Published:Updated:

கதை கேளு..கதை கேளு

இ.மாலா ஓவியம்: ஹரன்

##~##

சென்னை, மீனம்பாக்கத்துல இருக்கிற சர்வதேச விமான நிலையம், அந்த இரவிலும் பரபரப்பா இருந்துச்சு. சென்னையிலிருந்து லண்டன் போற விமானம் புறப்பட தயாரா இருந்துச்சு. பயணிகள் எல்லாரும் seat belt போட்டு செட்டில் ஆயிட்டாங்க. விமானமும் சரியான நேரத்துக்கு கிளம்பிடுச்சு. அமைதியா சீரா போயிட்டு இருந்த விமானம்... கொஞ்ச நேரத்துல லேசா தடுமாற ஆரம்பிச்சுடுச்சு.

விமானப் பணிப்பெண், ''மேகம் அதிகமா இருக்கற தாலே கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். அதனால இப்போ snacks, drinks விநியோகிக்க முடியாது. சிரமத்துக்கு மன்னிக்கவும்’'னு ஒலிபெருக்கியில அறிவிச்சாங்க. அதைக் கேட்ட பல பயணிகளும் பயப்பட ஆரம்பிச்சாங்க. அதுல ஒரு பெரியவர்.... பயந்துட்டே பக்கத்துல இருந்தவங்கள ஒவ்வொருத்தரா பார்த்தார். எல்லார் முகத்துலயும் லேசான பயம் தெரிஞ்சுது. இவங் களுக்கு நடுவுல... உங்கள மாதிரி ஒரு சின்னப் பொண்ணு ஒருத்தி, தன் கால ஸீட் மேல வெச்சுக்கிட்டு, சுவாரசியமா story bookபடிச்சுட்டு இருந்தா. அவ முகத்துல துளிகூட பயம் தெரியல. இந்தப் பெரியவருக்கு ரொம்ப ஆச்சர்யமா போயிடுச்சு.

கொஞ்ச நேரத்துல கடும் மேக கூட்டத்துக்கு நடுவுல விமானம் போக ஆரம்பிச்சுடுச்சு. இடி சத்தம் விமான இன்ஜின் சத்தத்தைவிடஅதிகமா இருந்துச்சு. மின்னல் வெளிச்சமும் பளீர், பளீர்னு ஜன்னல் வழியா எல்லாருக்கும் தெரிஞ்சுது. விமானத் தடுமாற்றமும் அதிகமாகிட்டே இருந்துச்சு. மறுபடியும், ''பயணிகளே, விமானம் கடுமையான மேகக் கூட்டங்களை கடக்கறதாலயும், அதிக தடுமாற்றம் காரணமாகவும் இரவு உணவையும் உங்களுக்கு serve பண்ண முடியல. யாரும் ஸீட்டை விட்டு எழ வேண்டாம். தயவுசெய்து பயணிகள் ஒத்துழைப்பு கொடுக்கவும்’னு விமானப் பணிப்பெண் அறிவிச்சாங்க.

கதை கேளு..கதை கேளு

விமானம் மேலும் கீழுமா போக ஆரம்பிச்சுது. controlல இல்லாத மாதிரி இருந்துச்சு. இப்போ நிறைய பேர் நிஜமாகவே பயப்பட ஆரம்பிச்சுட்டாங்க. சிலர் அழக்கூட செய்தாங்க. மொத்தமா எல்லாருடைய முகத்துலயும் பயமும், அதிர்ச்சியும். ரொம்பவும் பயந்துபோன பெரியவர், மறுபடியும் அந்த சின்னப் பொண்ணைப் பார்த்தார். எதைப் பத்தியும் கவலைப்படாம story bookலேயே மூழ்கி இருந்தா. அப்பப்போ கண்ணை மூடி கதையை ரசிச்சி படிச்சுட்டு இருந்தா. அவளைப் பார்க்க பார்க்க ரொம்ப அதிசயமா இருந்துச்சு அந்த பெரியவருக்கு. 'எல்லாரும் உயிர் பயத்தோட இருக்கோம். இந்த சின்னப்பொண்ணு மட்டும் தைரியமா இருக்காளே... அவளுக்கு ஒண்ணும் தெரியாதா, இல்ல பயமே இல்லையா..?’னு நினைச்சு பிரமிப்பா பார்த்துட்டே இருந்தார்.

கொஞ்ச நேரத்துல அந்த அபாய கட்டத்தை விமானம் தாண்டிடுச்சு. ''பயணிகள் இனி கலக்கம் அடைய வேண்டாம். சீரான தட்பவெப்ப நிலை நிலவும் இடத்துக்கு வந்துட்டோம்... இப்போ உங்களுக்கு உணவு வழங்க ஆரம்பிக்கப் போறோம். நன்றி!''னு  அறிவிச்சாங்க. அப்பத்தான் எல்லாருக்கும் நிம்மதியே வந்துச்சு. 'அப்பாடா’னு சலசலக்க ஆரம்பிச்சாங்க. அந்தப் பெரியவர், மறுபடியும் ஆர்வமா அந்தப் பொண்ணு என்ன செய்யறானு பார்த்தார். இப்பவும் அதே புத்தகத்தைதான் படிச்சுட்டு இருந்தா. முகத்துலயும் எந்த மாற்றமும் இல்ல. ஒரு வழியா லண்டன் விமான நிலையம் போய் இறங்கிச்சு அந்த விமானம்.

Luggage எடுக்கற இடத்துல அந்தச் சின்னப்பொண்ணைத் தேடி, இந்தப் பெரியவர் போனார். அவகிட்டே தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டார். அப்புறம் அவரோட சந்தேகத்தைக் கேட்டார். ''எப்படிம்மா, விமானம் அவ்வளவு ஆபத்தா போயிட்டு இருக்கும்போதுகூட எதுக்கும் பயப்படாம கதைப் புத்தகத்தை படிச்சிட்டு இருக்க முடிஞ்சது? உனக்கு பயமே கிடையாதா?'’னு கேட்க, சிரிச்சுக்கிட்டே அந்தக் குட்டிப்பொண்ணு என்ன சொன்னா தெரியுமா?

''அங்கிள், நான் ஏன் பயப்படணும்? அந்த விமானத்தை ஓட்டினவர் என்னுடைய அப்பா. என்னை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திருக்கார். பத்திரமாத்தானே ஓட்டுவார்?!''னு சொல்லி டாடா காட்டிட்டுப் போயிட்டா.

இதுதானே நம்பிக்கை. இப்படித்தான் உங்க அப்பா, அம்மாவை நீங்களும் நம்பணும். அவங்க எது செய்தாலும், சொன்னாலும் உங்க நன்மைக்குத்தான். இன்னொருவிதமா சொல்லணும்னா, கடவுள் நம்பிக்கை. எந்தக் கஷ்டம் வந்தாலும் நான் வணங்கும் கடவுள் என்னோட இருக்கார். எனக்கு பயம் கிடையாது. இதுவும் கடந்து போகும்னு நம்பணும்.

சரியா குட்டீஸ்?!

- இன்னொரு கதை..?
நாளைக்கு சொல்றேன்!

 விமானம் பத்தி கொஞ்சம் இன்ஃபோ!

'பறவைபோல வானில் பறக்கணும்'ங்கறது... ஆதிகாலத்துல இருந்தே மனுஷனோட ஆசை. நம்ம ஆட்கள் கற்பனையா உருவாக்கியிருக்கற தேவதைகளுக்கு இறகு முளைச்சதும், அந்த ஆசையோட வெளிப்பாடுதான். இப்படி கற்பனையா இருந்த பறக்கும் ஆசை, நிஜமானது விமானம் கண்டுபிடிச்ச பிறகுதான். முதன் முதலா விமானத்தைக் கண்டுபிடிச்சது, அமெரிக்க நாட்டைச் சேர்ந்த சகோதரர்கள் Orville Wright மற்றும் Wilbur Wright. . இவங்கள Wright Brothers’னு சொல்வாங்க. 1903-ம் வருஷம், டிசம்பர் 17-ம் தேதி எரிசக்தியைப் பயன்படுத்தியும், வேகத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய இன்ஜினை (power control engine) பயன்படுத்தியும் முதன்முதலா விமானத்தை ஓட்டி வரலாறு படைச்சாங்க இந்த பிரதர்ஸ். 10 அடி உயரத்துல பறந்து 120 அடி தூரம் போய், திரும்பவும் தரை இறங்கறதுக்கு அவங்க எடுத்துக்கிட்ட நேரம், 12 விநாடிகள். முதன் முதலா விமானம் ஓடின நேரம்னு வரலாறுல பதிவாகியிருக்கறது... இந்த 12 விநாடிகள்தான். 20-ம் நூற்றாண்டோட மிகப்பெரிய கண்டுபிடிப்பான விமானம், இப்போ பல new technology ஹ்யோட, போக்குவரத்துல முக்கிய பங்கு வகிக்கறது உங்களுக்கெல்லாம் தெரியும்தானே!

குட்டீஸ்... நீங்க எல்லாரும் ஒருநாள் விமானத்துல போகும்போது, ஆன்ட்டி சொன்ன இந்தக் கதை ஞாபகம் வரும்தானே?!