ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
Published:Updated:

வி.ஐ.பி.வாண்டூஸ்...

கிருத்திகா உதயநிதி

##~##

குழந்தைகளின் உலகம், அளவிட முடியாத சந்தோஷம் நிரம்பியிருக்கும் பூக்கூடை! 'நாளைக்கு போயிட்டு வந்துட்டேன்!’ என்று காலத்தையே மாற்றி அமைப்பதாகட்டும்... சித்தியை, அத்தை என்றும்... மாமாவை, அண்ணா என்றும் மாற்றுவதாகட்டும்... ரூம் போடாமல், ரொம்பவும் யோசிக்காமல் குறும்புகளை அவிழ்த்துவிடுவதாகட்டும்.... அழகோ அழகு! இப்படி தங்கள் பிள்ளை நிலாக்களின் குறும்பு, எதிர்பார்ப்பு, பாசம், ஏக்கம், சேட்டை, அன்பு... இன்னும், இன்னும்... என்று இதழ்கள்தோறும் பேச வருகிறார்கள், செலிப்ரிட்டீஸ்.

இந்த இதழில்... கிருத்திகா உதயநிதி!

''குழந்தைங்க இன்பன், தன்மயா... இவங்க ரெண்டு பேரோடயும் நேரம் போக்கறதுக்காகவே ஆபீஸ் வேலைகளை எல்லாம் சீக்கிரம் சீக்கிரமா முடிச்சுட்டு ஓடோடி வந்துடற டிபிக்கல் அம்மா நான். என்னை மாதிரியேதான் வீட்ல எல்லோருமே!

மாமாவுக்கு இன்பனோட நேரம் போக்குற துனா... அவ்ளோ இஷ்டம். வெளியில இருந்து வரும்போது எவ்ளோ டென்ஷன்ல வந்தாலும், குழந்தைங்ககிட்ட ஒரு அஞ்சு நிமிஷம் செல விட்டா போதும், மாமா முகத்துல அவ்ளோ பிரகாசம் தெரியும். தாமதமா வீட்டுக்கு வர்ற நாட் கள்லகூட, தூங்கிட்டிருக்கிற இன்பனைப் பார்த் துட்டு, கன்னத்தை தொட்டு செல்லமா கொஞ் சிட்டு போய் படுத்தாதான் அவங்களுக்கு தூக்கமே வரும். வீட்ல அவங்க இருந்துட்டா போதும், வேற யாரையும் அவன் தேடுறதே இல்லை.

என்னோட ஹஸ்பெண்ட் உதய், பாசத்துல நம்பர் ஒன் அப்பா. ரெண்டு நாட்கள் வெளியூர் போயிட்டாகூட... பிள்ளைங்கள விசாரிச்சு போன் வந்துட்டே இருக்கும். தோனி ஹேர் ஸ்டைல்,  சூர்யா காஸ்ட்யூம்னு இன்பனோட அத்தனை விருப்பத்தையும் அப்பாதான் பூர்த்தி செய்து வைப்பார். அத்தைகிட்ட இருந்துதான் பாசம், நேசம்னு ஒவ்வொரு விஷயத்தையும், நான் இப்பவும் கத்துக்கிட்டே இருக்கேன்.

வி.ஐ.பி.வாண்டூஸ்...

ஓர் அம்மாவின் எந்த பங்களிப்பும் குழந்தை களுக்கு குறைஞ்சுடக் கூடாதுங்கறதுல ரொம்பவே கவனமாக இருப்பேன். சாப்பாடு, வீக் எண்ட், பொழுதுபோக்குனு என் சந்தோஷ நேரமெல்லாம் அவங்களோடதுதான். குழந்தைகளோட செலவிடுற நேரத்தை நினைச்சுட்டா, எவ்ளோ 'பிஸி’ நேரத்தையும் எளிதா கடந்துட முடியுது. அதுதான் பசங்க செய்ற அற்புதம்!

குடும்ப உறவுகளின் சாரல்லதான் அவங்க வளர ணும்கிறது என்னோட விரும்பம். அந்த விஷயத் துல அவங்களுக்குக் கவலையே இல்லை. பெரிய ஃபேமிலிங்கறதால எப்பவும் வீட்ல 15 பேருக்கும் குறையாம, வீடு ஜேஜேனு இருக்கும். குறும்பு, கிண்டல், கேலினு கொண்டாட்டமா இருந்தா தானே குட்டீஸ் இருக்குற வீடு எப்பவும் கல கலனு இருக்கும். வீட்ல சேட்டைகளுக்கு பஞ்சமே இருக்காது. இன்பனுக்கு 8 வயசு ஆகுது. யாரை இன்னிக்கு ஏமாத்தலாம்னு சீட்டுப்போட்டு குலுக்கி ஷார்ப்பா சுட்டித்தனம் செய்தறதுல அவர் பயங்கர கெட்டிக்காரர். நானும் அந்த வலை யில சிக்கின சம்பவங்கள் எல்லாம் இருக்கு.

வி.ஐ.பி.வாண்டூஸ்...

இன்பனுக்கு கீ-போர்டுக்கும், செஸ் விளையாட்டுக்கும் தனியே மாஸ்டர்களை வரவழைச்சு பயிற்சி கொடுக்கிறோம். டிரெயினிங் கிளாஸஸ் போய்க்கிட்டிருக்குற நாட்கள்ல சமீபத்துல ஒருநாள் என்னோட செல்போனை எடுத்து கேம் விளையாடிக்கிட்டிருந்தார், இன்பன். கிளாஸ் எடுக்குறதுக்கான நேரம் ஆன பிறகும் மாஸ்டர் வந்தபாடில்லை. 'ஏன் இன்னும் வரலை?’னு போன் போட்டா, 'நீங்கதானே, 'இன்னிக்கு கிளாஸ் வேண்டாம். நாளைக்கு வாங்க’னு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தீங்க? வாசல் வரைக்கும் வந்துட்டு திரும்பிட்டேனே!’னு சொன்னார் மாஸ்டர்.

'நாமதான் மறந்துபோய்ட்டோமா'னு... பையன்கிட்ட இருந்த செல்போனை வாங்கி, மெசேஜ் சென்ட் ஆப்ஷன்ல எல்லாம் போய் பார்த்தேன். எதுவுமே இல்லை. எல்லாத்தையும் செய்துட்டு, எதுவுமே நடக்காத மாதிரி அவ்ளோ சமர்த்தா, கேம் விளையாடுறத கன்டின்யூ செய்து கிட்டிருந்தார் இன்பன். அந்தக் குறும்பு கல்பிரிட் அவர்தான்னு ஒருவழியா கண்டுபிடிச்சப்போ, எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சோம்.

பொண்ணு தன்மயாவுக்கு ஒன்றரை வயசுதான். பொம்மைகள்தான் அவங்களோட நெருக்கமான ஃப்ரெண்ட்ஸ். கால்ல கொசு கடிச் சுட்டா போதும், அன்னிக்கு முழுக்க வீட்டுக்கு வர்ற ஒருத்தர் விடாம... 'பூச்சு... கச்சு... கச்சு...!’னு புகார் சொல்லிட்டே இருப்பாங்க. நமக்கு இருக்குற எல்லா டென்ஷன்களையும், பிள்ளைகளோட ஒரு சின்ன சிரிப்போ, சேட்டையோ அவ்ளோ ஈஸியா மாத்திடுதே... அதுதான் என் பசங்ககிட்ட இருந்து, நாங்க எல்லாரும் எடுத்துக்கற டானிக்!''

சந்திப்பு: ம.மோகன்
படங்கள்: சு.குமரேசன், சொ.பாலசுப்ரமணியன்