மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா!

ரிமோட் ரீட்டா

கேபிள் கலாட்டா!
##~##

ன் டி.வி. 'தென்றல்’ ஸ்ருதி, இப்போ விஜய் டி.வி 'Office’-க்கும் போக ஆரம்பிச்சிருக்காங்க!

''நீ வருவேனு தெரியும் ரீட்டா!''னு எனக்காக காத்திட்டு இருந்தவங்ககூட ஒரு காபி டைம் பேட்டி...

''ஹாய் 'தென்றல்' பேபி... கொஞ்சம் 'ஆபீஸ்' கதை ப்ளீஸ்..?''

''சின்னத்திரையில எனக்குனு ஒரு இடத்தை உருவாக்கிக் தந்திருக்கற 'தென்றல்’ சீரியல் மாதிரியே 'ஆபீஸ்’லயும் ஹோம்லி ரோல்தான். சென்னையில வேலை பார்க்க வர்ற கிராமத்துப் பெண் கேரக்டர். ஆபீஸ், ஃப்ரெண்ட்ஸ், காதல்னு கதை நகரும்.''

''ரெஸ்பான்ஸ் எப்படி?''

கேபிள் கலாட்டா!

''ரெண்டாவது வாரமே என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் போன் பண்ணி, 'ஏய் ஸ்ருதி... எங்க ஆபீஸ்ல நடக்குற மாதிரியே இருக்குடி. உன்னோட 'ராஜி’ கேரக்டருக்கு 99 மார்க்!’னு பாராட்டிட்டாங்க தெரியும்ல.''

''பார்த்தா, 'லகலக பார்ட்டி' போலவே  தெரியுதே... நிஜமாவே நீங்க அழுகாச்சி அம்மணியா?''

''கதையைக் கெடுத்தே போ..! எப்ப பார்த்தாலும் கலகலனுதான் இருப்பேன். 'தென்றல்' டீம்லயும் கேட்டுப் பாரேன். சித்தி, மாமியார்னு கொடுமைகளை அனுபவிச்சாலும்... லொக்கேஷன்ல அவங்க எல்லாருமே என்னோட 'திக் திக்’ ஃப்ரெண்ட்ஸ். அப்படித்தான் 'ஆபீஸ்' சீரியல்லயும். சௌந்தர்யா, விஷ்ணு, கார்த்திக்னு நியூ ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட் சேர்ந்தாச்சு. 'தென்றல்'ல கல்யாணி ரோல்ல வந்து கலக்கற சூசன்... இந்த சீரியல்ல எங்களுக்கு பாஸ். ஷூட் இல்லாத நேரத்துல எனக்கு 'டைம் பாஸ்’ அவதான்!’'

''ஊரு பக்கம் உங்கள பத்தி...?''

''சொந்த ஊர் குருவாயூருக்கு மாசத்துல ஒரு தடவை கண்டிப்பா போயிடுவேன். கேரளா சேனல்ல ஸ்கூல் டேஸ்ல இருந்தே நடிச்சிருக்கேன். அப்பவே பாராட்டுங்க குவியும். இருந்தாலும், 'தென்றல்' சீரியல்ல அறிமுகமான பிறகுதான் ஃபிரெண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ்னு எல்லாரும் என் சீரியலை மிஸ் பண்ணாம பார்த்திட்டிருக்காங்க. இப்போ எல்லாரும் முழுக்க தமிழ் பேசவே ஆரம்பிச்சுட்டாங்கனா பார்த்துக்கோயேன் ரீட்டா!''

கேபிள் கலாட்டா!

கேரளா டு கோயம்புத்தூர் டு சென்னை!

ன் டி.வி 'பொம்மலாட்டம்’ சீரியல்ல வாய் பேச முடியாத கேரக்டர்ல நடிக்கிற வித்யா, நிஜத்தில் எதிர்ல இருக்கிறவங்க டயர்ட் ஆகறவரைக்கும் லொடலொட!

''பூர்விகம் கேரளாவா இருந்தாலும், கோயம்புத்தூர் பொண்ணு நான். காலேஜ் போய்க்கிட்டிருந்தப்போ, பாக்கெட் மணி கிடைக்குமேனு வீட்டுக்குக்கூட தெரியாம ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து கோயம்புத்தூர்ல அப்போ நடந்த 'தங்கம்’ சீரியல் ஆடிஷன் போனேன். அப்போதான் ரம்யா கிருஷ்ணன் மேடம், என்னை செலக்ட் பண்ணினாங்க. இன்னிக்கு 'பொக்கிஷம்’, 'பொம்மலாட்டம்’னு போய்க்கிட்டிருக்கு.

நான் நல்லா சமைக்கவும் செய்வேன். பண்டிகை நாட்கள்ல வீட்டில் என் சமையல்தான். நான் பண்ணின ரவா லட்டைச் சாப்பிட்டவங்க, நிச்சயமா ரெசிபியை வாங்கிட்டுப் போயிடுவாங்க!''னு பெருமையா சொன்னாங்க வித்யா!

ரீட்டாவுக்கும் ரெசிபி பார்சல்!

கேபிள் கலாட்டா!

அப்போ ஆங்கர்... இப்போ நடிகர்!

று மாசத்துக்கு முன்ன வரைக்கும் சன் மியூசிக்ல ஆங்கரா இருந்த வெங்கட், இப்போ பிஸியான சீரியல் நடிகர். ஜீ தமிழ் சேனல் 'புகுந்த வீடு’, ஜெயா டி.வி 'மாயா’, விஜய் டி.வி-யில புதிதாக ஒளிபரப்பாக இருக்கிற 'குங்குமச்சிமிழ்’னு கலக்கிட்டிருக்கிற இந்த சாக்லேட் பையன், ஃபேஸ்புக்ல பயங்கர (!) ஆக்டிவ்வா இருக்கார் (http://www.facebook.com/sunmusicvenkat.renganathan)

''ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட் 5,000 பேர் மட்டும்கிற லிமிட்டை மாத்தினா கொஞ்சம் நல்லாயிருக்கும். அந்தளவுக்கு ஃபேஸ்புக்கில் இன்வால்வ்மென்ட்டோட இருக்கேன் ரீட்டா.

நான் படிச்சது புதுக்கோட்டை, கீரனூர்ல இருக்கற மூகாம்பிகை இன்ஜினீயரிங் காலேஜ்லதான். சமீபத்துல இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக மாணவர்கள் நடத்தின போராட்டம் பட்டைய

கேபிள் கலாட்டா!

கிளப்பிடுச்சுல... அதுல நம்ம காலேஜும் கலந்துகிட்டது பெருமையா இருந்துச்சு. அதை அப்படியே ஸ்டேட்டஸ் போட்டேன். சும்மா ஆயிரத்துக்கும் மேல லைக் அள்ளிடுச்சு தெரியுமோ!'' என்று பெருமைப்பட்டுக்கிட்ட வெங்கட்,

''கேர்ள் ஃப்ரெண்ட்ஸும் நிறைய. 'சீரியல் பார்க்கவே பிடிக்காம இருந்த பொண்ணு நான். உங்களோட நடிப்பைப் பார்த்துட்டுதான் சீரியல்களை பார்க்கவே ஆரம்பிச்சிருக்கேன். ஐ லைக் யுவர் ஆக்டிங்!’னு சமீபத்துல போஸ்ட் போட்டிருந்தாங்க ஒரு பொண்ணு. ஆர்வத்துல அடுத்த செகண்டே 'லைக்’ கொடுத்தேன். அடுத்த லைக் யார் கொடுத்தா தெரியுமா... என் மனைவி அஜு. இப்படித்தான் அஜுவும் என் ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கறது அப்பப்போ எனக்கு மறந்து போய், அப்புறம் செமத்தியா 'பின் விளைவுகளை’ச் சந்திப்பேன்!''னு சிரிக்கிறார் வெங்கட்!

அஜுவின் கவனத்துக்கு!  

கேபிள் கலாட்டா!

வித்யாவின் ரவா லட்டு ரெசிபி!

தேவையானவை: ரவை - ஒரு டம்ளர், தேங்காய் - ஒரு மூடி (துருவிக் கொள்ளவும்), சர்க்கரை - அரை டம்ளர், நெய் - 5 ஸ்பூன், அரை டம்ளர் சர்க்கரைப்பாகு காய்ச்சத் தேவையான தண்ணீர்.

செய்முறை: வாணலியில் 2 ஸ்பூன் நெய்விட்டு சூடு செய்து, ரவையை பச்சை வாசனை போகுமளவு வறுத்தெடுக்கவும். பிறகு, 2 ஸ்பூன் நெய் விட்டு தேங்காய் துருவலை வதக்கவும். தொடர்ந்து சர்க்கரையை பாகு காய்ச்சவும். கடைசியாக ரவையையும், தேங்காய் துருவலையும் சர்க்கரைப்பாகுடன் கலந்து உருண்டையாக பிடித்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் நெய் மேலாக விடவும். ரவா லட்டு ரெடி! ச்சோ... சிம்பிள் இல்ல!

படம்: ச.இரா.ஸ்ரீதர்

வாசகிகள் விமர்சனம்                                                                                                       ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா!

150

எளிய மருத்துவம்!

''ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் வெற்றிலை, துளசி, சோற்றுக்கற்றாழை, தூதுவளை, கற்பூரவல்லி, ஆவாரை, மல்லி, சீரகம், மிளகு, சுக்கு உள்ளிட்ட அஞ்சறைப்பெட்டி பொருட்களின் மருத்துவப் பயன்களைத் தெள்ளு தமிழில் தெளிவாகக் கூறி, செயல்முறைப்படுத்தியும் காண்பிக்கின்றனர். செலவு குறைந்த, பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத சிறந்த மருத்துவக் குறிப்புகளைத் தருகிறார்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது'' என்று பெருமிதம் கொள்கிறார் திருச்சியைச் சேர்ந்த இரா.சின்னப் பொண்ணு.

சபாஷ் போடலாம்!

''ராஜ் டி.வி-யில் வரும் 'தனிஷ்க் சொர்ண சங்கீதம்' சீஸன்-2... சூப்பர். கர்னாடக சங்கீதத்தை வாழவைக்கும் நிகழ்ச்சிகளில் இது போற்றத்தக்கது. அப்பப்பா... இளைய தலைமுறையினர் எத்தனை பேர் கர்னாடக சங்கீதத்தில் வெளுத்து வாங்குகிறார்கள்! பாடகி சௌம்யா, நிகழ்ச்சியை நடத்தும் விதமும் சபாஷ் போட வைக்கிறது'' என்று பாராட்டுகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த ஆர்.மீனாட்சி.

ஐயோ பாவம்... தமிழ்!

''ஜெயா டி.வி-யில் சிம்ரன் வழங்கும் 'ஜாக்பாட்’ நிகழ்ச்சியில் ஒரே ஆங்கில மயம்தான். அவரும் பங்கேற்பவர்களும் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள். இத்தனைக்கும் அதிகமாக பங்கேற்பது என்னவோ... தமிழச்சிகள்தான்! தமிழ் வாக்கியங்களைத் தட்டுத் தடுமாறி வாசிக்கிறார் சிம்ரன். உச்சரிப்பு படுகொலை பதற வைக்கிறது... தமிழே நீ ஐயோ பாவம் என்று அழ வைக்கிறது'' என வருந்துகிறார் புரசைவாக்கத்தைச் சேர்ந்த லலிதா ராமமூர்த்தி.