ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
Published:Updated:

குட்டீஸ் குறும்பு !

குட்டீஸ் குறும்பு !

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு !

150

ஸ்வீட் வாண்டு !

##~##

டி.வி-யில் சினிமா பாடல்கள் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு டூயட் பாடலில், பின்னணியில் ஆடிக்கொண்டிருந்த குரூப் டான்ஸர்களைக் காட்டிய என் ஆறு வயதுப் பேரன், ''பாட்டி... ஒரே கலர்ல, ஒரே மாதிரி டிரெஸ் போட்டுட்டு ஆடுறாங்கள்ல... அவங்க எல்லாம் யாரு..?'' என்றான். நான் பதில் சொல்வதற்குள் தான் முந்திய பக்கத்து வீட்டு வாண்டு, ''சியர்ஸ் கேர்ள்ஸ்டா. நாம கிரிக்கெட் மேட்ச்ல பார்ப்போமே... அதுமாதிரிதான்!'' என்று விளக்கமளிக்க, ரசித்துச் சிரித்தேன்!

இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு நாம் என்ன சொல்லித்தர வேண்டியிருக்கிறது?!

- ஜானகி ரங்கநாதன், மயிலாப்பூர்

குட்டீஸ் குறும்பு !

 இதுதான் ஸ்மார்ட் !

என் நான்கு வயதுப் பேரன் விஷ்ரூத், மாபெரும் கதை விரும்பி. ஒரு நாள் ராமாயணக் கதை சொல்லிக் கொண்டிருந்தபோது, ''லட்சுமணன் மயக்கம் போட்டு விழுந்துட்டார். அனுமான் உடனே ஓடிப்போய் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்தார்...'' என்று சொன்னேன். உடனே அவன், ''சஞ்சீவி மலைனா என்ன..?'' என்றான். ''பெரிய்ய்ய்ய மூலிகை மலை'' என்றேன். ''ஹய்யோ ஹய்யோ... மயக்கம் போட்டா முகத்துல தண்ணீர் தெளிச்சு, ஒரு மாத்திரை போட்டு, டீ குடிச்சாலே சரியா போயிடும். எங்கம்மா, பக்கத்து வீட்டு ஆன்டி அன்னிக்கு மயக்கம் போட்டப்ப அப்படித்தான் செஞ்சாங்க. இதுக்குப் போயா ஒரு மலையவே கஷ்டப்பட்டு தூக்கிட்டு வந்தார் அனுமார்..?'' என்று கேட்க, வாய்விட்டுச் சிரித்தோம் அவன் சாதுர்யப் பேச்சில்! அவன் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நான் அசடு வழிந்தது, அழகு அனுபவம்!

- சாந்தா கண்ணப்பன், கே.கே.நகர்

 பால் பல்... டீ பல்... காபி பல் !

மூன்றாம் வகுப்புப் படிக்கும் என் மகனுக்கு, பால் பற்கள் எல்லாம் விழுந்து முளைக்கும் பருவம் இது. ''பல் ஏன் விழுது, மறுபடியும் முளைக்குமா, விழுந்த பல்லை என்ன பண்றது..?'' என்று ஆயிரம் கேள்விகள் கேட்பான். ''இது பால் பல். அப்படித்தான் விழும். புதுசா வேற பல் முளைக்கும்டா...'' என்று விளக்கினேன். உடனே அவன், ''பால் பல் விழுந்துட்டா... அடுத்து டீ, காபி பல்லு முளைக்குமா..?’ என்று கேட்க, வீட்டில் ஒரே கிச்சு கிச்சு!

'மில்க் டீத், பெர்மனன்ட் டீத்' என அவனுக்கு விளக்கிய பின்தான், எங்களுக்கு கேள்விகளில் இருந்து விடுதலை அளித்தான் என்பது டெயில்பீஸ்!

- ஜெ.வனிதா ஜெயராம், சென்னை-1