Published:Updated:

கதை கேளு...கதை கேளு..!

இ.மாலா

##~##

''கதையோடு இணைந்தது தான் நம் வாழ்க்கை. குழந்தைப் பருவத்தில் இருந்து, இறுதி வரை... கதை கேட்கும், கதை சொல்லும் பழக்கம் அனைவரிடமும் இருக் கிறது. தாத்தா, பாட்டி சொன்ன கதை, அம்மா - அப்பா கேட்ட கதை, ராஜா - ராணி கதை, பேய்க் கதை, பூதக் கதை, ஊர் கதை, உலகக் கதை, வெட்டிக் கதை... என கதை வகைகள் ஏராளம். சொல்லப் போனால், அதன் ஒரு வடிவம்தான் இன்றைய காலகட்டத்தின் தவிர்க்க முடியாத தொலைக்காட்சி தொடர் கதைகள். ஆயிரம்தான் தொலைக்காட்சி கதைகளைப் பார்த்தாலும்... 'அம்மா ஒரு கதை சொல்லுங்கம்மா... அப்பா ப்ளீஸ்ப்பா, ஏதாச்சும் கதை சொல்லுங்கப்பா...' என்று பெட்ரூமில் கேட்காத குழந்தைகள் இங்கே குறைவுதானே!

இன்றைய வேலைச்சூழல், வாழ்க்கை முறை காரணமாக பல்வேறு அழுத்தங் களுக்கும் ஆளாகி, 'கட்டையைச் சாய்ச்சா போதும்' என்கிற நிலையில் வீடு திரும்பும் பெரியவர்களுக்கு... இதற்கான பொறுமை இருப்பதில்லை. அல்லது, அந்தக் காலத்தில் கேட்ட கதைகள் நினைவில் இருப்பதில்லை.

'வேணும்னா... போய் டி.வி-ய போட்டு ஏதாச்சும் பார்த்துட்டு வா!’ என்று விரட்டக்கூட செய்கிறார்கள். இப்படி ரிமோட்டை கையில் கொடுக்கும் (கெட்ட) பழக்கம், இனியும் தொடர வேண்டாம்!'' என்று சொல்லும் இ.மாலா, இதோ... உங்கள் வீட்டுச் செல்லங்களுக்காக இதழ்கள்தோறும் ஒவ்வோர் இனிய கதையுடன் வரப்போகிறார்...

கதை கேளு...கதை கேளு..!

ஒரு ஊர்ல சைமன் என்ற குட்டிப் பையன் இருந்தான். ஊருக்கு கடைசி யிலதான் அவங்க வீடு. காட்டுக்குள்ளே போய்... பழங்கள், விறகு, ஏதாவது விலங்குனு கொண்டு வர்றதுதான் அவங்க அப்பாவோட வேலை. ஒரு தடவை காட்டுக்குப் போனவர், ஒரு வாரம் ஆகியும் வீடு திரும்பல. சைமனோட அம்மாவுக்கு கவலையாயிடுச்சு. ''நீதான் கண்டுபிடிக்கணும். தைரியமா காட்டுக்குள்ள போய் அப்பாவைத் தேடு!''னு சொல்லி மதியம் சாப்பாட்டுக்கு கட்டுச்சாதம் கொடுத்து அனுப்பி னாங்க.  'அப்பாவோட வர்றேன்!’னு கிளம்பினான் சைமன்.

கதை கேளு...கதை கேளு..!

கொஞ்ச தூரம் போனதுமே... டயர்டா feel  பண்ணினவன், சாப்பிடலாம்னு சாதக்கட்டைப் பிரிச்சா... அவன் முன்ன வந்து நிக்குது பெரிய கொரில்லா. ''ஆஹா... சூப்பர் வாசனையா இருக்கே. எனக்கும் கொடுக்கறியா..?''னு அது கேட்க, உடனே கொடுத்துட்டான் சைமன்.

(''நீங்கள்லாம் உங்ககிட்ட இருக்கறதக் கேட்டா கொடுப்பீங்களா குட்டீஸ்?'’

''ம்... சாதமா இருந்தா கொடுப்போம். சாக்லேட்னா... கொஞ்சம் யோசிப்போம்... ஹாஹாஹா!’')

சாப்பிட்டதும், அவனோட கதையக் கேட்ட கொரில்லா, ''இந்தக் காடு நாலு பகுதியா இருக்கு. நீ இப்பத்தான் முதல் பகுதியில இருக்கே. உன்ன தூக்கிட்டுப் போய் ரெண்டாவது பகுதியில விடறேன்''னு சொல்லி, அப்படியே செஞ்சுது.

கதை கேளு...கதை கேளு..!

அந்தக் காட்டுக்கு நடுவுல அழகான குட்டி வீடு. மெதுவா உள்ளே போய் பார்த்தா... சாக்லேட் வீடு. ரொம்ப tempting ஆயிடுச்சு சைமனுக்கு. கார் மாதிரி இருந்த சாக்லேட்டை ஆசையா தொட்டதும்... வீடு முழுக்க ரெட் லைட் blink ஆக... பயந்து ஓட ஆரம்பிச்சான். ஆனா, கதவு மூடிக்கிச்சு. ''மாட்டிக்கிட்டியா..? இன்னிக்கு நீதான் எனக்கு lunch!''னு சொல்லிட்டே ஓடி வந்துச்சு ஒரு பேய்க்கிழவி. இவன் பயந்து ஓட, அது துரத்த... ஒரு candle light கிழவி மேல விழுந்து,  dress fireஆயிடுச்சு. சைமன் ஓடி வந்து தண்ணி ஊத்தி, போர்வையைப் போட்டு கிழவிய காப்பாத்தினான். ''உன்னைக் கொல்ல வந்த என்னையவே காப் பாத்திட்ட! உனக்கு நான் help பண்றேன்!''னு சொல்லி அவன் கதையக் கேட்டுச்சு பேய்க் கிழவி.

மாயக்கண்ணாடியில பார்த்தப்ப... சைமனோட அப்பா, பெரிய பூதத்துக்கிட்ட சிக்கிஇருக்கறது தெரிஞ்சுது. காட்டோட கடைசியில, அதாவது நாலாவது பகுதியில அவரை அடைச்சு வெச்சிருக்குது பூதம். பார்த்ததுமே சைமன் அழ ஆரம்பிச்சிட் டான். ''கவலைப்படாத.. காப்பாத்திடலாம்!''னு சொன்ன பேய்க்கிழவி, ஒரு invisible தைலத்தைக் கொடுத்து, ''இதுல ஒரு சொட்டு தேய்ச்சுக்கிட்டா, யார் கண்ணுக்கும் நீ தெரியமாட்டே!''னு சொல்லி, காட்டோட மூணாவது பகுதியில விட்டுச்சு.

கதை கேளு...கதை கேளு..!

அந்தக் காட்டுக்குள்ள பெரிய பாம்பு ஒண்ணு, செடி - கொடிக்குள்ள சிக்கிக்கிட்டு அழுதுட்டு இருந்துச்சு. அத எப்படி காப்பாத்தறதுனு அவ னுக்கு தெரியல. அப்ப பாம்பு, ''இன்னும் கொஞ்சம் நீ உள்ள போனா... பெரிய காதுள்ள யானை இருக்கும். அத கூட்டிட்டு வந்தா காப்பாத்தி டும்!''னு சொல்லிச்சு. அப்படியே யானையைக் கூப்பிட்டு வந்து பாம்பைக் காப்பாத்திட்டான். யானையும், பாம்பும் சைமனோட கதையக் கேட்டு பரிதாபப்பட்டு, ''நாங்களும் help பண்றோம்!''னு சொன்னாங்க. கூடவே, அபூர்வ மூலிகையை கிஃப்ட்டா கொடுத்துச்சு பாம்பு.

அது என்ன தெரியுமா?! அதை நல்லா கசக்கி மூக்கில வெச்சா, மயக்கம் போட்டுருவாங்க. மறுபடி எழுந்திரிக்க ஒருநாள் ஆகும். ஸோ, invisible தைலம், மூலிகை, பெரிய பாம்பு, யானை... இதுங்களோட நாலாவது பகுதிக்குப் போனான் சைமன். வழியில இருந்த ஒரு பெரிய பள்ளத்துக்குள்ள யானை, சைமன், பாம்பு மூணு பேரும் விழுந்துட்டாங்க. சத்தம் கேட்டு  பூதம் கிளம்பி வர, உடனே மூணு பேரும் invisible தைலத்தை பூசிக்கிட்டாங்க. பூதம் வந்து பாத்துட்டு, ''யாருமில்லையே’'னு குழப்பமா திரும்பி நடந்துச்சு. மேலே வந்த சைமனும், பாம்பும் பின்னாடியே போய், பூதத்தோட இடத்தைக் கண்டுபிடிச்சாங்க. அப்ப, ''நீ போய் பூதத்தோட கை ரெண்டையும் இறுக்கி சுத்திடணும். அப்ப நான் போய் பூதத்தோட மூக்குல மூலிகை இலையத் தேய்ச்சிடறேன்!''னு சொன்னான் சைமன். good idea னு ரெண்டு பேரும் சூப்பரா அதை முடிக்கறப்பவே யானையும் வெளியில வந்து, மயங்கிக் கிடந்த பூதத்த இழுத்து பள்ளத்துல போட்டுச்சு.

கதை கேளு...கதை கேளு..!

அங்க இருந்த சிறையில சைமனோட அப்பா மட்டுமில்லாம... பக்கத்து நாட்டு ராஜா, இளவரசர், மந்திரிகள்னு நிறையபேர் இருந்தாங்க. எல்லாருமே 'விடுதலை ஆயிட்டோம்'னு சந் தோஷப்பட்டாலும், பூதத்த கொல்லாம வெளியில போகமுடியாதே! சிறைக்குள்ள இருந்த வயசான பெரியவர்... ''பூதத் தோட உயிர், அந்த குளத்துக்குள்ள இருக்கிற பெரிய தாமரை பூவுல இருக்கற, பெரிய வண்டுகிட்ட இருக்கு. அதைப் பிடிச்சு கொன்னா தான் பூதமும் சாகும்!''னு ஐடியா கொடுத்தார். உடனே, யானை குளத்துக்குள்ளே இருக்கற தாமரை செடி எல்லாத்தையும் இழுத்துச்சு. பெரிய தாமரைப்பூகிட்ட வந்தவுடன் பாம்பு குளத்துக்குள்ளே போய் பூவில இருக்கிற பெரிய வண்டை எடுத்திட்டு வந்து சைமன்கிட்ட கொடுக்கறப்ப, பூதம் ரொம்ப ஆக்ரோஷமா ஓடி வந்துச்சு. எல்லோரும் பயந்து கூச்சல் போட்டு அலறி ஓடினாங்க. அப்ப யானை சட்டுனு அந்த வண்டை வாங்கி, கால்ல போட்டு மிதிச்சவுடன் 'ஆஆஆ..!’னு காடே அதிரும்படி  கத்திக்கிட்டே கீழே விழுந்து செத்துடுச்சு பூதம்.

வீரசாகசம் செய்து எல்லாரையும் காப்பாத்தின சைமனுக்கு, பக்கத்து நாட்டு ராஜா நிறைய பொன், பொருள் எல்லாம் கொடுத்து பாராட்டினாரு. நாட்டு மக்களும் நிறைய வெகுமதிகள் கொடுத்தாங்க. இதை எல்லாம் வெச்சுக்கிட்டு சைமன் அப்பா, அம்மாவோடு சந்தோஷமா வாழ்ந்தான்.

கதை கேளு...கதை கேளு..!

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமோ... இப்பவும் இப்படி வீரச்செயல் புரியும் சின்னப் பிள்ளைங்களுக்கு நம் இந்திய அரசு award கொடுக்குது. இந்த வருஷம் மொத்தம் 24 சிறுவர்கள் அந்த விருதை வாங்கினாங்க. அதுல பாய்ஸ் 16 பேர், கேர்ள்ஸ் 8 பேர்.

இந்த வருஷம் ‘Geetha chopra award’வாங்கின பொண்ணு பேர் மிட்டல் பட்டடியா. 12 வயசுப் பொண்ணு. இவங்க வீட்டுல திடீர்னு புகுந்த மூணு பேர், இவங்க அம்மாகிட்ட பணம் கேட்டு அடிக்க... அவங்க கத்தியால குத்தினபோதும், கதவை திறந்து கத்த ஆரம்பிச்சா மிட்டல் பட்டடியா. அக்கம்பக்கம் இருக்கிறவங்க வந்து காப்பாத்திட்டாங்க. இப்போ அவங்க ஊரில அவதான் ஜான்ஸி ராணி!

இப்படி தன் உயிரைப் பணயம் வெச்சு மற்றவங் களுக்கு உதவி செய்யுற சிறுவர்களோட சாகசங்கள் தான் bravery award க்கு தேர்ந்தெடுக்கப்படுது.

நாமளும் எப்பவும் தைரியமா இருக்கணும். இனிமே இடி, இருட்டு, கரப்பான்பூச்சி, 'காஞ்சனா’ வுக்கு எல்லாம் பயப்படுவீங்களா குட்டீஸ்..?!

- இன்னொரு கதை..? நாளைக்கு சொல்றேன் !