Published:Updated:

கதை கேளு... கதை கேளு..!

படங்கள்: பொன்.காசிராஜன், அருண் டைட்டன்

 ##~##
கதைக்கு ரெடியா குட்டீஸ்..?!

ஒரு ஊர்ல... அழகான ஒரு குட்டிப் பையன். அவனுக்கு அப்பா இல்ல, அம்மா மட்டும்தான். அம்மாவுக்கு ஒரு கண் கிடையாது. அந்தக் கண் எப்பவும் உள்ள போய் மூடியே இருக்கும். அதனால இவனுக்கு அம்மாவ பிடிக்கவே பிடிக்காது. 'அம்மா’னுகூட கூப்பிட கூட மாட்டான். எப்பவும் அவகிட்ட ரொம்ப கோபமா பேசுவான். தான் படிக்கற ஸ்கூலுக்கு வரவே கூடாது னும் அம்மாகிட்ட சொல்லிட்டான்.

அம்மாவுக்கோ அவன் மேல உயிர். வீட்டு வேலை, கிடைக்கற வேலை எல்லாம் செய்து பையனைப் படிக்க வெச்சா. ஒருநாள் ஸ்கூல்ல picnic போறதா சொன்னாங்க. அம்மாகிட்ட, ''காசு கொடு, நான் போகணும்''னு கோபமா கேட்டான். அம்மாவோ, ''இப்போதைக்கு இல்ல... இன்னும் ரெண்டு நாள்ல தரேன்''னு சொன்னா.

இதுக்காகவே ஒரு கல்யாண வீட்ல ராப்பகலா வேலை பார்த்து சம்பாதிச்சா. அன்னிக்குத்தான் picnic fees கட்டறதுக்கு லாஸ்ட் டே. அதனால பணம் கிடைச்சவுடன், மகன்கிட்ட குடுக்கறதுக்காக ஸ்கூலுக்கு ஓட்டமும் நடையுமா வந்து சேர்ந்தா. பையனப் பார்த்து காசு கொடுத்தா. அவன் கோபமா முறைச்சு பார்த்துட்டு, வாங்கிட்டுப் போனான். அவனோட friends, 'யார்டா அது?’னு கேட்டாங்க. 'ஓ அதுவா... என் வீட்டு வேலைக்காரி!’னு அம்மா காதுல விழற மாதிரியே சத்தமா சொன்னான்.

கதை கேளு... கதை கேளு..!

வீட்டுக்குப் போய் அழுதுட்டே இருந்தா. ராத்திரி ரெண்டு பேரும் சாப்பிடல. நடு ராத்திரி இவன் தண்ணி குடிக்கலாம்னு எழுந்தப்போ,  அழுதுட்டு இருந்தா அம்மா. ''என்ன நடந்ததுனு ராத்திரியில அழறே..? சும்மாவே உன் மூஞ்சி கோரமாயிருக்கு. அழுதா இன்னும் பயமா இருக்கு. ஸ்கூலுக்கு வேற வந்து கேவலப்படுத்துறே''னு திட்டிட்டு படுத்துட்டான்.

இப்படியே காலங்கள் ஓடிச்சு. ப்ளஸ் டூ முடிச்சவொடன... எங்கயாவது ஓடிப் போயிடணும்னு நினைச்சான். ப்ளஸ் டூ-ல நல்ல மார்க் எடுக்கவே, foreign காலேஜ்ல ஸ்காலர்ஷிப்போட ஸீட் கிடைச்சு, ''இனி, இந்த ஊருக்கே வரமாட்டேன்''னு சொல்லிட்டுப் போயிட்டான்.

இந்த அம்மா தனிமையிலே பல வருஷங்கள கடந் தாங்க. வயசாயிடுச்சு. பையன ஒரு தடவையாவது பார்க் கணும்னு ஆசைப்பட்டாங்க. சிலர் உதவியால அவன் இருக்கிற ஊர், விலாசம்னு தெரிஞ்சுக்கிட்டு தேடிப் போனாங்க. இப்ப அந்தப் பையன் பெரிய ஆளாயிட்டார். கல்யாணம் ஆகி, பண வசதியோட, ஆடம்பர பங்களா வில் இருந்தார். இந்த அம்மா அந்த வீட்டு வாசல்லயே நின்னு, தன் பையன் வெளியில வருவானானு ஏக்கமா அந்த ஒத்தக்கண்ண சுருக்கி பார்த்திட்டு இருந்தாங்க. அப்போ வெளியில வந்த அவரோட சின்னப் பொண்ணு... இந்தம்மாவைப் பார்த்ததும், ''ஐயோ, பூச்சாண்டி''னு கத்திட்டே உள்ளே ஓடிட்டா.

கதை கேளு... கதை கேளு..!

ஜன்னல் வழியா எட்டிப் பார்த்தவுடனே, தன் அம்மா தான்னு தெரிஞ்சுகிட்டவர், கோபமா வெளில வந்தார். கொஞ்சம் பணத்தை அவ கையில வெச்சு, ''ஏ கிழவி... நீயும் வேண்டாம்... ஊரும் வேண்டாம்னுதானே இவ்வளவு தூரம் வந்திருக்கேன். இங்கயும் வந்து தொந்தரவு பண்றியே?''னு சத்தம் போட்டுட்டு உள்ளே போயிட்டார். அம்மா அவனை பார்த்ததுலயே சந்தோஷப்பட்டு, 'நல்லா இருக்கட்டும்'னு சொல்லிட்டே பணத்தை அவரோட வீட்டு PostBox ல போட்டுட்டு வந்துட்டாங்க.

கொஞ்சம் வருஷம் கழிச்சு இவர் படிச்ச ஸ்கூல்ல 50-ம் வருஷ விழாவுல வந்து கலந்துக் கிட்டார். முடிஞ்சவுடன் தான் வாழ்ந்த இடத்த கடைசியா ஒரு தடவ பாக்கலாம்னு போனார். அங்க இருந்தது... அவரோட வீடு இல்ல. புதுசா ஒரு வீடு. பக்கத்துல விசாரிச்சா, ''போன வருஷம் அந்த அம்மா இறந்துட்டாங்க. அவங்களுக்கு உதவி பண்ணவங்களுக்கு இந்த இடத்தை கொடுத்துட்டாங்க. அவர்தான் இங்க இருக்கார்''னு சொன்னாங்க. அப்ப, அந்த புது வீட்ல இருந்து வெளில வந்த  குட்டிப் பொண்ணு, ''யார் இது?''னு கேட்டுச்சு. சொன்னதும், ''ஹை... நீங்க பாட்டியோட மகனா..? இருங்க'’னு சொல்லிட்டு உள்ளே போய் ஒரு லெட்டரை கொண்டு வந்து, ''பாட்டி, உங்களுக்காக எழுதினது''னு சொல்லி, அவர்கிட்ட குடுத்துச்சு.

அங்கயே பிரிச்சு படிக்க ஆரம்பிச்சார்... 'அன்பு மகனே... ஒவ்வொரு நாளும் உன் அழகு முகத்தைப் பார்க்கும்போது என் மனசு நிறைஞ்சு போகும். ஆனா, நீ என்னப் பார்த்தவுடனே முகத்தை திருப்பிடுவே. ஒரு நாளாவது நீ என்னைப் பார்த்து அழகா சிரிக்கணும், அம்மானு ஆசையா கூப்பிடணும்னு ஏங்கித் தவிச்சிருக்கேன். கடைசி வரை அது நிறைவேறல. இருந்தாலும் எனக்கு உன்னைப் பார்க்கும்போதெல்லாம்... முழுமதி போல இருக்கும் உன் முகத்தை எல்லாரும் புகழும்போதெல்லாம்... நான்தான் உன் அம்மானு மனம் கொள்ளாத பெருமிதம் இருக்கும்.

கதை கேளு... கதை கேளு..!

மகனே... உனக்கு ஒண்ணு தெரியுமா? நீ சின்னக் குழந்தையா இருக்கும்போது வைரஸ் காய்ச்சலால் மோசமா பாதிக்கப்பட்டு, ஒரு கண்ணுல பார்வை போயிடுச்சு. கதறித்துடிச்ச நான், டாக்டரோட உதவியோட என் ஒரு கண்ணை தானம் பண்ணினேன். நீயும் குணமடைஞ்சுட்டே. அந்த மகிழ்ச்சிய வார்த்தையில சொல்ல முடியாது. நீ என்னை கோவமா பார்க்கும்போதுகூட எனக்கு சந்தோஷமாத்தான் இருக்கும். அவன் பாதிக் குருடு இல்லைனு பெருமையா இருக்கும். நீ நல்லா படிச்சு நல்ல நிலைமைக்கு வந்ததை பார்த்ததுல... எனக்கு ரொம்ப சந்தோஷம். பிள்ளை குட்டிகளோடு நல்லாயிரு!

குறிப்பு: ஊனமுற்றவர்களைப் பார்த்தா இனிமேலாவது வெறுக்காதே மகனே.’

படிச்சு முடிச்சதும் மகன் 'அம்மா அம்மா’ அழுது தேம்ப ஆரம்பிச்சுட்டார். வீட்டுக்குள்ள ஓடிப்போய் அம்மா படத்தை எடுத்து நெஞ்சோட அணைச்சுட்டு, அழுதுட்டே எடுத்துட்டுப் போயிட்டார்! ரொம்ப touching ஸ்டோரிதானே குழந்தைங்களா! பிள்ளைகளுக்காக இப்படி வாழ்க்கையைத் தொலைச்ச அம்மாக்களின் கதைகள் ஏராளம் இருக்கு. அதை மனசுல வெச்சுக் கிட்டு அம்மாவை எவ்வளவு கொண்டாடணும்னு இப்ப நல்லா புரிஞ்சிருக்குமே!

- இன்னொரு கதை..?   நாளைக்கு சொல்றேன்!