Published:Updated:

கதை கேளு... கதை கேளு..!

இ.மாலா படம்: கே.கார்த்திகேயன், ஓவியங்கள்: ஹரன்

##~##

ராஜான்னாலே மந்திரியும்கூட இருப்பார்தானே..? இந்த மந்திரி ரொம்ப நல்லவர், ரொம்ப intelligent. ராஜாவுக்கும் இவரை ரொம்ப பிடிக்கும். ஆனா, மந்திரிக்கிட்டே இருக்கிற ஒரே ஒரு குணம்... ராஜாவுக்குப் பிடிக்காது. அது... என்ன நடந்தாலும், எப்போ நடந்தாலும் 'எல்லாம் நன்மைக்கே’னு சொல்றதுதான். ராஜாவுக்கு பிடிக்காதுங்கறதுக்காக, இதை மாத்திக்கவே இல்ல மந்திரி!

ஒருநாள்... ராஜா, மந்திரி எல்லாரும் காட்டுக்கு வேட்டையாட போனாங்க. வழிய மறைக்கிற செடி, கொடியை எல்லாம் தன் வாளால வெட்டிக்கிட்டே போனார் ராஜா. அப்படி ஒரு செடிய வெட்டும்போது, தன் சுட்டுவிரலையும் சேர்த்து வெட்டிக்கிட்டார் ராஜா. உடனே எல்லா மருத்துவ உதவிகளையும் செஞ்சு காயத்துக்கும் கட்டு போட்டு முடிச்சாங்க கூட இருந்தவங்க. மந்திரியும் உதவி பண்ணினாரு. ராஜாவுக்கு பயங்கர வலியும், வேதனையும் வர... ரொம்ப துடிச்சார். அதைப் பார்த்த நம்ம மந்திரி எப்பவும்போல, ''எல்லாம் நன்மைக்கே''னு சொன்னார். அவ்வளவுதான்... ராஜாவுக்கு வந்ததே கோபம்... உடனே அங்கிருந்த ரெண்டு சிப்பாய்களைக் கூப்பிட்டு, ''நான் திரும்பி வர்ற வரைக்கும் இந்த மந்திரிய தனிமைச் சிறையில அடைச்சு வையுங்க''னு தண்டனை கொடுத்துட்டார்.

அப்புறம் அப்படியே அடர்ந்த   forest வேட்டையைத் தொடர்ந்தார் ராஜா. வழக்கமா, மந்திரியைத் தவிர வேற யாரும் ராஜா பக்கத்திலேயே போக மாட்டாங்க. அதுலயும் மந்திரிக்கு தண்டனை வேற கொடுத்துட்டதால... மத்த எல்லாரும் இன்னும் கொஞ்சம் தள்ளியே ராஜாவைப் பின்தொடர்ந் துட்டு இருந்தாங்க. ஒரு கட்டத்துல ராஜா எங்கே போனாருனு இவங்களுக்குத் தெரியல... அப்படியே நின்னுட்டாங்க.

கதை கேளு... கதை கேளு..!

தனியா ரொம்ப தூரம் போன ராஜா, காட்டுவாசிங்ககிட்ட சிக்கிட் டார். ராஜாவோட கை, கால்களை கட்டி, அவங்க இடத்துக்கு தூக்கிட்டுப் போனாங்க. அங்க ஏதோ சின்ன விழா மாதிரி நடந்திட்டு இருக்கு. நடுவில பெரிய அக்னிகுண்டம். அதுல பலி கொடுக்கத்தான் ராஜாவைத் தூக்கிட்டுப் போய் இருந்தாங்க.

காட்டுவாசி தலைவர், ராஜாவை வந்து பார்த்துட்டு... கை, கால் கட்டெல் லாம் அவிழ்த்துவிட்டு, பலி கொடுக்கற துக்கு தயார் பண்ணச் சொன்னார். கைகட்டை அவிழ்க்கறப்ப... அடிபட்ட கைவிரல் கட்டும் அவிழ்ந்து, blood கொட்ட ஆரம்பிச்சுடுச்சு ராஜாவுக்கு. அதைப் பார்த்த தலைவர், 'எந்தக் குறையும் இல்லாத உயிரைத்தானே பலி கொடுக்கணும்? இவனுக்கு ஏற்கெனவே விரல் துண்டாகி இருக்கு. விட்ருங்க இவனை!’னு சொல்லிட்டார்.

கதை கேளு... கதை கேளு..!

'தப்பிச்சோம்... பிழைச்சோம்'னு தலைதெறிக்க ஓட்டமெடுத்த ராஜா... மறுபடியும் தன் நாட்டுக்கு வந்து சேர்ந்தார். வந்த வேகத்துலயே அவர் யாரை first;பார்க்க விரும்பினார் தெரியுமா? வேற யாரு... நம்ம மந்திரிதான்! 'எல்லாம் நன்மைக்கே’னு அவர் சொன்னது சரிதானே? விரல்ல அடிபட்டதனாலதானே அவர் உயிரோட திரும்பி வர முடிஞ்சது? அதனால மந்திரியை உடனே சந்திச்சு மன்னிப்புக் கேட்டார். அப்படியே ராஜாவுக்கு ஒரு சந்தேகம். '' மந்திரியாரே... எனக்கு விரல்ல அடிபட்டது நன்மைக்குத்தான். அதனாலதான் நான் உயிரோடு தப்பிச்சேன். அது ஷீளீ. ஆனா, அதைச் சொன்னதுக்காக இத்தனை நாள் நீங்க இப்படி ஜெயில்ல கஷ்டப்பட்டுட்டீங்களே... அது எப்படி நன்மையாகும்?''னு ஒரு கேள்வி கேட்டார்.

உடனே மந்திரி, ''என் மதிப்புக்குரிய மகாராஜா... என்னைப் பிடிச்சு நீங்க சிறையில அடைக்க சொல்லலைனா நானும் உங்களோடதான் இருந்திருப்பேன். ரெண்டு பேரையும் பிடிச்சுட்டுப் போயிருப்பாங்க. உங்க விரல்ல காயத்தைப் பார்த்து, உங்கள விடுவிச்ச காட்டுவாசிங்க, எந்தக் குறையும் இல்லாத என்னை பலி கொடுத்து இருப்பாங்க. அதனால் இந்தச் சிறை வாசமும் நன்மைக்கே!''னு சிரிச்சுக்கிட்டே சொன்னார். ராஜாவும் சிரிச்சுக்கிட்டே ஒப்புக்கிட்டார்!

ஆமா குழந்தைகளே... நீங்களும் உங்களுக்கு ஏதாவது கஷ்டம் வந்தா, 'எல்லாம் நன்மைக்கே’னு ஜீஷீsவீtவீஸ்மீவா எடுத்துக்கணும். சரியா?!

இன்னொரு கதை..?நாளைக்கு சொல்றேன்!

நம்ம நாடும்... நம்ம காடும்!

காட்டுல நடந்த கதை கேட்டீங்க..! இப்போ காடு பத்தி கொஞ்சம் தெரிஞ்சுப்போமா..? இந்தியாவில் உழவுத் தொழிலுக்கு அடுத்து அதிக பரப்பளவு நிலத்தை ஆக்கிரமிச்சு இருக்கறது காடுகள்தான். மத்தியப்பிரதேசத்தில்தான் அதிக பரப்பளவில் காடுகள் இருக்கு. நம் நாட்டில் 89 தேசிய பூங்காக்களும், 400-க்கும் அதிகமான வனவிலங்கு சரணாலயங்களும் இருக்கு. தமிழ்நாட்டில், நீலகிரி மலையில் முதுமலைக் காட்டின் உள்ளடர்ந்த காட்டுப்பகுதிகள், ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமா இருக்கற, UNESCO அமைப்பு சார்புல பாதுகாக்கப்படுது! Population அதிகமானதால... காடுகளோட பரப்பளவு கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுட்டு வருது. இது மனிதர்களுக்கே நாளைக்கு பேராபத்தா மாறிடும். காடுகள் இல்லைனா... பல்லுயிர் பெருக்கம் இருக்காது. பல்லுயிர் பெருக்கம் இல்லைனா... சுற்றுச்சூழல்ல பலவிதமான பாதிப்புகள் வந்துடும். அப்படி வந்துடக்கூடாதுனுதான் காடுகளை காப்பாத்தற முயற்சியில UNESCO இறங்கியிருக்கு. நாமளும் நம்ம வீடு, தோட்டம் இப்படி வசதிப்பட்ட இடங்கள்ல எல்லாம் trees நட்டு இந்த முயற்சிக்கு கைகொடுக்கலாம்!