மற்ற எபிசோடுகள்
Published:Updated:

' ரங்கோலி' பொண்ணுக்கு...மாப்பிள்ளை வேணும் !

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

ரிமோட் ரீட்டா

 ##~##

''சன் டி.வி 'பொம்மலாட்டம்’ சீரியல்ல... 'பாரதி’ பொண்ணு, எவ்ளோ சமர்த்தா ஃபேமிலி பிரச்னைகளை சமாளிக்கிறா! ஒவ்வொருத்தர் வீட்லயும் இப்படி ஒரு பொண்ணு இருந்துட்டா போதும்டி ரீட்டா!''னு பக்கத்து வீட்டு ஆன்ட்டி கொட்டின பாராட்டுகளைக் கொண்டு போய் சேர்த்துடுவோம்னு, 'பாரதி’யா கலக்கிட்டு இருக்கிற சிரிஜாவை பார்க்கப் போனேன்.

''ரீட்டா... இதுதான் நம்மோட முதல் சந்திப்பு. ஆனா, 'விகடனுடன் எனக்கு ஏற்கெனவே அறிமுகம் ஆயாச்சு. அதாவது, 'விகடன் டெலிவிஸ்டாஸ்’ குடும்பத்தில் நான் இணைஞ்சு ஆறு வருஷத்துக்கும் மேல ஆயிடுச்சு. யெஸ்... இங்கே தமிழ்ல சூப்பர் டூப்பர் ஹிட் ஆன 'கோலங்கள்’ சீரியலோட கன்னட வெர்ஷன்... 'ரங்கோலி’. அதுல நான்தான் ஹீரோயின். போன வருஷம்தான் அங்க டெலிகாஸ்ட் முடிஞ்சுது! அங்கயும் சூப்பர் டூப்பர் ஹிட்''னு சென்டிமென்டா ஆரம்பிச்சாங்க சிரிஜா.  

''10 வருஷத்துக்கு முன்ன ராஜ்கிரண் சாரோட 'கொஞ்சி பேசலாம்’ படத்துல நடிச்சுருக்கேன். அதுக்கு அப்புறம் சென்னைக்கு டாட்டா சொல்லியாச்சு. தமிழ் சீரியல் உலகத்துல 'பொம்மலாட்டம்’தான் முதல் என்ட்ரி. 'பாரதி’ கேரக்டருக்கு அவ்வளவு பாராட்டுகள். குடும்பத்தை கட்டுக்கோப்பா, அவ்வளவு அன்போட கொண்டுபோற கேரக்டர்''னு உற்சாகமா பேசினவங்க, தன் குடும்பம் பற்றி பேசும்போது கொஞ்சம் ஸ்ருதி குறையறாங்க.

' ரங்கோலி' பொண்ணுக்கு...மாப்பிள்ளை வேணும் !

''பெங்களூருவுல இருக்கற என் வீட்டை ரொம்பவே மிஸ் பண்றேன் ரீட்டா. அம்மா, அப்பா, அக்கா, நான்னு குட்டி க்யூட் குடும்பம். சென்னையில மாசத்துல 10 நாள்தான் இருப்பேன். மீதி நாள் எல்லாம் வீட்டுக்கு ஓடிருவேன். கன்னடத்துல ரெண்டு சீரியல் போயிட்டிருக்கு எனக்கு. இப்போ அக்காவுக்கு திருமணம் முடிச்சாச்சு. ரொம்ப வருஷமா பிளான் போட்டு வெச்சுருந்த என்னோட 'டிரீம் ஹவுஸ்’ஸ கட்டி முடிச்சு, அம்மா அப்பாவுக்கு என்னோட கிஃப்டா கொடுத்தாச்சு. அடுத்ததா வீட்டுல எனக்கு

' ரங்கோலி' பொண்ணுக்கு...மாப்பிள்ளை வேணும் !

மாப்பிள்ளை பார்க்கும் படலமும் தொடங்கியாச்சு. எப்படியும் 2013 முடியறதுக்குள்ள உனக்கு இன்விடேஷன் வெச்சுடுவேன்!''னு கன்னம் சிவக்க முடிச்சாங்க சிரிஜா!

அதுல இருந்து 'அம்மா' ரோல் பண்ணுவீங்களா..?!

''பொறாம புடிச்சவ, தனக்கு மட்டும்னு வாழற பொண்ணு... இப்படியெல்லாம் தமிழ்நாட்டுத் தாய்க்குலங்கள்கிட்ட தினமும் திட்டு வாங்கிட்டு இருக்கேன் ரீட்டா. நன்றி, சன் டி.வி 'தியாகம்’, 'மருதாணி’ சீரியல்ஸ்! ரெண்டு சீரியல்லயுமே... நெகட்டிவ் ரோல் பண்றது, எனக்குப் பயங்கரமான வில்லினு பேர் வாங்கிக் கொடுத்திருக்கு''

- கலகலனு சிரிக்கறாங்க சரஸ்வதி.

''சின்ன வயசுல இருந்தே சென்னையில இருந்தாலும், பூர்விகம் தெலுங்கு தேசம். அப்பா அங்கே நிறைய படங்களுக்கு மேனேஜரா வொர்க் பண்ணினார். தெலுங்குல முப்பதுக்கும் மேற்பட்ட படங்கள்ல நடிச்சிருக்கேன். தமிழ்ல ஜெயா டி.வி-யில ஒளிபரப்பான 'கிரிஜா எம்.ஏ’தான் முதல் சீரியல். அடுத்தடுத்து சன்.டி.வி 'நம்பிக்கை’, 'மருதாணி’, 'தியாகம்’னு போயிட்டிருக்கேன்!''னு கடகடனு கொட்டின சரஸ்வதியோட குடும்பத்துல மொத்தம் மூணு சேனல் ஸ்டார்ஸ் இருக்காங்க.

''நான், 'அத்திப்பூக்கள்’ல நடிச்ச ராணி, 'துளசி’ சீரியல்ல வர்ற வரலட்சுமி மூணு பேரும் சிஸ்டர்ஸ்னு உனக்குத் தெரியும்தானே?! சின்னத்திரையில சீரியல் நேரத்தில் டியூன் பண்ணினா, எங்க மூணு பேருல யாராவது ஒருத்தர் முகத்தை பார்த்தே ஆகணும் ரீட்டா!''னு சிரிச்சாங்க சரஸ்வதி!

ஒன்... டூ... த்ரீ!

கிச்சன் சூப்பர் ஸ்டார் - டபுள்ஸ்!

'பார்த்து ரொம்ப நாளாச்சே..!’னு பாலாஜிக்கு ஒரு எஸ்.எம்.எஸ். தட்டிவிட்டேன்.

''விஜய் டி.வியோட 'கிச்சன் சூப்பர் ஸ்டார் - டபுள்ஸ்’ ஷூட்ல இருக்கேன் ரீட்டா. ஃப்ரீ’யா இருந்தா வாயேன்!''னு கூப்பிட, கிளம்பிட்டேன்.

ஸ்டூடியோ செட்டுக்குள்ள நுழைஞ்சதும், ''எங்க எல்லாரையும் மொத்தமா இங்க எதிர்பார்த்திருக்க மாட்டியே!''னு சர்ப்ரைஸ் கொடுத்தாங்க, லஷ்மி, அம்மு, நீபா, 'ஆர்.ஜே.’ கோபி, பாலாஜினு ஒரு பட்டாளம்.

' ரங்கோலி' பொண்ணுக்கு...மாப்பிள்ளை வேணும் !

''இது 'கிச்சன் சூப்பர் ஸ்டார் - டபுள்ஸ்’ ரீட்டா. இதுக்கு முன்ன சிங்கிள் செலிப்ரிட்டியா வந்து இந்த நிகழ்ச்சியில் கலக்கினாங்க. இப்போ... 'டபுள்ஸ்’... அதாவது செலிப்ரிட்டி, தனக்குத் துணையா ஃப்ரெண்ட், கெஸ்ட், குடும்ப நபர்னு யாரையாவது அழைச்சுக்கலாம். ஜனவரி 28-ல இருந்து திங்கள் தொடங்கி வெள்ளிக்கிழமை வரை மாலை 7 மணிக்கு உங்க வீட்டு ஹால்ல நாங்க சமைக்கிறோம்!''

- அம்முவும், லஷ்மியும் விளக்கம் கொடுக்க,

''ஸ்டூடியோ வாசல்ல எப்பவும் ஆம்புலன்ஸ் நிக்கும். இவங்க சமைக்கிற சாப்பாட்டை டேஸ்ட் பண்ண ரிஸ்க் எடுக்கற ஜட்ஜஸுக்காக!''னு கலாய்ச்சார் பாலாஜி!

டபுள் டிலைட்!

 வாசகிகள் விமர்சனம் ஒவ்வொன்றுக்கும் பரிசு:

' ரங்கோலி' பொண்ணுக்கு...மாப்பிள்ளை வேணும் !

150

3,000 மாணவிகள்... ஒரே ஒரு கழிப்பறை!

''அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விஜய் டி.வி, 'நீயா... நானா?’ நிகழ்ச்சி அது. 'அரசு கல்லூரியில் மூவாயிரத்துக்கும் அதிகமான மாணவிகள் இருந்தாலும்... ஒரே ஒரு கழிப்பறைதான் இருக்கிறது. அதிலும் தண்ணீர் வசதி கிடையாது. தொலைதூரத்திலிருந்து படிக்க வரும் இளம் பெண்கள், நாள் முழுவதும் கழிப்பறைக்கு செல்லாமல் எப்படி இருக்க முடியும்?' என்ற குமுறல்களைக் கேட்டு... எனக்கு 'திக்’ கென்றது. அப்போது, தனியார் கல்லூரி மாணவிகள் எழுந்து நின்று, சிரமங்களைத் தாங்கிக் கொண்டு படிப்பை தொடரும் அரசு கல்லூரி மாணவிகளைப் பாராட்டியது நெகிழ வைத்தது. நிகழ்ச்சியை நடத்தும் கோபிநாத், இயக்குநர் ஆண்டனி  ஆகியோர், அந்த அரசுக் கல்லூரியின் கழிப்பறை வசதி மேம்பாட்டுக்    காக ஒரு லட்ச ரூபாயை வழங்கியது பாராட்டுக்குரியது'' என்று வாழ்த்துகிறார்கள் மயிலாப்பூரைச் சேர்ந்த உஷா மற்றும் மதுரையைச் சேர்ந்த நர்கிஸ் பாத்திமா.

டெங்கு செய்யும் மாயம்!

''அது, கொசு ஒழிப்பான் விளம்பரம். அதைப் பயன்படுத்தியதில் திருப்தியடைந்த மூதாட்டி, 'இனி, இங்கே ஒரு கொசுவையாவது பிடித்துக் காட்டுங்கள் பார்க்கலாம்' என்பதாக சேலஞ்ச் செய்கிறார். களமிறங்கிய கணவரோ... தங்கள் இளமைக்கால புகைப்படத்தை தேடிக் கண்டுபிடித்த குஷியில் ஆர்ப்பரிக்கிறார். ஆனால், 'நீங்கள் கொசுவை பிடிப்பதாக அல்லவா பெட் கட்டினீர்கள்' என்று கிண்டலடிக்கிறார் மனைவி. கணவருடனான மலரும் நினைவுகளைக்கூட தள்ளி வைக்கும் அளவுக்கு... 'கொசு ஒழிப்பான்' அவருக்கு முக்கியமாகி இருக்கிறது. டெங்கு பீதி, கொசுக்கடியால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்க ளுக்கு ஆறுதல் அளிக்கும்விதமாக அமைந்திருக்கிறது விளம்பரம்'' என்று புளகாங்கிதம் அடைகிறார் மதுரையைச் சேர்ந்த பி.எஸ்.லஷ்மி.