Published:Updated:

பியூட்டி பிளவுஸ்கள்! - 3

காவியா ஸ்பெஷல் பிளவுஸ்! வசந்தா ராஜகோபாலன் ஃபேஷன்

##~##

''சென்ற முறை பிளெய்ன் பிளவுஸில் வேலைப்பாடுகள் செய்வது பற்றிப் பார்த்தோம். இப்போது பார்டர் வைத்த பட்டுப் புடவையின் பிளவுஸில் என்ன மாதிரியான வேலைப்பாடுகள் செய்யலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.

பியூட்டி பிளவுஸ்கள்! - 3

பட்டுப்புடவையின் பார்டர் டிசைன்தான்... பெரும்பாலும், அதற்குரிய பிளவுஸிலும் இருக்கும். எனவே, அந்த பிளவுஸ் பிட்டில் உள்ள பார்டர் டிசைனின் வடிவத்துக்குத் தகுந்தாற்போல பிளவுஸில் வேலைப்பாடுகளை செய்யலாம். எங்களிடம் பிளவுஸ் தைக்க வருபவர்கள் பலரும் செய்து தரச்சொல்லி கேட்பது, இந்த 'காவியா ஸ்பெஷல்' டிசைனைத்தான்'' என்று சொல்லும் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள 'ஆத்ரேயா பிளவுஸஸ்’ உரிமையாளர் வசந்தா ராஜகோபாலன், அந்த டிசைனை உங்களுக்காக செய்து காட்டுகிறார்.

தேவையான பொருட்கள்: பட்டுப் புடவையின் பிளவுஸ் துணி, பிங்க் நிற நூல் மற்றும் சில்க் காட்டன் நூல், தங்க நிற ஜர்தோஸி கோரா (ஸ்பிரிங் டைப்), ஜமிக்கி சீக்குவன்ஸ், கோல்டு பிளேட்டேட் மணிகள்,  டிரேஸ் பேப்பர், டிரேசிங் பவுடர்,  மண்ணெண்ணெய், ஆரி வொர்க் ஊசி, வெள்ளை நிற காட்டன் நூல்.

பியூட்டி பிளவுஸ்கள்! - 3

செய்முறை: முதலில், ஒரு சின்ன கப்பில் தேவையான அளவு டிரேசிங் பவுடரை கொட்டி, மண்ணெண்ணெயை ஒரு சில சொட்டுக்களை விட்டு, வெள்ளை நிற நூல்கொண்டு நனைத்து வைத்துக் கொள்ளவும் (வெள்ளை நூல் தவிர வேறு எந்த நிற நூலையும் பயன்படுத்த வேண்டாம். சிலநேரம் கலர் காட்டன் நூலில் உள்ள நிறம், துணியைச் சேதப்படுத்திவிடக் கூடும்).

படம் 1: பிளவுஸின் கை டிசைனை எந்த அளவு வரை வெட்டப் போகிறோமோ... அந்த அளவுக்கு அவுட்லைன் வரைந்து கொள்ளவும்.

படம் 2: பிளவுஸில் கைக்கான பார்டர் பகுதி மீது, உங்களுக்கு விருப்பமான டிசைன்கள் வரையப்பட்ட டிரேஸ் பேப்பரை வைக்கவும்.

படம் 3: டிரேஸ் பவுடர், மண்ணெண்ணெய் கலவையில் நனைக்கப்பட்ட வெள்ளை நிற காட்டன் நூலை, டிரேஸ் பேப்பர் மீது தேய்க்கவும்.

படம் 4: அந்த டிசைன் அப்படியே பிளவுஸ் துணியில் அழகாக பதிந்திருக்கும்.

படம் 5: பிளவுஸில் வரும் வளைவு பார்டர் டிசைனுக்கான கோடுகளையும் வரைந்து, அதையும் பிளவுஸ் துணியில் ஏற்கெனவே வயைரப்பட்ட பெரிய டிசைனுக்கு அருகில் வைத்து, முன்பு சொன்னது போலவே காட்டன் நூல் கொண்டு தேய்க்கவும்.

படம் 6: பிளவுஸுக்குள் வரையத் தேவையான குட்டிக் குட்டியான டிசைன்களையும் உங்களின் கற்பனைத் திறனுக்கேற்ப வரைந்து, துணியில் டிரேஸ் எடுத்துக் கொள்ளலாம்.

படம் 7: இப்போது ஊசியைப் பயன்படுத்தி, சில்க் காட்டன் நூலைக் கொண்டு டிரேஸ் டிசைன் மீது தைக்கவும்.

படம் 8: முதலில் வரைந்த பெரிய டிசைனை சுற்றி பிங்க் நிற காட்டன் நூலைக் கொண்டு, கோக்கவும். இதேபோல எல்லா பகுதிகளின் இடையேயும் போட்டு முடிக்கவும். பிளவுஸ் பார்டர்களின் வளைவுகளையும் பிங்க் நிற காட்டன் நூலைக் கொண்டு கோத்துக் கொள்ளவும்.

பியூட்டி பிளவுஸ்கள்! - 3

படம் 9: இந்த டிசைனின் நடுப்பகுதியில் வெள்ளை ஜமிக்கியை வைத்து தைக்கவும்.

படம் 10: தங்க நிற ஜர்தோஸி கோராவை வைத்து, நடுப்பகுதியிலிருந்து தைத்துக் கொள்ளவும். தங்க நிற மணிகளை, ஏற்கெனவே சில்க் கட்டன் நூல் கொண்டு தைக்கப்பட்ட டிசைனின் இடைவெளிகளில் வைத்துக் கோக்கவும்.

படம் 11: சின்னச் சின்ன இடைவெளிகளில் (படத்தில் காட்டியுள்ளது போல்), சிறிய பட்டன் சைஸுக்கு பிங்க் நிற நூல்கொண்டு முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.

'காவியா ஸ்பெஷல்’ பிளவுஸ் ரெடி!

''இந்த பிளவுஸ் பிங்க் நிறத்தில் இருப்பதால், பிங்க் நிற காட்டன் நூலை தேர்ந்தேடுத்தோம். இதுபோல பிளவுஸின் நிறத்துக்கு ஏற்ப நூலைத் தேர்ந்தெடுக்கவும். இந்த 'காவியா ஸ்பெஷல்’ பிளவுஸ் டிசைன் எல்லா பெண்களுக்கும்... புடவையை ப்ளீட் வைத்தாலும், ஃப்ளோவாக விட்டாலும் பொருத்தமாக இருக்கும் என்பதோடு, புடவையின் மெருகையும் உங்களின் அழகையும் கூட்டிக் காட்டும்!'' என்று சர்டிஃபிகேட் தருகிறார் வசந்தா ராஜகோபாலன்.

தைப்போம்...

  - வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ரா.மூகாம்பிகை

மாடல்: ஐஸ்வர்யா