சுட்டீஸ்
ஸ்பெஷல் 1
Published:Updated:

ஷாப்பிங் ‘நியூ’ஸ்!

ஷாப்பிங் ‘நியூ’ஸ்!

##~##

கலை  வளர்க்கும்  கைத்தறி!

ட்டுப் புடவைகளின் உற்பத்தி மற்றும் விற்பனையில் 89 வருட பாரம்பரியமிக்க ஆர்எம்கேவி நிறுவனத்தின் ஆறாவது கிளை... சென்னை, வடபழனி, 'ஃபோரம் விஜயா மால்' ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் உள்ளே சமீபத்தில் உதயமாகியிருக்கிறது. கிழக்கிந்தியா, மேற்கிந்தியா, வடஇந்தியா மற்றும் தென்னிந்தியா என்று இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பிரத்யேக புகழ்பெற்றிருக்கும் கைத்தறிப் புடவை இனங்கள் மற்றும் பட்டுப்புடவைகள், சுமார் 50 ஆயிரம் சதுர அடியில் 'சில்க்ஸ் ஆஃப் இந்தியா’ என்கிற பெயரில், இங்கே காட்சிப்படுத்தப் பட்டிருப்பது சிறப்பு!

''நம்முடைய கைத்தறி ரகங்களை பழைய மாடல்களில் தருவதைவிட, இன்றைய தலைமுறையினருக்குப் பிடிக்கின்ற ஸ்டைலில் உருவாக்கித் தந்தால் கலையும் காப்பாற்றப்படும். அதற்காகவே இந்த ஷோரூம்'' என்கிறார் ஆர்எம்கேவி நிர்வாக இயக்குநர் சிவகுமார், புன்னகையுடன்!

ஷாப்பிங் ‘நியூ’ஸ்!
ஷாப்பிங் ‘நியூ’ஸ்!

இங்கே, தறி நெய்யும் இயந்திரத்தை வைத்து தினமும் நெய்து காண்பிப்பது... சிறப்பு!