ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
Published:Updated:

அசத்தல் அக்ஷயம் !

சா.வடிவரசு படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

 ##~##

''உலக அளவில் 90 நாடுகள் பங்கேற்ற இசைப் போட்டியில வெண்கலம் வென்றது... ரொம்ப பெருமையா இருக்கு!''

- 'அக்ஷயம்’ குழுப் பெண்களின் குரலில் இசையும் மகிழ்வும்!

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச அளவில் நடக்கும் உலக சேர்ந்திசைப் போட்டி (World Choir Games), இந்த ஆண்டு அமெரிக்காவின் சின்சினாட்டியில் நடைபெற்றது. 90 நாடுகள், 400 குழுக்கள், 10,000 பங்கேற்பாளர்கள் என நடந்த அந்த பிர மாண்ட போட்டியில், நாட்டுப்புறப் பாடல்கள் (Folklore) பிரிவில் வெண்கலம் வென்று வந்திருக்கிறது சென்னையைச் சேர்ந்த 'அக்ஷயம்’ இசைக் குழு. அந்த வெற்றியாளர்களை இசை மிதந்த ஒரு மாலையில் சந்தித்தோம்.

குழுவை வழிநடத்தி வரும் சுதா ராஜா, அறிமுகம் பேசினார். ''பேங்க் ஆஃப் பரோடாவுல வேலை செய்யும் இசை ஆர்வலர்கள் சேர்ந்து, 2004-ல் தொடங்கின அமைப்புதான் இந்த அக்ஷயம். ஆர்வமுள்ள வெளிநபர்களும் பிறகு இதில் இணைஞ்சாங்க. பக்திப் பாடல்கள், தேச விழிப்பு உணர்வுப் பாடல்கள்னு பல நிகழ்ச்சிகள் நடத்தி கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்தோம்.

கடந்த முறை நடந்த சேர்ந்திசைப் போட்டி பத்தின செய்தியை நியூஸ்பேப்பர், மேக ஸீன்ஸ்ல எல்லாம் படிச்சப்போ, 'அடுத்தமுறை நாமும் உலக அளவிலான இந்தப் போட்டியில் கலந்துக்கணும்!’னு குழுவில் முடிவெடுத்தோம். அதன்படியே விண்ணப்பிச்சோம். ஸ்பான்ஸர் ஷிப் கூட எதிர்பார்க்காம... ஒவ் வொருத்தரும் சொந்த செலவில் அமெரிக்கா கிளம்பினோம்!'' எனும் சுதா ராஜா, ஓர் இசைப்பள்ளியை நடத்திவருகிறார்.

அசத்தல் அக்ஷயம் !

''இதுவரைக்கும் நடந்த உலக சேர்ந்திசைப் போட்டியில தமிழகத்துல இருந்து யாருமே கலந்துகிட்டதில்ல. அதுலயும் 'அடல்ட்’ பிரிவுல இந்தியாவுல இருந்து கலந்துக்கிற முதல் குழு வும் நாங்கதான். அந்தப் பரவசமும் பொறுப்பும் எங்ககிட்ட நிறைய இருந்துச்சு. 15 பேர் கொண்ட எங்க குழுவில், 11 பெண்கள், நான்கு பேர் மட்டுமே ஆண்கள்.

எங்களுக்கு கொடுக்கப்பட்டது 20 நிமிடங்கள். அந்த நேரத்துக் குள்ள தமிழில் பாரதியாரின் 'பெண்மை வாழ்கவென’ பாடல் மற்றும் முத்தையா பாகவதரின் 'வர்ணம் ஸ்வரம்ஸ்’ பாடல், மலை யாளத்தில் பி.பாஸ்கரின் 'கற்றலா ருனு’ பாடல், பெங்காலியில் ரவீந்திரநாத் தாகூரின் 'ஆனோந்தோ லோகே’ பாடல்னு நான்கு பாடல்களை பாடினோம். முத்தையா பாகவதரின் பாடலுக்கு அரங்கமே எழுந்து நின்னு கைதட்டினப்போ, எங்கள் கண்கள்ல ஆனந்தக் கண்ணீர்'' என்றார் லஷ்மி.

தொடர்ந்து பேசிய பத்மா, ''முடிவுகள் அறிவிக்கறதுக்கு முதல் நாள், ஒரு ஹோட்டலுக்குப் போயிருந்தோம். அங்கே எங் களைப் பார்த்த அந்த நாட்டைச் சேர்ந்த வயதான பெண்மணி ஒருவர், 'புடவை எல்லாம் கட்டி யிருக்கீங்க. இந்தியாவுல இருந்து தான் வந்திருப்பீங்கனு நினைக்கிறேன்...’னு ஆர்வமா பேச ஆரம்பிக்க, நாங்க அமெரிக்கா வந்த விவரத்தை சொன்னோம். 'எனக்காக ஒரு பாட்டுப் பாடுங் களேன்...’னு கேட்க, நாங்களும் பாடினோம். முடிச்சப்போ கண்கள் தளும்ப எங்களை கட்டிப்பிடிச்ச அந்தப் பெண்மணி, 'இப்படி ஒரு பாட்டை நான் கேட்டதில்ல. நிச்சயமா நீங்க பரிசு வாங்குவீங்க!’னு ஆசீர்வதிச்சாங்க. அடுத்த நாள் எங்களுக்கு வெண்கலப் பதக்கம் கிடைச்சுருக்கிறதா அறிவிக்க, சந்தோஷத்துக்கு அளவேயில்ல!'' என்றார் புன்னகையுடன்.

''போட்டிக்காக நாங்க சின் சினாட்டி நகரத்தில் தங்கியிருந்த 12 நாட்களும் மறக்க முடியாதவை. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்த தடபுடல் ஏற்பாடுகள் ஒருபுறம் மலைக்க வைக்க, சிட்டி யில எங்க பார்த்தாலும் போட்டிக் காக வந்திருந்தவங்க பாட்டுப்பாடி பிராக்டீஸ் செய்துட்டே இருந்தது ரசனையா இருந்தது. போட்டிக் காகப் போன நாங்க எல்லாருமே வொர்கிங் விமன்தான். இந்த ட்ரிப் எங்களுக்கு நல்ல ரிலாக்ஸேஷன் தந்ததோட, பெருமையும் தேடித் தந்திருக்கு!'' என்றார் விஜயஸ்ரீ.

''இந்தப் பரிசை நாங்க வாங்கின துக்குக் காரணம் எங்களோட கடின உழைப்புடன், எங்க குடும்பத்தோட ஒத்துழைப்பும்தான். அவங்க எல்லா ருக்கும் எங்க நன்றிகள். இன்னும் பல இசை மேடை வசப்பட எங்கள் பயிற்சி தொடர்ந்துட்டு இருக்கு!''

- நம்பிக்கையுடன் முடித்தார்கள் 'அக்ஷயம்’ பெண்கள்!