ரிமோட் ரீட்டா

##~## |
''எல்லாரும் பொண்ணு பொறந்துட்டா... செலவு வந்து பொறந்துடுச்சுனு நினைப்பாங்க. நான் அப்படி இல்லீங்க... மகாலட்சுமியே மகளா வந்து பொறந்தானு நினைச்சேன்...''
- இப்படி சன் டி.வி-யில 'தெய்வ மகள்’ சீரியல் 'ப்ரமோ’ ஒளிபரப்பாக தொடங்கின நாள்ல இருந்து இந்த ரீட்டாவோட மொபைல், ஆல் டைம் பிஸி!
''ஏண்டி ரீட்டா, ப்ரமோவே படுசுவாரசியமா இருக்கே... ஸ்டார்ஸ் செலக்ஷன்கூட சூப்பர்! பல்ஸ் பார்த்து கதை கொடுக்குற 'விகடன் டெலிவிஸ்டாஸ்' தயாரிப்பு வேற. தாய்க்குலங்கள் ஓட்டுகள ஒட்டுமொத்தமா 'தெய்வ மகள்’ அள்ளிடுவா!''னு மாத்தி மாத்தி பேசிட்டே இருந்தாங்க ஆன்ட்டீஸ், ஃப்ரெண்ட்ஸ், பாட்டீஸ் எல்லாரும்.
மார்ச் 25, உங்க ஒவ்வொருத்தர் வீட்டுக்குள்ளயும் 'தெய்வ மகள்!’ அட்டெண்டன்ஸ் போட்டிருப்பாளே!
''இது வேலைக்குப் போற பெண்களோட ஸ்கிரிப்ட்னு ஏற்கெனவே நீங்க சொல்லிஇருக்கீங்க. எங்க பிடிச்சீங்க இந்த கதைக் கருவை..?''னு 'சக்சஸ்ஃபுல்' டைரக்டர் குமரன்கிட்ட கேட்டேன்.

''கிட்டத்தட்ட 5 வருஷத்துக்கு மேல இருக்கும் ரீட்டா. இப்போ எப்படி டி.வி-யில 'தெய்வ மகள்’ ப்ரமோ போய்க்கிட்டிருக்கோ, அதேபோல அப்போ 'திருமதி செல்வம்’ ப்ரமோ டெலிகாஸ்ட் ஆகிட்டிருந்துச்சு. சைதாப்பேட்டையில 'திருமதி செல்வம்' முதல் ஷெட்யூல் ஷூட். வேலைக்குப் போயிட்டு வீடு திரும்பிட்டிருந்த பெண்கள்ல ஒருத்தர், ஷூட்டிங் ஏரியாவுக்குள்ள வந்தாங்க.

'வீட்ல இருக்கிற பெண்களோட சுக, துக்கங்களைதான் எப்பவும் சீரியல்ல காட்டுவீங்களா? எங்களைப் போல வேலைக்கு போயிட்டு வர்ற பெண்களுக்கும் எவ்ளோ கஷ்டநஷ்டங்கள் இருக்கும்!’னு சுருக்னு கேட்டாங்க. அப்ப கேள்வி கேட்ட பெண்தான் 'தெய்வ மகள்’. ஆமாம், அதுதான் இந்த சீரியலோட ஒன் லைன். அந்த 'தெய்வ மகள்' எங்க இருக்காங்கனு தெரியாது. ஆனா, நிச்சயமா இதைப் படிக்கறப்போவும், இந்த 'தெய்வ மகள்' சீரியல் பார்க்கறப்போவும் தெரிஞ்சுப்பாங்க... இந்த சீரியலுக்கு அவங்க தான் பிள்ளையார்சுழினு. இப்படி... தமிழ் நாட்டுல வேலைக்குப் போற, பிஸினஸ் பண்ற ஒவ்வொரு பெண்ணோட பிரதிபலிப்பாவும் தான் 'தெய்வ மகள்' நடமாடப் போறா. 'நிழலுக்கு' பிள்ளையார் சுழி போட்ட 'நிஜத்துக்கு' நன்றி கள்!''னு நெகிழ்ந்து சொன்னார் குமரன்.

'அன்பாலயா' பிரபாகரன், அவங்க பொண்ணா வர்ற வாணி போஜன், வில்லன் ரோல்ல ஆர்ட் டைரக்டர் ஜேகே, 'திருமதி செல்வம்’ - 'தென்றல்’ டெக்னீஷியன்ஸ், 'ஹெச்டி' (HD) கேமரா, சினிமாவில் பயன்படுத்துற லென்ஸ், பொள்ளாச்சி, ஆனைமலைனு சினிமா ஸ்பாட்கள்லயே ஷூட்டிங்... இப்படி 'தெய்வ மகள்’ பத்தின டாக், சின்னத்திரை இண்டஸ்ட்ரியில ரொம் பவே பரபரப்பா இருக்க... நாயகி வாணி போஜனுக்கு 'ஹாய்' சொல்லப் போனேன்.
''இனி நீங்கதான் தமிழ் நாட்டோட 'தெய்வ மகள்’ போல''னு சொன்னா, முகம் எல்லாம் ஆனந்தம் வாணிக்கு.
''ஹாய் ரீட்டா... எனக்கு சொந்த ஊர் ஊட்டி. அப்பா போட்டோகிராஃபர். அம்மா ஹோம்மேக்கர். ஒரே அண்ணன். ப்ளஸ் டூ முடிச்ச கையோட எனக்கு 'கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ்'ல வேலை கிடைக்கவே குடும்பத்தோட சென்னைக்கு வந்தாச்சு. மூணு வருஷம் வேலை பார்த்தேன். மாடலிங் ரொம்ப இஷ்டம்ங்கிறதால, 150-க்கும் மேல விளம்பரங்கள்ல நடிச்சிருக்கேன். சினிமா வாய்ப்பு வந்தாலும், 'நோ’ சொல்லிட்டேன். விஜய் டி.வி. 'ஆஹா’, ஜெயா டி.வி 'மாயா’ - இது ரெண்டும் சின்னத்திரையில் நல்ல விசிட்டிங் கார்ட் கொடுக்க... மெகா பிரைஸா, இப்போ நான் 'தெய்வ மகள்'!

டைரக்டர் குமரன்... தயாரிப்பு விகடன் டெலிவிஸ்டாஸ்... இது ரெண்டையும் சொன்னதுமே, சட்டுனு தலையாட்டிட்டேன். கதையையெல்லாம் கேட்டுக்கவே இல்ல''னு பூரிப்போட சொன்ன வாணி,
''இந்த சீரியல்ல என்னோட காஸ்ட் யூம்ஸ் பத்தி சொல்லியே ஆகணும் ரீட்டா. எனக்குனு ஒரு காஸ்ட்யூம் டிசைனரே இருக்கார். அதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா... நீ அசந்துடுவே...'' என்று ஆர்வத்தைக் கூட்டி, தொடர்ந்தார்.
''இதுக்கு முன்ன வீட்ல, வெளி ஃபங்ஷன் களுக்குகூட இப்படி காஸ்ட்யூம்ல போனதில்ல. லெகங்கா சாரி, அம்பர்லா கட் அனார்கலி, ஸ்டைலிஷ் சுடிதார், எத்னிக் பிளவுஸ்னு அடுக்கிக்கிட்டே போகலாம். அத்தனையும் டிஃபரென்ட் டிஃபரென்ட் ஸ்டைல்ஸ்.
சீரியல்ல என்னோட கல்யாணத்துக்காக பிரத்யேகமா டிசைன் பண்ணின பட்டு சாரி ஒண்ணு இருக்கு பாரு... அடடா! என்னோட மாப்பிள்ளை வீட்ல இருந்து 3 லட்ச ரூபாய்ல எடுத்துக் கொடுக்குற திருமண சீர்ப் பட்டு. பார்த்ததுமே பிரமிச்சுட் டேன். சீரியல பார்த்துட்டு, ஒவ்வொரு வீட்லயும் திருமண வயசுல இருக்கற பொண்ணுங்க ஒவ்வொருத்தருமே அந்த சாரியோட காதலியா நிச்சயம் மாறிடுவாங்க''னு சிரிச்ச வாணி,
''ஷூட்டிங் முடிஞ்ச பிறகு, எடுத்த ஸீன்ஸ், போட்டோகிஃராப் எல்லாத்தையும் ரீவைண்ட் பண்ணி பார்த்தா... ஸ்கீரின்ல வர்ற என்னை, என்னாலயே நம்ப முடியல. சீரியல தொடர்ந்து பார்க்கப் போற தமிழ்நாட்டு சகோதரிகள்... என்னைவிட என் காஸ்ட்யூம்ஸை ரொம்பவே லைக் பண்ணுவாங்க.
தாவணீஸ், சல்வார்ஸ், சாரீஸ்னு நான் போட்டுட்டு வர்ற டிரெஸ் எல்லாம் அசத்தல் ரகமா இருக்கும். இனி, ஆபீஸ் போற பொண்ணுங்களோட டிரெஸ் டிரெண்ட்டையே மாத்தி யோசிக்க வெச்சுடுவோம்னு நினைக்கறோம். உனக்கே நிறைய ஃபீட்பேக் வரும் பாரேன்!''னு சின்னக் கண்கள் படபடக்க சிரிச்சாங்க வாணி போஜன்!

'ஆடையின் மகளே வருக வருக'னு வாழ்த்தி விடைபெற்ற எனக்குள்ளயும், அந்த காஸ்ட்யூம் ஃபீவர் இப்பவே பத்திக்கிச்சு. நேரா வண்டியை விட்டேன்... 'என்.எஃப் ஸ்டூடியோ'வுக்கு. இவங்கதானே, 'தெய்வ மகள்' காஸ்ட்யூம் டிசைனர்!
''என்ன ரீட்டா... நீயே காஸ்ட்யூம் டிசைனரையெல்லாம் தேடி வர ஆரம்பிச்சுட்டே. எங்க வெற்றி நிச்சயமாயிடுச்சுனு சொல்லு'' என்றபடி வரவேற்பு கொடுத்த ஹெட் காஸ்ட்யூமர் முத்துக்குமரன்,
''டைரக்டர் குமரன், 'இதுவரைக்கும் தமிழ் சீரியல்கள்ல வந்த காஸ்ட்யூம்ஸ்ல இருந்து, ரொம்பவே சேஞ்ச் இருக்கணும்!’னு சொன்ன துமே... 'தெய்வ மகள்' எப்படி இருக்கப் போறாங்கறது எங்களுக்குப் புரிஞ்சுடுச்சு. ஹீரோ யின்... டவுன்ல படிச்சுட்ட வர்ற கிராமத்துப் பொண்ணு. பிஸினஸ், கல்யாணம், குடும்பம்னு அவங்கள சுத்தி கதை நகர்றது தெரிஞ்சுகிட்டு, 'ரொம்ப டாப் ஸ்டைல்ல காஸ்ட்யூம் இருக்கணும். ஆனா, நம்மோட தமிழ் டிரெடிஷன் கொஞ்சமும் குறையக்கூடாதுங்கிற யோசனைய உள்ளுக்குள்ள ஏத்திக்கிட்டேன்.
வாணி போஜனுக்கு, ஏற் கெனவே மாடலிங் ஃபீல்டுல நல்ல அறிமுகம் இருக்கறதால... நிறைய டிசைன்களை டிரை பண்றதுக்கு எங்களுக்கும் வசதியா இருக்கு. பொதுவா சீரியல்கள்ல, நார்மலா ஒரு சுடிதார்ல வந்துட்டு போற மாதிரி 'தெய்வ மகள்’ல ஒரு ஸீன்கூட இருக்காது. ஒவ்வொரு டிரெஸ்ஸுமே டிஃபரண்ட் கட்ஸ், ஹேண்ட் எம்ப்ராய்டரி, ஸ்டோன் வொர்க்னு ரொம்ப வித்தியாசமான வேலைப்பாடுகளோடதான் இருக்கும்.

அனார்கலி டிரெஸ்ஸை, கவுன் டைப்ல டிசைன் செய்திருப்போம். பார்க்கறதுக்கு கவுன் மாதிரி இருக்கும். பிளாக் வித் வெல்வெட் கிளாத் அம்பர்லா கட்ஸ் அனார்கலி அது! அதேபோல சுடிதார் மாதிரியே உருவாக்கப்பட்ட லெகங்கா சாரி. ஸ்டோன் வொர்க் ஸ்கர்ட், டாப்னு அவங்களுக்குனே அச்சு அசலா பொருத்தமான லாங் அனார்கலி சாரினு பிரமாதப்படுத்தியிருக்கோம். டாங்க்ளஸ் பிளவுஸ்... இது ரொம்ப ரொம்ப புதிய வடிவம். பிளவுஸோட பின்பக்கத்துல டிசைன் டிசைனா வடிவமைச்சுருப்போம். 'தெய்வ மகள் பிளவுஸ்’னு புதுப்பேரே வரப்போகுது பாருங்க'' என்று எதிர்பார்ப்பைக் கூட்டிய முத்துக் குமரன்,
''வெட்டிங் கலெக்ஷன் சாரிக்கு கூடுதலா மெனக்கெட்டிருக்கோம். ரிச் லுக் இருக்கணுமேனு இந்தியா முழுக்க பல இடங்கள்ல இருந்து சில்க் மெட்டீரியல் வரவெச்சு டிசைன் பண்ண சாரி அது. மாம்பழ கலர், க்ரீன் பார்டர் ஸ்பெஷல் ஹேண்ட் எம்ப்ராய்டரி வொர்க்னு அதுக்கே 2 மாசம் எடுத்துக்கிட்டோம். அடுத்தது ரிசப்ஷன்... அதுக்கு கோல்டு கலர் சாரி. இப்படி ஆபீஸ், ஷாப்பிங், ஃபேமிலினு ஒவ்வொரு இடத்துக்கும், வேலைகளுக்கும் பொருத்தமா டிரெஸ் டிசைன் பண்ணியிருக்கோம். ஒவ்வொரு எபிசோட் பார்த்தமே... கண்டிப்பா உனக்கு ஃபீட்பேக் குவியும் ரீட்டா!''னு சந்தோஷக் குரலில் சொன்னவர்,
''சீரியல்ல நாயகி தினம் தினம் போட்டுட்டு வரப்போற காஸ்ட்யூம்ஸ் பத்தி ஃபேஸ்புக்ல சுடச்சுட அப்டேட்ஸும் வரப்போகுது தெரியும்ல...'' என்றார் பெருமையோட.
அந்த நிமிஷமே www. facebook.com/deivamagal பேஜுக்கு என் ஸ்மார்ட் போன்ல இருந்தே லைக் கொடுத்துட்டேன்ல இந்த ரீட்டா... ஹா... ஹா!
படங்கள்: கே.ராஜசேகரன், எம்.உசேன், ஜெ.தான்ய ராஜு
வாசகிகள் விமர்சனம் ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150
திறம்பட அலசுகிறார்கள்!
''தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பயனுள்ள நிகழ்ச்சியாக 'மெய்ப்பொருள் காண்பதறிவு’ பெருமைப்படுத்துகிறது. தந்தி டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் அறிவுப்பூர்வமாக, அரசியல் கட்சிகளின் தாக்கமற்று அன்றாடச் செய்திகள் அனைத்தும் விவாதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு செய்தியின் முழு விவரத்தையும், அது சார்ந்த அனைத்து விவரங்களையும் அருமையாக விவாதிக்கிறார்கள்.
நேர் கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத துணிவுடன் செய்திகளின் மெய்ப்பொருளை திறம்பட அலசுகிறார்கள். தவறு என்று கருதினால் அதை அடித்துச் சொல்வதற்கும், சரி என்று கருதினால் அதை பாராட்டவும் நிகழ்ச்சியில் வரும் இருவரும் தவறுவதேயில்லை'' என்று நெகிழ்கிறார் செங்கல்பட்டைச் சேர்ந்த இரா.மணிமேகலை.
நல்லதொரு முயற்சி!
''சிறுவர் சிறுமியர் சேனல்களான 'போகோ’ 'நிக்’ போன்றவற்றில் சமீபகாலமாக பெண் குழந்தைகளின் நலன் பற்றிய சிறு விளம்பரம் வெளியாகின்றது. அதாவது, ஒரு பள்ளி மாணவி வேனில் வீடு திரும்புகையில், ஓட்டுனர் சில்மிஷம் செய்ய, அவள் தைரியமாகவும், சாமர்த்தியமாகவும் அவனிடமிருந்து தப்பித்து வீடு வந்து சேர்கிறாள். நடந்ததை நினைத்து அழும் அவள், தாயிடம் நடந்தவற்றை கூற, காவல்துறை உதவியுடன் தவறிழைத்தவனை தண்டிக்கின்றனர். இன்றைய காலச்சூழலில் மிக அவசியமான, அதேசமயத்தில் குழந்தைகளுக்கு துணிவு தரும் வித மாக அமைந்துள்ள இந்த விளம்பரம் பாராட்டுக்குரியது. சிறு குழந்தைகளுக் கும் 'குட் டச்', 'பேட் டச்' பற்றி பேசிப் புரியவைக்க இவை வழி வகுக்கின்றன'' என்று பெருமைப்படுகிறார் திருச்சியைச் சேர்ந்த எஸ்.வி.சகாயஷீலா.