்துக் கொண்டிருந்தவர், திடீரென திருமணம் செய்துகொண்டார். ஒன்றரை வருடங்களுக்கு முன், 'எனக்கு க்யூட்டா குட்டிக் கண்ணன் பிறந்திருக்கான்!’ என்று இணையதளத்தில் பூரித்தார்.
கிட்டத்தட்ட சினிமா உலகிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் குதூகலமாக செட்டிலாகிவிட்டார் என்று கேரள கலாரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் 'நவ்யா ஈஸ் பேக்!’ என்று மீண்டும் நடிக்க வந்திருப்பது 'ஸ்வீட் ஷாக்’. நடிகர் லால் ஜோடியாக 'ஸீன் ஒண்ணு நம்முடே வீடு’ படத்துக்காக ஒட்டபாலத்தில் டான்ஸ் கட்டியவரைச் சந்தித்தோம்.

திருமணம் செய்துகொண்ட நடிகைகளை அக்கா, அண்ணி கேரக்டர்களுக்கு புக் செய்வதுதான் திரையுலகின் எழுதப்படாத விதி. ஆனால், நவ்யா நிலை அப்படியில்லை. செகண்ட் ரவுண்டும் சிறப்பான ஓபனிங்தான்! இன்னொன்று, நடிகைகள் எத்தனை ஸ்லிம் ஸ்ட்ரெக்சராக இருந்தாலும்... திருமணம் ஆனபிறகு, அதிலும் கர்ப்ப காலத்தோடு வெயிட் போட்டு செம குண்டூஸ் ஆகிவிடுவார்கள். ஆனால், மலையாள 'பாண்டிபடா’, தமிழ் 'அழகிய தீயே’ படங்களில் பார்த்ததுபோல், இப்போதும் ஃப்ரெஷ் பப்ளிதான் நவ்யா!
''எப்படி..?!''
''தமிழ்ல இப்பவும் எனக்கு வரவேற்பு கொடுக்கறதுக்கு முதல்ல தேங்ஸ் ஏட்டா. என்னைப் பார்க்கிற எல்லாருமே இதையேதான் சொல்றாங்க, 'நீங்க இன்னமும் பழைய நவ்யாவா ஃபரெஷ்ஷா இருக்கீங்களே!’னு ஆச்சர்யப் படுறாங்க. உண்மையைச் சொன்னா நம்புவீங்களா..? வெயிட் கன்ட்ரோல் பண்ண டயட்லகூட நான் இருக்கறதில்ல. வழக்கம்போல பிடிச்ச அயிட்டங்கள வளைச்சு நொறுக்கிட்டு தான் இருக்கேன். ஒருவேளை... டான்ஸ்ல இருந்து விலகாம வாழ்ந்திட்டிருக்கறது இதுக்கு காரணமா இருக்கலாம்! சந்தோஷமோ, சின்ன சோகமோ எதுவானாலும் ரிலாக்ஸ்ட் ஆகறது... டான்ஸ்லதான். புருவங்கள் ஆரம்பிச்சு, பாதங்கள் வரைக்கும் வளைஞ்சு, நெளிஞ்சு ஒரு தவம் மாதிரி ஆடுறது என்னை இன்னமும் பழைய பொலிவோட வெச்சுருக்குதுனு நம்புறேன். அதுதான் அம்மாவான பிறகும் ஹீரோயின் சான்ஸுக்கான ரகசியமோ!''
- விழிகள் அகன்று அலைகின்றன வார்த்தைகளுக்கு ஏற்ப.

''ரொம்ப சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமைஞ்சுட்டாலும் நாம எப்பவும் நல்லாவே இருப்போம். என்னோட திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரைக்கும் சிம்பிளா சொல்றதுனா, ஆல் இஸ் வெல். பர்ஃபெக்ட் கணவர் சந்தோஷ் மேனன், செம வால் பையன் சாய்கிருஷ்ணானு நியூமும்பையில லைஃப் க்யூட்டா போயிட்டிருக்குது.
மேரேஜ் ஆன புதுசுலயே 'நல்ல ரோல் கிடைச்சா பண்ணிக்கோ. நோ இஷ்யூ’ அப்படினு சந்தோஷ் சொன்னார். நான்தான் ஒதுங்கியே இருந்தேன். ஏசியா நெட் டி.வி-யில 'மஞ்ச் டான்ஸ் டான்ஸ்’னு ஒரு டான்ஸ் ஷோவுல சீஃப் ஜட்ஜா வந்துட்டுப் போனேன். கொஞ்ச நாளைக்கு முன்ன நல்ல கதை ஒண்ணு சொல்லி மலையாள ஃபீல்டுல இருந்து அழைப்பு. 'ஜமாய்ச்சுட்டு வாடா!’னு பச்சைக் கொடி காட்டிட்டார்

சந்தோஷ். ஆனா... எனக்கு அவரும், பையனும்தான் முதல்ல, அப்புறம்தான் எல்லாமே!'' என்றவர், தன் ஆப்பிள் போனில் சாயின் குறும்பு வீடியோக் களை எடுத்து நம்மிடம் காட்டும்போது இன்னும் மலர்கிறார்.
''பொதுவா ஹிட் நடிகைகளோட மேரேஜ் லைஃப் ஃப்ளாப் ஆயிடுறது வருத்தம். உங்க அன்பு இல்லற ரகசியம் என்ன..?'' என்றால், கன்னம் சிவக்கிறார்.
''நடிகை கிரீடத்தை எல்லாம் கழட்டி வெச்சுட்டு, 'நம்ம பொண்ணு, நாம பார்க்கிற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக் கிறா!’ என்ற சந்தோஷத்தை என் பெற்றோருக்கு கொடுத்து, நான் திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வெச்சேன். அதேபோல நடிப்புங்கிறது நவ்யாவோட புரொஃபஷன் அவ்வளவுதான், மத்தபடி அவளும் சாதாரண பொண்ணுதான்னு அவரும் புரிஞ்சுக்கிட்டார். அவங்க வீட்டுல நடிகையா என்னை பார்க்கறதில்லை. நவ்யா அண்ணி, நவ்யா அக்கா, நவ்யா மருமகள்னு நான் அவங்க வீட்டுப் பொண்ணு. குடும்பப் பெரியவங்ககிட்ட ரொம்ப மரியாதையா நடந்துக்குறேன். சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமைய இந்த அடக்கமும், அன்பும், பொறுப்பும் போதுமே... வேறென்ன வேணும்?!''
- பெரிய கண்கள் விரியக் கேட்கிறார்!
அதானே... வேறென்ன வேண்டும் !