ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
Published:Updated:

இன்னும் கொஞ்சம் அழகா கோத்திருக்கலாம்...

இன்னும் கொஞ்சம் அழகா கோத்திருக்கலாம்...

##~##

'தாய்க்குலம் போற்றும் நான்காவது வாரம்...' இப்படித்தான் போஸ்டரே அடிக்கிறார்கள். அப்படியிருக்க... நியூ ரிலீஸ் திரைப்படங்களை நாம் அலசி ஆராயாமல் இருந்தால் எப்படி? அதற்காகவேதான் உதயமாகிறது... 'அவள் சினிமாஸ்'! இனி இதழ்தோறும் புத்தம் புதுப் படங்களை வாசகிகள் விமர்சிக்கப் போகிறார்கள்...

ஒட்டிப் பிறந்த இரட்டை சூர்யா... 'சூப்பர் ஹிட் டைரக்டர்' கே.வி ஆனந்த்... என எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் 'மாற்றான்’ திரைப்படத்துக்கு... கல்லூரி மாணவிகள் மூவர், இல்லத்தரசிகள் இருவர் என நம் வாசகிகள் ஐந்து பேரை அழைத்துச் சென்றோம். சென்னை, தேவி தியேட்டரில் கால் வைத்ததுமே... 'போஸ்டரே செம அட்ராக்டிவ்வா இருக்கு.. நிச்சயம் படம் நல்லாதான் இருக்கும்' என்று நம்பிக்கையைக் கூட்டிக் கொண்டபடியே உள்ளே நுழைந்தார்கள்.

இன்னும் கொஞ்சம் அழகா கோத்திருக்கலாம்...

குழந்தைகளுக்கான 'எனர்ஜியான்’ என்கிற பால் பவுடரைக் கண்டுபிடிக்கும் ராமச்சந்திரன், அதன் விற்பனையிலும் முன்னேறுகிறார். ஆனால், அதன்பின் இருக்கும் குரூரத்தைத் தெரிந்துகொள்கிறார்கள்... இரட்டையர்களான அவருடைய மகன்கள் (சூர்யாக்கள்). ரஷ்ய ரிப்போர்ட்டர், சயின்ஸ், டெக்னாலஜி, ஒலிம்பிக், காதல் காஜல் என்று எங்கெங்கோ பயணிக்கும் கதை... வழக்கம்போல வில்லன் வதத்துடன் சுபம்!

படம் பார்த்து வெளியே வந்ததும், அந்த ஐந்து பேரும் தந்த விமர்சனம் இதோ...

கல்லூரி மாணவி ஐஸ்வர்யா: யூஷ§வலான காதல், வில்லன், ஏழை டு பணக்காரன், அண்ணன் - தங்கச்சி ஃபார்முலாக்களில் இருந்து வித்தியாசப்பட்ட வகையில் குட்! ஆனாலும், திரைக்கதையில திகுதிகு இல்ல. 'இதென்ன லாஜிக்?’, 'அதெப்படி முடியும்?’னு பல கேள்விகள் கேட்க வைக்குது. குறிப்பா... செகண்ட் ஹாஃப்... இன்னும் கொஞ்சம் சென்ஸிபிளா யோசிச்சிருக்கலாம். இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தையைக் கொல்ல முடிவெடுக்கற தன் கணவர்கிட்ட இருந்து குழந்தைகளைக் காப்பாத்தி வளர்க்கும் அம்மா கேரக்டர் அழகு. அகிலன், விமலன்னு ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுக்கு இடையில் இன்னும் கொஞ்சம் எமோஷன் சேர்த்திருக்கலாம். சூர்யா நடிப்பு... வாவ்வ்வ்! காஜல், அழகு! அவரோட காஸ்ட்யூம்ஸ் கலக்கல். ஆனா, படத்தில் டால் மாதிரி வந்து போறார்.''

இன்னும் கொஞ்சம் அழகா கோத்திருக்கலாம்...

ஐஸ்வர்யா பஞ்ச்: ஒரு தடவை பார்க்கலாம்... செகண்ட் ஹாஃப்ல நெளிஞ்சுட்டேன்!

குடும்பத் தலைவி ஹேமா: ''படத்தோட ஆரம்பம் ரொம்ப அழகு. என்னோட எட்டு மாசப் பையனை ஞாபகப்படுத்துச்சு. குழந்தைகளுக்கான பால் பொருட்களை வெச்சு இப்படியும் சம்பாதிப்பாங்களானு அதிர்ச்சியா இருக்கு. என்னதான் இருந்தாலும், அப்பாவே குழந்தையைக் கொல்ல நினைக்கறது, கொஞ்சம் ஓவர். அதேபோல, 'நீ ஒருத்தனுக்குப் பொறந்தவன் இல்ல... பத்து அப்பனுக்குத்தான் உன்ன உன்னோட அம்மா பெத்திருக்கா’ என்கிற டயலாக், சகிச்சுக்கவே முடியல.''

ஹேமா பஞ்ச்: எப்ப சூர்யா 'காக்க காக்க', 'கஜினி' போல... நல்ல ஹிட் கொடுக்கப் போறீங்க?

கல்லூரி மாணவி சங்கீதா: ''இந்த முறை கே.வி. ஆனந்த் சார் ஏமாத்திட்டாருப்பா! பட், வழக்கம்போல நல்ல டீம் வொர்க். சூர்யா, சூப்பர்யா! சார் ரெண்டு குழந்தைங்களுக்கு அப்பாவாம். ம்ஹும்! சூர்யாவின் அம்மா கேரக்டர் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்னுதான் தோணுது. 'தீயே... தீயே...’ பாடல்ல டுவின்ஸ் டான்ஸ் நல்லாஇருந்தது. ஹாரிஸ் மியூசிக் இதம். 'கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா...’னு லிரிக்ஸ்ல ரசிக்க வைக்கிறார் விவேகா. சில இடங்கள்ல லொகேஷன்ஸ் இமைக்காம பார்க்க வைக்குது. ஆக்ஷன் காட்சிகளும் அருமை. இப்படி எல்லாம் தனித்தனியா நல்லா இருக்கு. ஆனா... ஒண்ணாத்தான் ரசிக்க முடியல. இன்னும் கொஞ்சம் அழகா கோத்திருக்கலாம்.''

சங்கீதா பஞ்ச்: 'மாற்றான்’... பிடிக்குது, பிடிக்கலைக்கு நடுவுல... 'ஓகே’ டைப்!

குடும்பத் தலைவி சித்ரா: ''காஜல்... பொண்ணுங்க பொறாமைப்படுற அளவுக்கு இந்தப் படத்திலும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க. உங்களுக்கு மாடர்ன் டிரெஸ்ஸைவிட, புடவை ரொம்ப அழகா இருக்கு. அதுவும் டூயட் பாட்டுல கட்டிட்டு வந்தீங்களே அந்த வொயிட் புடவை... அதுதான் என்னோட அடுத்த ஷாப்பிங் டார்கெட்!''

சித்ரா பஞ்ச்: ''காஜலுக்காகவே ரெண்டாவது தடவையும் பார்ப்பேன்!''

இன்னும் கொஞ்சம் அழகா கோத்திருக்கலாம்...

கல்லூரி மாணவி கார்கி ஸ்ரீதரன்: ''ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் பத்தின கதைனு எதிர்பார்ப்போட போனா, கதை வேற எங்கெங்கேயோ சுத்துது (தலையை சுழற்றுகிறார்). சயின்ஸ், டெக்னாலஜி, இன்டர்நேஷனல் நெட்வொர்க்னு ஹாலிவுட் ஸ்டைலுக்குப் போக முயற்சி செய்திருக்கார் கே.வி.ஆனந்த். ஆனா... லாஜிக்னு ஒண்ணு இருக்கே. அம்மாக்களின் கைகளில் எல்லாம் 'எனர்ஜியானை’க் காண்பிக்கும் டைரக்டர், விமலனையும் அமலனையும் மட்டும் அதைக் குடிக்காம வளர்த்திருக்கார் அது எப்படினு புரியல. உருவ ஒற்றுமையில இன்னும் கொஞ்சம் வித்தியாசம் காட்டி இருக்கலாம். அதிலும் டூயட் பாடலில் தேவையில்லாம அமலனைக் காட்டி... யார் அமலன், விமலன்னு கன்ஃப்யூஸ் பண்ணிட்டீங்களே பாஸ்! ரஷ்யாவில் இருந்து வரும் ரிப்போர்ட்டர்... அழகு தேவதை (ஏன் நீங்க தமிழ் ஹீரோயினா நடிக்க வரக்கூடாது... தமிழ் பசங்க மனசுல நீங்கள்லாம் நல்லா வருவீங்க மிஸ் ஏஞ்சல்!)

சூர்யா இன்னும் சாக்லெட் பாயாகத்தான் இருக்கிறார் என்பதை விமலனின் கெட்டப் சொல்கிறது (குழந்தைக்கு அப்பாவாகி சில வருடம் ஆகியும் இன்னும் அழகாக இருக்கறீங்க சூர்யா!)

கார்கி பஞ்ச்: 'இப்படியெல்லாம் க்ளைமாக்ஸ் இருக்குமா?'னு ஒவ்வொரு படம் பார்க்கும்போதும் சொல்லத் தோணும்... ஸாரி கே.வி.ஆனந்த்.

இன்னும் கொஞ்சம் அழகா கோத்திருக்கலாம்...

தொகுப்பு: வே.கிருஷ்ணவேணி
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்