Published:Updated:

கதை கேளு... கதை கேளு!

கதை கேளு... கதை கேளு!

கதை கேளு... கதை கேளு!
##~##

தையை ஆரம்பிக்கலாமா குழந்தைங்களா..?!

 ஒரு ஊர்ல ரெண்டு ஆன்ட்டீஸ், friendsஸா இருந்தாங்க. அதுல ஒரு ஆன்ட்டி, ரொம்ப வசதியானவங்க. கூடவே... தற்பெருமையும், முன்கோபமும் அவங்களுக்கு அதிகம். இன்னொரு ஆன்ட்டிக்கு வசதி ரொம்பக் குறைவு. ஆனா... ரொம்ப தன்னடக்கமும், இரக்க குணமும் உள்ளவங்க.

எல்லா இடங்களுக்கும் ரெண்டு பேரும் சேர்ந்தே போவாங்க. எப்பவும் அந்த பணக்கார ஆன்ட்டி, கர்வத் தோடயே நடந்துப்பா. இதைப் பத்தி, கணவர்கிட்ட சொல்லி வருத்தப்படுவா இன்னொரு ஆன்ட்டி. அவரும், ''அவ உன் friend தானே... அதனால் அந்தக் கெட்ட குணத்தை பெரிசு பண்ணாம, எப்பவும் போல நல்ல விதமாவே பழகு. ஒருநாள் தவறை உணர்ந்து திருந்திடுவா''னு மனைவிக்கு ஆறுதலா பேசுவார். பல வருடங்கள் கடந்தும், அந்த ஆன்ட்டி திருந்துற மாதிரியே தெரியல.

கதை கேளு... கதை கேளு!

ஒரு தடவை, ஒரு கல்யாணத்துக்கு ரெண்டு ஆன்ட்டியும் சேர்ந்து போனாங்க. அப்போ பணக்கார ஆன்ட்டிகிட்ட ஒருத்தர், ''உங்க கூட வந்திருக்குறது யாரு?''னு கேட்டார். உடனே, ''என் வீட்டு வேலைக்காரி''னு இவங்க பதில் சொன்னது... ஏழை ஆன்ட்டிக்கும் கேட்டுடுச்சு. அழுதுட்டே வீடு திரும்பினவ, கணவர்கிட்ட போய்ச் சொல்ல... அவரும் ரொம்ப sad ஆகி, 'நம்ப வருமானத்தை வெச்சு மனைவியை நல்ல நிலமையிலே வைக்க முடியலையே'னு கவலையோடு கோயிலுக்குப் போனார். அங்க மரத்தடியில் சோகமா உட்கார்ந்துட்டு இருந்தவரைப் பார்த்துட்டேயிருந்த ஒரு சாது, ''என்னப்பா கவலை?''னு பரிவோடு கேட்டார். இவரும் மனக்கஷ்டம், பணக்கஷ்டத்தை எல்லாம் சொன்னார்.

மனமுருகிப்போன சாது, மூணு தேங்காய்களைக் கொடுத்து, ''இதைக் கொண்டு போய் உன் மனைவிகிட்ட கொடு. ஒரு விருப்பத்தைச் சொல்லி, ஒரு தேங்காயை உடைச்சா, அது உடனே நிறைவேறும். இப்படி உங்களுடைய மூணு விருப்பங்களை யும் நிறைவேத்திக்கிட்டு, சந்தோஷமா வாழ்க்கையை நடத்துங்க. இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்!''னு சொல்லி அனுப்பினார்.

சந்தோஷமா வீட்டுக்கு வந்த அந்த uncle, கோயிலில் நடந்த விஷயங்களை மனைவிகிட்ட சொல்லி தேங்காய்களைக் கொடுத்தார். அவ ரொம்ப சந்தோஷமாகி... 'முதல் தேவை, நல்ல வீடு. சரி, நமக்கு அழகான பெரிய வீட்டைக் கேட்கலாம்’னு முதல் தேங்காயை உடைச்சா. அவங்க இருந்த வீடு... பெரிய bungalowவா மாறிடுச்சு. ரெண்டு பேருக்கும் சந்தோஷம் தாங்கல. 'ரெண்டாவதா என்ன கேட்கலாம்'னு யோச்சவளுக்கு, பல நாட்கள் சாப்பாடுகூட இல்லாம பட்டினியா இருந்தது நினைவுக்கு வரவே... 'நல்ல சாப்பாடு கேட்கலாம்'னு ரெண்டவது தேங்காயை உடைச்சா. உடனே dining table முழுக்க விதம்விதமான சாப்பாடு ready! ஆசையோடு சாப்பிட்டாங்க ரெண்டு பேரும்.

கதை கேளு... கதை கேளு!

'மூணாவதா என்ன கேக்கலாம்?'னு பொறுமையா யோசிச்சா ஆன்ட்டி. புத்திசாலித்தனமா என்ன கேட்டா தெரியுமா? ''நாங்கள் ரெண்டு பேரும் உயிரோடு இருக்குறவரை இந்த வீடும், சுவையான உணவும் எப்போதும் எங்களுக்கு இருக்கணும்''னு கேட்டா. மனைவியோட புத்திசாலித்தனத்தை நினைச்சு கணவரும் பெருமைப்பட்டார். அப்படியே அவங்க அந்தப் பெரிய வீட்டில் தினமும் விதவிதமான சுவையான சாப்பாடு சாப்பிட்டு சந்தோஷமா வாழத் தொடங்கினாங்க.

இதையெல்லாம் கேள்விப்பட்ட பணக்கார ஆன்ட்டிக்கு... ஆச்சர்யத்தோட, பொறாமையும் வந்துடுச்சு. தினமும் இவ வீட்டுக்கு வந்து, 'இவ்வளவு வசதியா வாழறதுக்கு இவங்களுக்கு பணம் எப்படி வந்திருக்கும்'னு ஆராய்ச்சி பண்றதே வேலையாயிடுச்சு அவளுக்கு. ஆனாலும் அவளால எதையும் கண்டுபிடிக்க முடியல. ஒரு நாள், ''ஏய், உண்மையைச் சொல்லு. எப்படி திடீர்னு உங்களுக்கு இவ்வளவு பணம்? உன் கணவர் எங்கே திருடினார்? உண்மையைச் சொல்லலைனா... policeகிட்டே சொல்லிடுவேன்''னு தோழியை மிரட்டினா. பயந்து போன அவ, நடந்த உண்மைகளை சொல்லிட்டா.

ஆச்சர்யத்தோட வீடு திரும்பின பணக்கார ஆன்ட்டி, தன் கணவர்கிட்ட இதையெல்லாம் சொல்லி, ''உடனே அந்தக் கோயிலுக்குப் போய் எப்படியாவது சாதுகிட்டே இருந்து மூணு தேங்காய்களை வாங்கிட்டு வாங்க. தேங்காய் இல்லாம வீட்டுக்கு return  ஆகக்கூடாது’'னு விரட்டிவிட்டா. 'தேங்காய் கிடைக்கலைனா வீட்டுக்குப் போகமுடியாதே'ங்கற கவலையோடு கோயில்ல உட்கார்ந்திருந்தார். ரொம்ப நேரமா இவரை பார்த்திட்டே இருந்த அதே சாது, ''என்னப்பா விஷயம், ஏன் கவலையா இருக்கே?''னு அன்போட கேட்டார்.

உண்மையை மறைக்காம அத்தனையையும் சாதுகிட்ட சொன்னார் அந்த uncle. அவரோட நிலைமையை உணர்ந்த சாது, ''கவலைப்படாதே... உனக்கும் மூணு தேங்காய் தர்றேன். கொண்டுபோய் உன் மனைவிகிட்ட கொடு''னு சிரிச்சுக்கிட்டே கொடுத்தார். அவருக்கு பலமுறை நன்றி சொல்லிட்டு, தேங்காய்களோடு வீட்டுக்குப் போனார்.

கதை கேளு... கதை கேளு!

பணக்கார ஆன்ட்டிக்கு சந்தோஷம் தாங்கல. 'அவ மொதல்ல என்ன கேட்டிருப்பா...?’னு யோசிச்சுட்டே முதல் தேங்காயை எடுத்து கையில வெச்சுட்டு இருந்தா. ''உனக்கு என்ன தேவையோ அதைக் கேள்... ஏன் அடுத்தவங்க விஷயத்தில் மூக்கை நுழைக்கிறே?''னு கணவர் கேட்டார்.

வழக்கம்போல முன்கோபம் எட்டிப் பார்க்க... ''நான் அப்படித்தான் இருப்பேன். ஆயிரம் மூக்கு இருந்தா... ஆயிரம் பேர் விஷயத்தில்கூட மூக்கை நுழைப்பேன்''னு கோபமா கத்திட்டே, தன்னையும் அறியாம முதல் தேங்காயை உடைச்சுட்டா. அவ்வளவுதான்... உடனே அவ உடம்பு முழுக்க ஆயிரம் மூக்குகள் முளைச்சுடுச்சு. இதைப் பார்த்துப் பயத்துலயும் tensionலயும் தவிச்சவ... ''ஐயோ கடவுளே... எல்லா மூக்குகளும் உடனே மறையட்டும்''னு சொல்லி ரெண்டாவது தேங்காயை உடைச்சா. என்னாச்சு தெரியுமா? அந்த ஆயிரம் மூக்கோட சேர்ந்து இவளோ ஒரு மூக்கும் காணா போயிடுச்சு.

''ஐயையோ... எனக்கு இருந்த மூக்கும் போயிடுச்சே... என்ன செய்வேன்''னு அழ ஆரம்பிக்க... ''அதுதான் இன்னொரு தேங்காய் இருக்கே... எனக்கு என் பழைய மூக்கு திரும்ப வேணும்னு சொல்லி அந்தத் தேங்காயை உடைச்சுடு''னு கணவர் சொன்னார். அப்படியே மூணாவது தேங்காயை உடைக்க, பழைய மூக்கு திரும்பக் கிடைச்சுது.

''உன்னோட பொறாமை, முன்கோபம் இதெல்லாம்தான் உனக்கு எதையுமே கிடைக்க விடாம செய்துடுச்சு'’னு கணவர் சொல்ல... அந்த நிமிஷமே கணவர்கிட்ட sorry கேட்டவ... தோழியையும் தேடிப்போய் sorry கேட்டா. அதிலிருந்து அவங்க ரெண்டு குடும்பங்களும் ஒற்றுமையா, சந்தோஷமா வாழ்ந்தாங்க!

என்ன குட்டீஸ்... கோபம் வேண்டாம்தானே?! கோபத்திலே எதையும் சரியா சிந்திக்க முடியாது, செய்யவும் முடியாது... okவா?!

இன்னாரு கதை..?
நாளைக்கு சொல்றேன்!

தெங்கம்காய்... தென்னங்காய்!

கதை கேளு... கதை கேளு!

மக்கெல்லாம் தேங்காய்களைத் தரும், coconut tree உலகத்தில் முதன் முதலில் எங்கு தோன்றியது என்பது உறுதியாகத் தெரியாது. என்றாலும், 'மலேசியா அல்லது இந்தோனேஷியாவில்தான் உலகத்தில் முதன் முதலாக தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டன' என்று நம்புகிறார்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். 2,000 ஆண்டுகளுக்கு முன்பான சமஸ்கிருத நூல்களிலும் ராமாயணம் மற்றும் மகாபாரத இதிகாசங்களிலும் இந்திய மக்கள் உணவுக் காகவும், தினசரி தேவைகளுக்காகவும் தென்னை மரத்தை பயன்படுத்தினார்கள் என்கிற தகவல் காணப்படுகிறதாம்.

இந்தியாவில் 'கல்ப விருட்சம்’ என்று coconut tree அழைக்கப்படுகிறது. மார்க்கோ போலோ கடல் வழி பயணமாக சுமத்ரா, இந்தியா, நிக்கோபார் தீவு என்று வந்தபோது... தேங்காயைப் பார்த்து வியந்து அதற்கு Pharaoh's nut என்று பெயரிட்டார்.

ஸ்பானிஷ் மற்றும் போர்ச்சுக்கல் கண்டுபிடிப்பாளர்கள், தேங்காயிலிருக்கும் மூன்று கண்களை, ஒரு குரங்கின் முகம் போலவும், மண்டை ஓடு போலவும் தெரிவதால் goblin என்ற வார்த்தையை வைத்து 'coco’ என்று பெயரிட்டார்கள். 1755-ம் ஆண்டு வெளிவந்த டிக்ஷனரியில்தான் 'coconut’ என்கிற வார்த்தை இடம் பிடித்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை, coconut tree என்பது தெற்கு பகுதியிலிருந்தே அதிகம் அறியப்படுவதால், அதன் பழம் தெங்கம்காய்... தென்னம்காய் என்று அழைக்கப்பட்டுள்ளது. பின்னாளில் மருவி, 'தேங்காய்’ என்று மாறிவிட்டது!