மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா

ஒரிஜினல் ‘திருமதி செல்வம்!’ ரிமோட் ரீட்டா

##~##

''பொதுவா, சின்னத்திரையில ஒரு பிரேக் எடுத்துட்டு ரீ-என்ட்ரி கொடுக்குறப்போ பழைய இடத்தைப் பிடிக்க அதிகமா மெனக்கெட வேண்டியிருக்கும். மூன்றரை வருஷத்துக்கு முன் 'பந்தம்’, 'வைர நெஞ்சம்’னு முக்கிய கதாபாத்திரங்கள் முடிச்ச கையோட, திருமணத்தைத் தொடர்ந்து, இடைவெளி எடுத்துக்கிட்டேன். இப்போ சன் டி.வி 'பொம்மலாட்டம்’, ஜெயா டி.வி 'மனதில் உறுதி வேண்டும்’னு மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சாச்சு. ரெண்டுமே நல்ல கதாபாத்திரங்கள் ரீட்டா. சந்தோஷமா ஆரம்பிச்சிருக்கு இந்த செகண்ட் இன்னிங்ஸ்!

கேபிள் கலாட்டா

ஒண்ணு தெரியுமா..? ரெண்டு தொடருமே ஒரே நாள்ல ஒப்பந்தமான தொடர்கள். 'பொம்மலாட்டம்’ தொடர்ல மாடர்ன் டிரெஸ்ல நெகட்டிவ் ரோல்ல வருவேன். அதுவே 'மனதில் உறுதி வேண்டும்’ தொடர் முழுக்க புடவை கட்டி பாஸிட்டிவ் ரோல் பண்றேன்''னு பூரிப்போட பேசத் தொடங்கினாங்க ப்ரீத்தி.

''நல்ல நடிகை, அன்பான மனைவி, அக்கறையான அம்மானு ஒவ்வொரு கட்டத்திலும் என் பொறுப்புகளை நிறைவா கடந்துட்டு வர்றதில் சந்தோஷம் ரீட்டா. கணவர் சஞ்சீவ், இதில் எல்லாம் என்னோட பெரிய பலம். குழந்தை லயாவுக்கு இப்போ மூணு வயசு ஆகுது. அழத் தெரியாத சமர்த்துக் குழந்தை!''னு சிரிச்சவங்களுக்கும், சமீபத்தில் முடிந்த 'திருமதி செல்வம்’ சீரியலோட ஃபேர்வெல் ஃபீலிங் இருக்கு.

''ஜாலியான டீம் ரீட்டா அது. வாரத்துல ரெண்டு முறையாவது சஞ்சீவ்கூட சேர்ந்து நானும் அந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போயிடுவேன். 'அர்ச்சனாவும் இல்ல, நந்தினியும் இல்ல... நான்தான் ஒரிஜினல் 'திருமதி செல்வம்!’னு கலாய்ச்சுட்டு இருப்பேன். டைரக்டர் குமரன் சாருக்கு என்னோட சமையல் ரொம்பப் பிடிக்கும். சஞ்சீவுக்கு நான் கொடுத்து அனுப்புற சாப்பாட்டை ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டு மார்க் போட்டுவாங்க. இப்பவும் போன், விசேஷங்கள்ல சந்திக்கிறதுனு அந்த டீமேடா நட்பு தொடருது!''னு சந்தோஷப்பட்டாங்க ப்ரீத்தி!

ஓ.கே... திருமதி சஞ்சீவ்!

கேபிள் கலாட்டா

அக்காவும் நானும்!

நிமிஷத்துக்குள்ள ரெண்டு, மூணு பக்கம் அளவுக்குப் பேசிடறாங்க சன் நியூஸ் செய்தி வாசிப்பாளர் காவேரி.

''என் வேலையே அதானே ரீட்டா!''னு புன்னகையோட ஆரம்பிச்சாங்க பேச்சை.

''அக்கா கல்யாணி, இதே சன் நியூஸ்ல நியூஸ் ரீடர். அவங்க வழியில் நானும் வந்துட்டேன். இப்போ சென்னை, எம்.ஜி.ஆர். ஜானகி காலேஜ்ல பி.காம்., இரண்டாம் வருடம் படிக்கிறேன். கல்லூரி, சொந்தங்கள்னு எல்லாரும் 'பெஸ்ட் அண்ட் பெரிய விஷயம்’னு என் வேலையைப் பாராட்டுறாங்க. நடிக்க வாய்ப்பு வந்தும் தவிர்த்துட்டேன். 'செய்தி வாசிப்பாளர் காவேரி’ என்பதே போதும் ரீட்டா!''னு சொன்னவங்க,

''ஆக்கப்பூர்வமான செய்திகள் வாசிக்கும்போது சந்தோஷமா இருக்கும் ரீட்டா. ஆனா, வினோதினி, டெல்லி சம்பவம்னு வாசிக்கும்போது வேதனையா இருக்கும். சமீபத்தில் என் காலேஜ் பொண்ணுங்க கலந்துகிட்டு வெற்றிபெற்ற நடனப் போட்டியை தொகுத்து வாசிக்கிற சந்தர்ப்பம் கிடைச்சப்போ, பரவசமா இருந்தது!''னு வேலை அனுபவம் பகிர்ந்துகிட்ட காவேரி,

''புத்தகங்கள்தான் என் பொழுதுபோக்கு. பலதரப்பட்ட தமிழ், ஆங்கில நூல்கள் என் அலமாரியில் நிறைஞ்சு கிடைக்கு. 'நீயா நானா’ கோபிநாத் சாரோட எழுத்து ரொம்பப் பிடிச்சுருக்கு. இளைஞர்களுக்கு டானிக் மாதிரி இருக்கு''  

- படபட பட்டாம்பூச்சி 'பை’ சொல்லி அனுப்பினாங்க!

''எனக்கு பெயர் வெச்சது யாருன்னா...''

விஜய் டி.வி-யில் 'சூப்பர் சிங்கர் (சீனியர்) சீஸன்-4’, 'அது.. இது... எது!’னு இரண்டு நிகழ்ச்சிகளில் லகலகனு கலக்கிட்டு இருக்கிற மா.கா.பா ஆனந்த், விரைவில் வெள்ளித்திரைக்கு வரவிருக்கிறார்!

கேபிள் கலாட்டா

''வாழ்த்துக்களுக்கு நன்றி ரீட்டா! 'வானவராயன் வல்லவராயன்’ படத்தில் நான்தான் 'வல்லவராயன்’. பாடல்கள் ஷூட் தவிர, மற்ற காட்சிகள் எல்லாம் எடுத்து முடிச்சாச்சு. இனி, வெள்ளித்திரையிலும் என் ரசிகர்கள் என்னை கண்கொட்டாம பார்த்து ரசிக்கலாம். எதுவும் தப்பா சொல்லிட்டேனோ..? முறைக்கிற மாதிரி இருக்கே!''னு ஜாலியா ஆரம்பிச்சார் ஆனந்த்.

''சொந்த ஊர் பாண்டிச்சேரி. அங்கேயே எம்.பி.ஏ முடிச்சுட்டு, எப்படியாவது அட்வர்டைஸிங் துறையில காப்பி ரைட்டர் ஆகிடணும்னுதான் சென்னைக்கு வந்தேன். காப்பி ஆத்துற வேலை வரைக்கும்தான் எட்ட முடிஞ்சுது. ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும், 'நீதான் லொடலொடனு பேசிக்கிட்டே இருக்கியே. ஆர்.ஜே ஆயிடேன்!’னு ஒரு யோசனையை தூக்கி மூளைக்குள்ள செருகிட்டாங்க. அப்போ சென்னை மேற்கு மாம்பலத்துல 'பால் பேரின்பம்’ மேன்ஷன்ல தங்கியிருந்தேன். 'பல டைரக்டர்கள், நடிகர்கள் தங்கியிருந்த விடுதி இது. நீயும் பெரிய ஆளா வருவேடா!’னு வேற உசுப்பேத்திவிட, என்னோட கலைப்பயணம் தொடங்கிச்சு!''னு வரலாறு சொன்னவர்கிட்ட,

''எல்லாம் சரி. அதென்ன மா.கா.பா. ஆனந்த்?''னு பெயர் விளக்கம் கேட்டேன்.  ''இதை நீ 'சரவணன் மீனாட்சி’ மிர்ச்சி செந்தில்கிட்டதான் கேட்கணும் ரீட்டா. சூரியன் எஃப்.எம்ல ரெண்டு வருஷம் வேலை பார்த்த அனுபவத்தோட மிர்ச்சி எஃப்.எம்-க்கு வந்தப்போ, நிகழ்ச்சி ஹெட் செந்தில். அவர்தான், 'வெறும் ஆனந்த் வேண்டாம். ஒரு ரைமிங்கா இருக்கட்டும்...’னு மா.கா.பா-வை என் பேருக்கு முன்னாடி சேர்த்துட்டார். எல்லோரும் நினைக்கிற மாதிரி அது இனிஷியல் எல்லாம் இல்லை ரீட்டா!''னு சிரிச்சார்.

''சரி, கல்யாணம் எப்போ..?''

''ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கறது தப்பில்லையா! அட, ஆமா ரீட்டா... எனக்கு கல்யாணமாகி ஏழு வருஷம் ஆச்சு. கோயம்புத்தூர்ல ஆர்.ஜே-வா வேலையில் இருந்தப்போவே சூசனை காதல் திருமணம் செய்துகிட்டேன். அஞ்சு வயசுல ஒரு பொண்ணும், ஒரு வயதை தொடப்போற பையனும் இருக்காங்க!''னு விவரம் சொன்ன இந்த புள்ளகுட்டிகாரருக்கு, பொழுதுபோக்கு போட்டோகிராபி!

''முறைப்படி கிளாஸ் எதுவும் போகல. ஆனாலும் நிறைய கலெக்ஷன்ஸ் வெச்சுருக்கேன். என் பொண்ணு எனிலியா... ரயிலை திரும்பி பார்க்குற மாதிரி இருக்கற இந்த போட்டோ, நான் எடுத்ததில் எனக்குப் பிடிச்சது!''னு ரசிச்சு சொன்னார் ஆனந்த்!

சினிமாவில் சக்சஸ் பிராப்திரஸ்து!

படங்கள்: ச.இரா.ஸ்ரீதர், த.சித்தார்த்

வாசகிகள் விமர்சனம்                                                      ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா

150

நாங்களும் கற்கிறோம்!

''சங்கரா தொலைக்காட்சியில் தினமும் மாலை ஐந்து மணிக்கு 'குருகுலம்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அதில் லலிதா சகஸ்ரநாமத்தை சிறுவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள். அதைப் பார்க்கும்போது நாங்களும் புத்தகத்தை வைத்துக் கற்றுக் கொள்கிறோம். அட்சரம் பிறழாமல் அத்  தனை அற்புதமாக கற்றுக் கொடுக்கிறார்கள்'' என்று நெகிழ்கிறார் சென்னையிலிருந்து சு.சரஸ்வதி

மருமகளைத் தாங்குங்கள்!

''ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில், 'மறுமணம்’ எனும் தொடர் வருகிறது. காதலித்தவளைக் கைப்பிடித்து, பிறகு கைவிட்ட தன் மகனை விரட்டியடித்துவிட்டு, 'என் சொத்துக்கள் முழுக்க மருமகளுக்கே' எனக் கூறுவதோடு மட்டுமல்லாமல், அப்பெண்ணுக்கு தாயும், தகப்பனுமாக மாறும் அந்த மாமனார் - மாமியார் கேரக்டர்... சூப்பர்! 'மருமகள்களைத் துன்புறுத்தும் மாமியார்'கள்... இந்தத் தொடரைப் பார்த்தாலே போதும், மருமகள்களைத் தங்கமாக தாங்க ஆரம்பித்து விடுவார்கள்'' என்று எதிர்பார்ப்பை கிளப்புகிறார் திருச்சியிலிருந்து இரா.சின்னப்பொண்ணு.

அருமையான டவுட்ஸ்!

''ஆதித்யா சேனலில், 'டாடி எனக்கு ஒரு டவுட்’ என்கிற தலைப்பில் அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை... அப்பா - மகன் கேரக்டர்களில் வரும் இருவரும் செமத்தையாக அசத்துகிறார்கள். டாடியிடம் மகன் கேட்கும் 'டவுட்ஸ்' எல்லாமே... சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன'' என்று பாராட்டுகிறார் கும்பகோணத்திலிருந்து ஜி.விஜயலட்சுமி.