சுட்டீஸ்
ஸ்பெஷல் 1
Published:Updated:

ரத்த தானம்...

யாரெல்லாம் கொடுக்கலாம்... எப்படி கொடுக்கலாம்? அவேர்னஸ்

##~##

''ஹலோ... அவசரமா 'பி நெகடிவ்’ குரூப் ரத்தம் வேணும், உங்களுக்கு தெரிஞ்ச வங்க யாராவது இருந்தா சொல்லுங்க ப்ளீஸ்...''

- இதுபோன்ற தொலைபேசி அழைப்புகள், எஸ்.எம்.எஸ்-கள் என்று இந்த நிமிஷம்கூட நம்மில் யாருக்காவது வந்தபடிதான் இருக்கின்றன. ஆனால், 'அவசர ரத்த தேவை என்றால்... எப்படி பெறுவது? ரத்த தானம் செய்ய யாரை அணுகுவது? என்பது பற்றிய விழிப்பு உணர்வுதான் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கிடைக்கவில்லை.

ரத்த தானம்...

ரத்த தானம் பற்றிய விழிப்பு உணர்வை தரும் வகையில் நம்மிடம் பேசிய சென்னை, எழும்பூரில் இருக்கும் 'அரிமா ரத்த வங்கி' (லயன்ஸ் பிளட் பேங்க்), சேர்மன் பி.ஜி.சுந்தரராஜன், ''1984-ம் வருஷம், அன்னை தெரசா வந்து வாழ்த்திய ரத்த வங்கி இது. 29 வருஷமா இயங்கிட்டிருக்கு. இப்பல்லாம், நொடிக்கு ஒரு விபத்து, பெயர் தெரியாத நோய்னு பெருகிட்டே இருக்கறதால ரத்தத்துக்கான தேவையும் அதிகமாயிடுச்சு. ஆரோக்கியமா இருக்கற ஒருத்தரோட உடம்புல, 5 லிட்டர் ரத்தம் இருக்கும். இதுல ரத்த தானத்துக்காக எடுக்கப்படும் ரத்தம் 350 - 400 மில்லி. இதை ஒரு யூனிட்னு சொல்வோம். ரத்தம் எடுத்த அடுத்த 24 மணி நேரத்துல நம்ம உடம்புல இயற்கையாவே அது சுரந்துடும். அதனால ஆரோக்கியமா இருக்கற ஒவ்வொருத்தரும், மூணு மாதத்துக்கு ஒரு முறை ரத்த தானம் பண்ணலாம். ரத்த தானம் செய்ய 20 நிமிடங்கள் போதும். அதுக்கப்புறம் நாம எப்பவும்போல வேலையைப் பார்க்கலாம். எந்தக் கையிலிருந்து ரத்தம் எடுத்திருக்காங்களோ, அந்தக் கையால ரத்தம் கொடுத்த அன்று மட்டும் கனமான பொருட்களை தூக்காம பார்த்துக்கணும். நிறைய தண்ணி குடிக்கணும்'' என்று ரத்த தானம் பற்றிய அறிமுகம் தந்தார்.

ரத்த தானம்...

அவரைத் தொடர்ந்த ரத்த வங்கி மருத்துவ அலுவலர் குணலஷ்மி, ''ஒருத்தரிடம் இருந்து எடுத்த ரத்தம், என்ன குரூப் என்பதிலிருந்து... மஞ்சள்காமாலை, மலேரியா, பால்வினை நோய், ஹெச்.ஐ.வி கிருமிகள் எதுவும் இருக்கானு பலகட்ட பரிசோதனைகள் செய்யறோம். ஹெச்.ஐ.வி இருக்கறது உறுதியான... அந்த ரத்தத்தை டிஸ்போஸ் பண்றதோட, அதற்குரியவருக்கு தக்க மருத்துவ கவுன்சலிங் கொடுக்கவும் ஏற்பாடு செய்றோம்.

முன்னயெல்லாம் ஒருத்தர் ரத்தம் கொடுத்தா... அது அப்படியே இன்னொருத்தருக்கு போய்ச் சேரும். இப்போ, மூணு பேருக்கு போய் சேருவதற்கான வழிமுறைகள் வந்துடுச்சு. அதாவது, ரத்தம் ரெட் செல்ஸ், பிளாஸ்மா, ப்ளேட்லெட்ஸ்னு மூன்று பகுதிகளா பிரிக்கப்படுது. அதில் ரெட் செல்கள் விபத்து மற்றும் அறுவை சிகிச்சையால ரத்த இழப்பு ஏற்பட்டவங்க மற்றும் ரத்தசோகை உள்ளவங்களுக்கும், தீ விபத்தால் பாதிக்கப்பட்டவங்க மற்றும் கல்லீரல் பழுதடைந்தவங்களுக்கு பிளாஸ்மாவும், மலேரியா, டெங்கு நோயாளிகளுக்கு ப்ளேட்லெட்ஸும் செலுத்தப்படுது. ஆக, நாம ஒரு தடவை கொடுக்குற ரத்தத்தால மூணு உயிர்கள் காப்பாத்தப்படுதுங்கறது எவ்வளவு நல்ல விஷயம்!'' என்று பெருமிதத்துடன் சொன்னவர்,

''பொதுவா ஒரே ரத்தப் பிரிவைச் சேர்ந்த ரெண்டு பேரோட ரத்தம் ஒத்துப்போகும்னு எல்லாரும் நெனச்சிட்டிருப்பாங்க. ஆனா, அது உண்மையில்ல. அந்த ரத்தம் ஒத்துப்போகாமலும் இருக்கலாம். இதைக் கண்டுபிடிக்க மிகவும் அட்வான்ஸ்டான ஜெல் டெக்னாலஜியை பயன்படுத்துறோம். நோயாளி, ரத்தம் கொடுக்கறவர்னு ரெண்டு பேரோட ரத்த மாதிரியையும் 'க்ராஸ் மேட்ச்’ செய்து

ரத்த தானம்...

பார்ப்போம். இதில் எந்தவித மாறுதலும் நடக்கலைனா, பிரச்னையில்லை. மாறுதல் நடந்தா, ஒரே பிரிவு ரத்தமானாலும் அது ஒத்துப்போகாது. சினிமாவுல காட்டுற மாதிரி ஹீரோவும் ஹீரோயினும் பக்கத்து பக்கத்து பெட்ல படுத்துகிட்டு இன்ஸ்ட்டன்டா ரத்தம் ஏத்தறது நடக்காத காரியம். ரத்தம் எடுத்து 4 - 6 மணி நேரம் அடுத்தகட்ட வேலைகள் இருக்கு. அதனாலதான், ரத்தம் கொடுத்த பிறகு, குறிப்பிட்ட மணி நேரத்துக்கு காத்திருக்க வைக்கிறோம். இதுபுரியாம பலரும் கோபப்படுவாங்க'' என்று எதார்த்தத்தைப் புரிய வைத்தார் குணலஷ்மி.

''தேவைப்படும்போது கொடுக்கிற ரத்தத்தைவிட, தேவைக்கு முன்பாகவே ரத்த வங்கிகளுக்கு கொடுக்கப்படும் ரத்தத்துக்குதான் மதிப்பு அதிகம்'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்ன ரத்த வங்கியின் சி.இ.ஓ விஸ்வநாத் நாயர்,

ரத்த தானம்...

''நேரடியா ரத்த வங்கிக்கு சென்று, விண்ணப்பத்தை பூர்த்தி செஞ்சாலே போதும்... ரத்த தானம் முடிஞ்சுது. ஒரே பகுதியிலிருந்து குறைந்தபட்சம் 25 பேர் ரத்த தானம் கொடுக்க முன்வந்தா, மொபைல் வேனை அந்த பகுதிக்கே அனுப்பி வைப்போம். ரத்தம் தேவைப்படறவங்க எங்களை தொடர்புகொண்டா, குறிப்பிட்ட குரூப் ரத்தம் எங்களிடம் இருந்தா அரசாங்க விலைக்கே கொடுக்கறோம். தேவைப்படும் ரத்தப்பிரிவு எங்களிடம் இல்லைனா, எங்ககிட்ட தொடர்ந்து ரத்ததானம் செய்பவர்களை தொடர்புகொண்டு ஏற்பாடு செய்றோம். அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு இலவசமாவே கொடுக்கறோம். வார நாட்களில் வர முடியாதவங்களுக்காகவே ஞாயிற்றுக்கிழமையும் வங்கியை நடத்துறோம்'' என்று தங்களின் செயல்பாடுகள் பற்றி சொன்னார்.

நிறைவாக நம்மிடம் பேசிய ரத்த வங்கியின் மக்கள் தொடர்பு அதிகாரி சந்திரசேகர் சொன்ன விஷயம், யோசிக்க வைப்பதாகவே இருந்தது. அது-

''ஐ.டி கம்பெனி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் ரத்த தானம் செய்யறது... பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆனா... ஏப்ரல், மே விடுமுறை மாதங்கள்ல தேவையான ரத்தம் கிடைக்காம இருக்கறதுதான் சோகம். இதனால உயிரிழப்பு வரை செல்லும் நோயாளிகள் நிறைய. பொதுமக்களும் அதிகளவில் ரத்த தானம் செய்தா... இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.''

கட்டுரை, படங்கள்: இந்துலேகா.சி

ரத்த தானம்...

யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்?

ரத்த தானம்...

 18 - 60 வயது வரையுள்ள எல்லா ஆண்களும், பெண்களும் ரத்த தானம் செய்யலாம்.

ரத்த தானம்...

 ரத்த தானம் செய்பவரின் எடை குறைந்தபட்சம் 45 கிலோ இருக்க வேண்டும்.

ரத்த தானம்...

 ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேல் இருக்க வேண்டும்.

ரத்த தானம்...

 ரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும்.

யாரெல்லாம் ரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்?

ரத்த தானம்...

 கர்ப்பிணிகளும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்களும் தவிர்க்க வேண்டும்.

ரத்த தானம்...

 பெரிய அறுவை சிகிச்சை செய்துகொண்ட 6 மாதங்களுக்குள்ளும், சிறிய அறுவை சிகிச்சை செய்துகொண்ட 3 மாதங்களுக்குள்ளும் ரத்த தானம் செய்வதை தவிர்க்கவும்.

ரத்த தானம்...

 மலேரியா நோய் சிகிச்சை பெற்ற மூன்று மாதங்களுக்கு தவிர்க்கவும்.

 மஞ்சள்காமாலை சிகிச்சை பெற்ற 6 மாதங்கள் வரை தவிர்ப்பது நல்லது.

ரத்த தானம்...

 பால்வினை/ஹெச்.ஐ.வி. பாதிப்புள்ளவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது.

ரத்த தானம்...

 மாதவிடாய் நேரங்களில் பெண்கள் ரத்த தானம் செய்ய வேண்டாம்.