மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா!

‘வில்லி வேணுமா... வில்லி!’ரிமோட் ரீட்டா

##~##

 சின்னத்திரைக்கு கிடைச்சிருக்கற 'பாஸிட்டிவ்' பொண்ணு, கவிதா. கேப்டன் டி.வி-யில புதுசா ஒளிபரப்பாகற 'இல்லத்தரசி’ சீரியல் பார்த்துட்டு, அவங்களுக்கு போன் போட்டேன். ''சீரியல் ஆர்ட்டிஸ்ட் நீபாவோட கல்யாண ரிசப்ஷனுக்கு சாயங்காலம் கிளம்பிடுவேன். நாலு மணிக்கு ஷார்ப்பா வந்துடு!''னு வீட்டு விலாசம் அனுப்பினாங்க.

மாலை... காபி வித் கவிதா!

''குழந்தை நட்சத்திரமா அறிமுகமானதில் ஆரம்பிச்சது என் பயணம். 'அஞ்சலி’ படத்துல வர்ற குட்டீஸ்ல நானும் ஒருத்தி. சன் டி.வி-யில ஒளிபரப்பான 'சக்தி’ சீரியல் 'மேகா’ கேரக்டர் மூலம்தான் சின்னத்திரைக்குள் வந்தேன். அதுல கிடைச்ச நல்ல ரோலும் பேரும்தான் 15 வருஷமா சின்ன 'பிரேக்’கூட எடுத்துக்க நேரம் இல்லாம... வலம் வரவைக்குது ரீட்டா!''னு முகம் பிரகாசமானாங்க கவிதா.

கேபிள் கலாட்டா!

''எல்லாரும் திட்டித் தீர்க்குற மாதிரி ஒரு வில்லி கேரக்டர் பண்ணணும்னு ஆசை. ஆனா, 'அதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது’னு தோழிகள் ரொம்பவே எச்சரிக்கிறாங்க. அதான், யோசனையாவே இருக்கு!

'சக்தி’, 'கோலங்கள்’, 'ஆனந்தம்’, 'மருதாணி’னு கிராஃப் நல்லபடியா போயிட்டிருக்க, இப்போ 'இல்லத்தரசி’ சீரியல் ஆரம்பமே ஜோர்! சினிமா மாதிரி விறுவிறுப்பான திரைக்கதை. இயக்குநர் ராமலிங்கம் சாருக்கும், தயாரிப் பாளர் கோவிந்தராஜ் சாருக்கும் நன்றி சொல்லணும். இந்த சீரியல்ல என்னோட கேரக்டர் பெயர் 'கனகா’. ஆரம்பத்துல நெகட்டிவ், அடுத்தடுத்து பாஸிட்டிவ்னு மாறும் ரோல். நீ பார்த்துட்டு மார்க் போடு ரீட்டா!''னு ரிசப்ஷனுக்கு தயாராகி நின்ன கவிதாகிட்ட,

''இவ்ளோ நீளமான கூந்தலை எப்படி மெயின்டெயின் செய்ய முடியுது..?!''னு வியப்பா கேட்டேன்.

''வாரம் மூணு முறை தலை குளிப்பேன். மாதம் ஒரு முறை கேசத்துக்கு மருதாணி போடுவேன். அவ்ளோதான்!''னு சிரிச்சவங்க, 'ஹென்னா பாத்’க்கு டிப்ஸும் கொடுத்தாங்க.

''தயிர், டீ டிகாக்ஷன், மருதாணி, பீட்ரூட் துருவல் (நிறம் மற்றும் பளபளப்புக்காக) எல்லாத் தையும் ஒரு முறை பயன்படுத்த தேவையான அளவுக்கு முதல் நாள் இரவே மிக்ஸ் செய்து வெச்சுடணும். மறுநாள் காலை அந்தக் கலவை யில முட்டையோட வெள்ளைக்கருவை மட்டும் (விரும்பினால்) சேர்த்து கூந்தல்ல தேய்ச்சு, மூணு மணி நேரத்துக்கு அப்புறம் அலசணும். முடி யோட கலர் கொஞ்சம்கூட மாறக்கூடாதுனு நினைக்கறவங்க பீட்ரூட்டை தவிர்க்கலாம். இந்த பளபள கூந்தல் ரகசியம் அதான் ரீட்டா!''  

- எப்பவும்போல சின்னதா சிரிச்சாங்க கவிதா!

ஜெயா டி.வி-யில செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிற 'அறுசுவை நேரம்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குற தீபிகாஷி பொண்ணுக்கு ஹாய் சொன்னேன்.

''இவ்ளோ சீக்கிரமே உன் நட்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கல ரீட்டா!''னு அகமகிழ்ந்தவங்க,

''போன வருஷம் சென்னை, டபிள்யூ.சி.சி-ல பி.காம் முடிச்சேன். ஃபேஷன் டிசைனிங் எனக்கு ரொம்ப இஷ்டம். சிம்ரன் மேடம் தொகுத்து வழங்கின 'ஜாக்பாட்' நிகழ்ச்சியில் கலந்துகிட்ட எங்க குழு, பரிசோடத்தான் வெளியில் வந்தோம். அந்த நிகழ்ச்சியில் ஃபேஷன் டிசைனிங் பிரிவுல என்னோட பங்களிப்பும் இருந்துச்சு. அதுதான் இப்போ சமையல் நிகழ்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கக் காரணம். ஒவ்வொரு ரெசிபி செய்து காட்டும்போதும், அந்த உணவோட வரலாறை தனி பைட்ஸா ஒளிபரப்பறதுதான் இந்த நிகழ்ச்சியோட சிறப்பு''னு சொன்னவங்க,

கேபிள் கலாட்டா!

''என்னோட முதல் மீடியா பிரவேசம்... என்.டி.டி.வி. அதுல 'மெனு கார்டு’, 'என்டர் தி கிச்சன்’னு நிறைய நிகழ்ச்சிகள், சினிமா நட்சத் திரங்கள் பேட்டினு கலக்கியிருக்கேன்.  சமையல் நிகழ்ச்சிகளை சிறப்பா தொகுத்து வழங்கக் கார ணமே, ஹோட்டல் இண்டஸ்ட்ரி - எஜுகேஷன்ல டீன் லெவல்ல இருக்குற என்னோட அப்பாதான் ரீட்டா'' என்றவர்கிட்ட,

''இவ்ளோ அழகா இருக்கீங்க... சினிமா வாய்ப்பு வந்திருக்குமே..?''னு கேட்டேன்.

''நேவி குயின் ஃபேஷன் ஷோ 2010-ல நான்தான் வின்னர். அப்போ இருந்தே நிறைய வாய்ப்புகள் வருது. நான்தான் 'நோ’ சொல்லிட் டிருக்கேன். கார்ப்பரேட் ஈவன்ட் ஆங்கரிங், அட்வர்டைஸ்மென்ட் டிசைனிங் பக்கம்தான் என்னோட ஆர்வம். அதனால... 'தீபி பொண்ணு நடிக்கலாமே!’னு டைரக்டர்ஸ் யாரும் நம்பர் கேட்டா கண்டிப்பா கொடுத்துடாதே ரீட்டா!''னு பை சொன்னாங்க தீபிகாஷி!

கிச்சன் கியூட்டி!

படம்: ச.இரா. ஸ்ரீதர்

வாசகிகள் விமர்சனம்                                        ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா!

150

தேவை.. ஆக்கப்பூர்வ விவாதம்!

''விஜய் டி.வி-யில் சமீபத்தில் ஒளிபரப்பான 'நீயா... நானா?’ நிகழ்ச்சியில் வடஇந்திய மற்றும் தென்னிந்திய பெண்களிடையேயான அழகு, பிடித்த, பிடிக்காத குணங்கள் என்றெல்லாம் கேள்விகளைக் கேட்க... பங்கேற்ற பெண்களிடையே வாய்ச்சண்டை பெரிதாக பற்றிக் கொண்டது. அதையே பரபரப்பாக ஒளிபரப்பியும் முடித்தனர். பெண்களுக்கு பயன்தரக்கூடிய எத்தனையோ தலைப்புகள் இருக்கின்றன. அந்த வரிசையில் நிகழ்ச்சியை நடத்தலாம். பெண்களுக்கு எதிராக தொடரும் துன்பியல் சம்பவங்களைக் கண்டிக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான விவாதங்களையும் நடத்தலாம். சிந்திப்பார்களா நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்?'' என்று ஆதங்கப்படுகிறார் திருச்சி, மேலச்சிந்தாமணியில் இருந்து என்.சாருலதா.

துணிச்சல் பரவட்டும்!

''ஜீ தமிழ் தொலைக்காட்சியில், 'சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி மனதைக் கரைய வைக்கிறது. 5 வயது பெண் குழந்தை சித்ரவதைக்கு ஆளாகி தவிக்கும் கொடுமையைக் கேட்டபோது.... நொறுங்கிப் போன நான், அந்த அவலங்களை வெளியில் கொண்டு வந்து, உரிய நடவடிக்கைக்கு வழிவகுத்த பெண்களின் பேச்சைக் கேட்டபோது, தெம்பு கூடிப்போனேன். இத்தகைய பெண்களின் துணிச்சலான செயல்கள் வெளியில் நன்றாக பரப்பப்பட வேண்டும். அப்போதுதான், கொடுமைகளுக்கு எதிராக கொதித்து, தயங்காமல் அவற்றை வெளிக்கொண்டு வரும் துணிச்சல் பலருக்கும் வரும்'' என்று உணர்ச்சிவசப்படுகிறார் சென்னை, வேளச்சேரியில் இருந்து ஆர்.ராஜம்.