மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா!

விடைபெறுகிறாள் திருமதி செல்வம்... விரைந்து வருகிறாள் தெய்வ மகள்!ரிமோட் ரீட்டா

##~##

''திருமதி செல்வம் சீரியல் முடியப் போகுது!''

 - நியூஸ் கிடைக்க, ஷாக்கிங் சர்ப்ரைஸ்! அர்ச்சனா, செல்வம், நந்தினி, வாசு எல்லாம் இந்த அஞ்சரை வருஷத்துல கிட்டத்தட்ட நம்ம வீட்டு ஆளுங்களா ஆயிட்டாங்க. அவங்களுக்கு 'பை’ சொல்ற ஃபேர்வெல் ஃபீலிங் உங்களைப் போலவே இந்த ரீட்டாவுக்கும் வருத்தம்தான். 'திருமதி செல்வம்’ டீமுக்கு போன் போட்டேன்.

''ஹலோ ரீட்டா... ஷூட்டிங் எல்லாம் போன மாசமே முடிஞ்சுருச்சு. அதனால எல்லாரும் இப்போ கேரளா, சென்னை, பொள்ளாச்சினு ஒவ்வொரு திசையில் இருக்கோம்!''னு தகவல் கிடைக்க, ஒவ்வொருத்தரையா பிடிச்சேன்!

'அர்ச்சனா’@அம்மா வீடு!

அபிதாவுக்கு போன் போட்டா, மலையாளத்தில் சர்வீஸ் வாய்ஸ் கேட்டது.

''சீரியல் ஷூட்டிங் முடிஞ்சதும், பரீட்சை லீவுக்கு பறக்குற குழந்தை மாதிரி கோட்டயம்ல இருக்குற அம்மா வீட்டுக்கு வந்துட்டேன் ரீட்டா!''னு ஆரம்பிச்சாங்க அபிதா.

''திருமதி செல்வத்துல கமிட் ஆனப்போ, விகடன் டெலிவிஸ்டாஸ் சீரியல், அதனால நிச்சயம் ஹிட் ஆகும்னு நம்பினேன். ஆனா, சூப்பர் டூப்பர் ஹிட் சீரியல் ஆனது போனஸ் பூரிப்பு. காரணம், எங்க டீம்!

மாமியார் என்னை வீட்டைவிட்டு வெளியே தள்ளினது, செல்வமும் நானும் நல்ல நிலைமைக்கு வந்தது, நந்தினியால என் வாழ்க்கை பறி போனதுனு (!) சீரிய லோட இந்த முக்கியமான டர்னிங் பாயின்ட்டுகளில் எல்லாம்... தமிழ்கூறும் நல்லுலகத்துப் பெண்கள் எல்லாரும் எமோஷனலா ரியாக்ட் செய்ததைப் பார்த்தப்போ, எங்க சீரியலோட வெற்றியை உறுதி செய்து கொண்டாடிட்டே வந்தோம். இதோ... இப்போ க்ளைமாக்ஸ் பார்க்கப் போறீங்க. உங்க வீட்டுப் பொண்ணா எனக்கு அங்கீகாரம் வாங்கிக் கொடுத்த 'திருமதி செல்வம்’, என் கேரியரில் ரொம்ப ஸ்பெஷல்''னு பூரிச்ச அபிதா,

''அடுத்ததா, ஒரு படத்தில் வில்லனோட மனைவியா நடிக்கச் சொல்லி கேட்டிருக்காங்க. ரெண்டு, மூணு சீரியலுக்கான பேச்சுவார்த்தையும் நடந்துட்டு இருக்கு. ஆனாலும் 'அர்ச்சனா’வை மறந்துடமாட்டீங்கள்ல? நானும்தான்!''னு சிரிச்சாங்க.

கேபிள் கலாட்டா!

'மகளையும், மருமகளையும் மிஸ் பண்றேன்!’

''என் போட்டோவுக்கு மாலையைப் போட்டு, என் கேரக்டருக்கு எண்ட் கார்ட் போட்டப்போவே 'திருமதி செல்வம் முடியப் போகுதா?’னு கணிச்சு, போற இடத்துல எல்லாம் பெண்கள் எங்கிட்ட கேட்டாங்க. அந்த நியூஸ் ரீட்டா மூலமா அஃபீஷியலா ரிலீஸ் ஆயிருச்சா..?!''

- கணீர் குரலில் போனை எடுத்தாங்க வடிவுக்கரசி.

''திருமதி செல்வம் டீமை ரொம்ப மிஸ் பண்றேன் ரீட்டா. அதிலும் என் பொண்ணு அபிதாவையும், மருமகள் ராகவியையும் ரொம்பவே மிஸ் பண்றேன். ரெண்டு பேரும் எங்கிட்ட அவ்வளவு பாசமா இருப்பாங்க. டீம்ல எல்லாருமே இப்படி ஒருத்தரை ஒருத்தர் மிஸ் பண்ணி புலம்பிட்டுதான் இருக்கோம். ஆனாலும், 'டி.ஆர்.பி ஹிட் சீரியலோட ஆர்ட்டிஸ்ட்டுகள்' என்கிற பெருமை, எப்பவும் எங்ககிட்ட இருக்கும். 'அலைகள்’, 'திருமதி செல்வம்’னு விகடன் டெலிவிஸ்டாஸ் சீரியல்கள்ல நான் பண்ணின கேரக்டர்கள் எல்லாம் எப்பவும் பெண்கள் மனசுல நிலைச்சு நிற்கும் என்பது மகிழ்ச்சியான விஷயம். நன்றி!''னு எமோஷனல் ஆகி முடிச்சாங்க வடிவுக்கரசி.

கேபிள் கலாட்டா!

'பூங்காவனம்’ நாட் ரீச்சபிள்!

''ஹலோ... சிக்னல் வீக்... ஒண்ணும் கேட்கல ரீட்டா. சபரிமலையில இருக்கேன். இறங்கிட்டு பேசறேன் மா...''னு சொன்ன 'பூங்காவனம்’ ஜெயமணி சார், சொன்னபடியே சாயந்திரமே கூப்பிட் டார்.

''என்ன கண்ணு... ஃபேர்வெல் பேட்டியா?! புரொடக்ஷன் டீம், கிரியேட்டிவ் டீம், டெக்னிகல் டீம், ஸ்டார் டீம்... இது எல்லாத்துக்கும் சிகரம் வெச்ச மாதிரி... சன் டி.வி-யோட பிரமாண்டம்... இப்படி எல்லாமே சேர்ந்ததால 'திருமதி செல்வம்’ இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்கு. அதேபோல, சீரியலோட ஒவ்வொரு கேரக்டரும் மிகையில்லாம நிஜத்துக்கு நெருக்கமா இருப்பாங்க. குறிப்பா... என் கேரக்டரை, ரொம்ப ரசிச்சுப் பண்ணினேன். குடிகாரன் திருந்துற கேரக்டர். அடுத்ததா, ஒரு பயங்கரமான வில்லன் கேரக்டர் பண்ணணும்னு ஆசை!''னு பகபகனு சிரிச்சார் ஜெயமணி.

சாபம் ஓவர்!

''ஐயோ ரீட்டா... சில மாசமா தமிழ்நாட்டுத் தாய்க்குலங்கள்கிட்ட நான் வாங்குற சாபம் கொஞ்ச நஞ்சமில்ல. டைரக்டர் குமரன் சார் என் கேரக்டருக்கு வெச்சிருக்குற முடிவைவிட, இவங்களை எல்லாம் கேட்டா படுபயங்கர பனிஷ்மென்ட் முடிவை கொடுப்பாங்க. அந்தளவுக்கு கொதிச்சுப் போயிருக்காங்க. அதானே வேணும்!''னு சிரிச்சாங்க ரிந்தியா.

''சகோதர சகோதரிகளே... க்ளைமாக்ஸ் ரொம்ப அழகா வந்திருக்கு. இந்த மாசம் 'திருமதி செல்வம்’ டீமுக்கு சென்னையில ஒரு கெட் டுகெதர் மீட் இருக்கு. அப்போ நாங்க கொடுக்குற கலகல இன்டர்வியூல, அர்ச்சனாவும் நந்தினியும் ஆஃப் த ஸ்கிரீன் எவ்வளவு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்னு தெரிஞ்சுக்குவீங்க. அதுவரை, கீப் கர்ஸிங் மி!''னு ரிந்தியா சொல்ல, அந்த டேட் கேட்டு மறக்காம டைரியில நோட் பண்ணிட்டேன்.  

கேபிள் கலாட்டா!

க்ளைமாக்ஸ் ப்ளீஸ் கேப்டன்?!

''மெகா சீரியல் வரலாற்றிலேயே முதன்முறையாகனு சொல்லக்கூடிய அளவுக்கு... அஞ்சரை வருஷ எபிசோடையும், ரெண்டு மணி நேரத்துல அழகா புரொடியூஸர்கிட்ட சொல்லி, ஆரம்ப எபிசோட் முதல் கடைசி எபிசோட் வரை அப்படியே படம் பிடிச்ச ஒரே டைரக்டர் குமரனாத்தான் இருக்கும். தமிழ்ல மட்டுமில்ல... தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தினு மொத்தம் ஐயாயிரம் எபிசோடுகளைத் தாண்டி சக்கை போடு போட்டுட்டுஇருக்கு... 'திருமதி செல்வம்'. இது உண்மையிலேயே மிகப்பெரிய சாதனை...'' இப்படியெல்லாம் கதாசிரியர் மற்றும் இயக்குநர் குமரன் சார் பத்தி, சின்னத்திரை உலகத்துல ஒரே டாக்!

அத்தனையையும் காதுல ஏத்திக்கிட்ட நான்... ''வாழ்த்துக்கள் சார்''னு குமரனை போன்ல பிடிச்சேன். இது எதையுமே தலையில ஏத்திக்காம, நெஞ்சுல ஏத்திக்கிட்டவரா பேசின குமரன்...

''ப்ளீஸ் ரீட்டா... நான் பொள்ளாச்சியில இருக்கேன். பத்து நிமிஷத்துல கூப்பிடறேன்''னு அன்பா சொல்லி போனை வெச்சுட்டார். ஆனா, அடுத்த அஞ்சு நிமிஷத்துலேயே மொபைல் ஸ்கிரீனில் 'குமரன் காலிங்’. சும்மாவா... பெண்களோட மனசறிஞ்சு சீரியல்களை இயக்கறவராச்சே!

''ஸாரி ரீட்டா... ஷாட்ல இருந்தேன். விகடன் டெலிவிஸ்டாஸுக்காக நான் இயக்கற 'திருமதி செல்வம்', 'தென்றல்' ரெண்டு சீரியல்களுக்கும் மக்கள் கொடுத்திருக்கிற ஏகோபித்த ஆதரவு... எங்கள பிரமிக்க வெச்சுருக்கு. அடுத்தபடியா என்கிட்ட அவங்க என்ன எதிர்பார்ப்பாங்கனும் நல்லாவே புரிஞ்சுருக்கு. அந்த எதிர்பார்ப்புக்கும் மேல... அடுத்த படைப்பு இருக்கணும்னுதான் நெஞ்சு படபடத்துட்டே இருக்கு... அதுக்காகத்தான் இப்ப பொள்ளாச்சியில பரபரனு இயங்கிட்டிருக்கோம்... 'தெய்வ மகள்' சீரியலுக்காக! இதுவும் விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்புதான்.

கேபிள் கலாட்டா!

ஜெயா டி.வி ’மாயா’, விஜய் டி.வி 'ஆஹா’னு சீரியல்கள்ல நடிச்சுருக்கற வாணி, 'தெய்வ மகள்’ல நடிக்கிறார். தயாரிப்பாளர் 'அன்பாலயா’ பிரபாகரன் முக்கியமான கதாபாத்திரத்துல நடிக்கிறார். ஏற்கெனவே ரெண்டு சீரியல்களை இயக்கியிருந்தாலும்... புதுமுக டைரக்டர் மாதிரியான உணர்வு... பொறுப்பு... ஆர்வம்... இது அத்தனையோடயும்தான் 'தெய்வ மகள்’ சீரியலையும் இயக்கிட்டிருக்கேன். ஏன்னா... நம்ம தமிழ் மக்களை திருப்திபடுத்தியாகணுமே!''னு பயபக்தியோட சொன்னவர்,

''முதல் வாய்ப்பு 'திருமதி செல்வம்’. விகடன் டெலிவிஸ்டாஸ்ல ஆரம்பிச்சு டெக்னீஷியன்கள், நடிகர், நடிகைகள்னு எல்லாமே அருமையா அமைஞ்ச டீம். சன் டி.வி-ங்கற முக்கியமான பிளாட்ஃபார்ம். அதனாலதான் சீரியலை ஹிட் ஆக்க முடிஞ்சது. அதேபோலத்தான் 'தென்றல்' சீரியல். மூன்றரை வருஷமா அதுவும் நல்லா போயிட்டிருக்கு. இந்த ரெண்டு வெற்றிகளும் பயத்தை ஏற்படுத்தி, பொறுப்பை நல்லாவே உணர வெச்சுருக்கு''னு சொன்ன குமரன்கிட்ட...

''சரி சார்... அர்ச்சனாவும் செல்வமும் மறுபடியும் சேர்வாங்களா, நந்தினி கதி என்னாகும், என்னதான் சார் 'திருமதி செல்வம்' க்ளைமாக்ஸ்?''னு கேட்டேன்.

''நிறைய அழுதுட்ட அர்ச்சனாவை, இப்போ தன்னம்பிக்கைப் பெண்ணா, கால் டாக்ஸி டிரைவரா காட்டியிருக்கறதுக்கு நிறைய பாராட்டுகள் குவியுது ரீட்டா. அதேமாதிரி தொடரோட முடிவும் எல்லாரும் பாராட்டுற மாதிரி புதுமையாவும், பெண்ணுக்கு நியாயம் கிடைக்குற வகையிலும் இருக்கும். அர்ச்சனாவும் செல்வமும் சேரணும்னு பலர் சொல்றாங்க. 'அப்படி என்ன அவசியம்? பெண்கள் தனியா வாழ முடியாதா? தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிக்கணும்’னு பலர் கொதிக்கறாங்க. இந்த ரெண்டு தரப்பையும் கன்வின்ஸ் பண்ற நியாயமான முடிவை சொல்லிட்டுப் போவாள் 'திருமதி செல்வம்’. அது அர்ச்சனாவுக்கு மட்டுமில்ல, அர்ச்சனா நிலைமையில் இருக்குற கணவனால பாதிக்கப்பட்ட எல்லா பெண்களுக்குமான நியாயத்தைச் சொல்ற முடிவா இருக்கும்''னு அழகா பேசினாலும், கடைசி வரை க்ளைமாக்ஸை சொல்லவே இல்லை டைரக்டர்.

''சரி சரி... 'தெய்வ மகள்' பத்தியாவது சொல்லுங்க?''னு கேட்டேன்.

''ஞாயிற்றுக்கிழமையிலகூட லீவ் இல்லாம உழைக்கும் பெண்களோட அருமையை உணர வைக்கிற கதை!''னு 'தெய்வ மகள்' சீரியலுக்கு சூப்பரா லீட் கொடுத்து முடிச்சார் குமரன்.

'தெய்வ மகள்' வருக... வருக!

 அம்மா...

கேபிள் கலாட்டா!

'திருமதி செல்வம்' சீரியலில் செல்வமாக வாழ்ந்து காட்டியிருக்கும் சஞ்சீவ், ரொம்பவே அம்மா செல்லம். க்ளைமாக்ஸ் ஷூட்டிங் முடிந்த நிலையில், அவருடைய அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை என்று பறந்தோடினார். கூடவே இருந்து பார்த்துப் பார்த்து கவனித்துக் கொண்டபோதும்... சிகிச்சை பலனின்றி சஞ்சீவை விட்டுப் பிரிந்துவிட்டார் அவருடைய அன்பு அம்மா.

'மை ஹார்ட்ஃபுல் கண்டோலன்ஸஸ் மிஸ்டர் சஞ்சீவ்!'

வாசகிகள் விமர்சனம் ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா!

150

மறுஒளிபரப்பு... ப்ளீஸ்!

''ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணிக்கு சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'மகாபாரதம்’ தொடரின் பிரமாண்டம் ரசிக்க மட்டுமல்ல; மலைக்கவும் வைக்கிறது. தெரிந்த கதைதான்... ஆனால், காட்சி அமைப்பு அசத்தல்! விடுமுறை தினத்தில் ஒளி பரப்புவதால், இல்லத்தரசிகளுக்கு சில சமயம் தவறவிட வாய்ப்புள்ளது. எனவே, மறுநாள் அல்லது வார நாட்களில் அந்த வார எபிசோடை மறுஒளிபரப்பு செய்தால் மகிழ்ச்சியாக இருக்குமே'' என்று கோரிக்கை வைக்கிறார் நெல்லையைச் சேர்ந்த என்.கோமதி.

வேதனை தரும் விளக்கம்!

''சமீபத்தில் தொடங்கிய சின்னத்திரை தொடர் ஒன்றில், ஆண் நண்பர்கள் இருவர் பேசிக்கொள்ளும் டயலாக், 'அடச்சே' என்று சொல்ல வைப்பதாக இருந்தது. 'மனைவியுடன்தானே வெளியூரிலிருந்து வந்திருக்கிறீர்கள்?’ என்று ஒருவர் கேட்க... 'மனைவியுடன் வந்தால் ஜாலியாக இருக்க முடியுமா?’ என்று பதில் சொல்கிறார் மற்றவர். அத்துடன், 'ஜாலி' என்றால்... 'தண்ணி அடிப்பது' (டிரிங்க்ஸ்) என்று விளக்கம் வேறு தருகிறார். என்ன சீரியலோ... என்ன டயலாக்கோ...?'' என்று வேதனைப்படுகிறார் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பிருந்தா.