Published:Updated:

பியூட்டி பிளவுஸ்கள்!

புதிய தொடர்

##~##

பிளாக் அண்ட் வொயிட் காலத்தில் இருந்து... இன்று வரை பெண்களுக்கான ஆடைகளில் எப்போதுமே ஃபேஷன் அப்டேட் ஆகிக்கொண்டேதான் இருக்கிறது... கிராமம், நகரம் என்ற பாகுபாடில்லாமல்! சென்னைப் பெண்களிடம் ஜனவரி மாதம் ஒரு ஃபேஷன் உருவாகிறது என்றால், அடுத்த சில நாட்களிலேயே கிராமத்து அக்காக்கள் வரை சென்று சேர்ந்துவிடுகிறது இப்போதெல்லாம்!

இப்படி உடை விஷயத்தில் பெண்களின் தேடல் என்றும் தீராதது. குறிப்பாக, பிளவுஸ்! நூறு புடவைகளைப் புரட்டி ஒன்றை எடுத்துவிடுவார்கள். ஆனால் அந்தப் புடவைக்கான பிளவுஸை ஸ்டிட்ச் செய்து வாங்குவதற்குள், தாங்களே ஃபேஷன் டிசைனராக உருவெடுத்து, டெய்லர்களை தங்களுடைய காஸ்ட்யூம் டிசைனராக்கி, இறுதியில் அந்த வித்தியாசமான பிளவுஸை அணியும்போது... தன்னையே ஒரு செலிப்ரிட்டியாக உணரும் பெண்களை நாம் அறிவோம்.

அவர்களின் அந்த ஜாக்கெட் காதலுக்கு ஆக்ஸிஜன் கொடுக்கத்தான், இந்த 'பியூட்டிஃபுல் பிளவுசஸ்' எனும் புதிய பகுதி!    

பியூட்டி பிளவுஸ்கள்!

ஸ்கொயர் நெக், ரவுண்ட் நெக், வி நெக், த்ரீ ஃபோர்த் ஸ்லீவ், மெகா ஸ்லீவ், நாட், எம்ப்ராய்டரி, ஜரி வொர்க், சில்க் த்ரெட் வொர்க், பேக் பட்டன் என்று ஆரம்பித்த பிளவுஸ் டிசைனிங், இன்று நித்தமும் புதிய எண்ணங்களோடும் வண்ணங்களோடும் வளர்ந்துகொண்டே இருக்கிறது.

பியூட்டி பிளவுஸ்கள்!

நகரங்களில் பெருகி வரும் பொட்டீக் கடைகளும், பிளவுஸ் டிசைன் செய்து தருவதை பலரும் தொழிலாகவே எடுத்துச் செய்ய ஆரம்பித்து வெற்றி பெற்றிருப்பதும், ஜாக்கெட் விஷயத்தில் பெண்களின் தீரா தேடலுக்குச் சான்று.

இனி, ஒவ்வொரு இதழிலும் ஃபேஷன் எக்ஸ்பர்ட்கள் உங்களுக்கு பிளவுஸ் டிசைனிங்கில் உள்ள அப்டேட்களை அள்ளித் தர வருகிறார்கள் இங்கு. கட்டிங், வொர்க், நெக் பேட்டர்ன் என்று எல்லாவற்றிலும் உங்களின் பிளவுஸ் டிசைனிங் இனி கலக்கப் போவது உறுதி. செய்முறையையும் சேர்த்தே தரவிருக்கிறோம்.

பிரின்சஸ் கட், காக்ரா கட் உள்ளிட்ட கட்டிங்குகள், ஸ்பிரிங், சீக்வன்ஸ், குந்தன், ஜர்தோஸி, ஸ்டோன் முதலான வொர்க்குகள், பாட் நெக், கிளாஸிக் நெக், டீப் பேக் நெக், போட் நெக் போன்ற நெக் பேட்டர்ன்கள் என்று உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கப் போகின்றன இந்தப் பக்கங்கள்.

இனி, விசேஷங்களில் 'டாக் ஆஃப் த லேடீஸ்’ ஆக உங்கள் பிளவுஸை மாற்றலாம். பிளவுஸ் டிசைன்களுக்கு ஆயிரங்கள் செலவழிப்பதற்குப் பதிலாக, பேட்டர்ன்-ஐ மட்டும் தைத்து வாங்கி, உங்கள் பிளவுஸ்களுக்கு நீங்களேகூட வொர்க் செய்துகொள்ளலாம். தையல் தெரிந்தவர்கள், ஒரு பிளவுஸ் எக்ஸ்பர்ட் ஆகி பொட்டீக் கடையும்கூட ஆரம்பிக்கலாம். எதுவும் உங்கள் சாய்ஸ்!

அடுத்த இதழில் ஆரம்பமாகிறது அசத்தல் ஃபேஷன். இந்த ஃபேஷன் ரேஸை துவக்கி வைக்கப் போவது... சென்னை, 'ஆத்ரேயா பிளவுசஸ்’!  

- வே.கிருஷ்ணவேணி

படம்: ரா.மூகாம்பிகை