சுட்டீஸ்
ஸ்பெஷல் 1
Published:Updated:

சாப்பிட வாங்க!

ஃபுட்ஸ்

##~##

முக்கிய சைவ திருத்தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் நெல்லையப்பரை தரிசிக்க, திருநெல்வேலிவாசிகள் மட்டும் அல்லாமல்... வெளியூர்களில் இருந்தும் ஏராளமானவர்கள் வருகிறார்கள். தரிசனம் முடித்து வெளியே  வருபவர்களின் கண்களில் படுவது... கோயிலின் நேரெதிரே அமைந்து இருக்கும் ஹோட்டல் நெல்லை சரவணபவா...

'சாப்பிட வாங்க’ பகுதிக்காக இம்முறை 'அவள் விகடன்' வாசகிகளுடன் நெல்லையில் களம் இறங்கிய நம் ரெவ்யூ டீம், தேர்வு செய்தது, ஹோட்டல் நெல்லை சரவணபவா. கீழ்தளத்தில் வாகனங்கள் நிறுத்தும் வசதி... மாடியில் குழந்தைகள் விளையாடுவதற்கான பகுதி என வசதி செய்துள்ளனர். மாலையில் மட்டும் மொட்டைமாடி (ரூஃப்டாப்) உணவகம். மின்னொளியில் நெல்லையப்பர் கோயில் கோபுரங்கள் ஜொலிக்கும் அழகை 100 அடி இடைவெளியில் இருந்தபடி பார்த்து வியக்கலாம். கோபுர அழகை காண்பதற்காகவே... மொட்டைமாடி உணவகம் நிரம்பி வழிகிறது!

தென்னிந்திய உணவுகளோடு... கொல்கத்தா சாட், பீட்சா, தந்தூரி வகைகள், சைனீஸ் வகைகள், நூடுல்ஸ் வகைகள் என ஒவ்வொருவரின் விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்ய நிறைய உணவு வகைகள் இங்கே உண்டு. தோசையிலும் ஏகப்பட்ட வகைகள்! கேஷ்யூ புலாவ், கோபி மஞ்சூரியன், தந்தூரி பரோட்டா ஆகியவை இந்த உணவகத்தின் சிறப்பு!

சாப்பிட வாங்க!

குளுகுளு அறையில் 130 ரூபாய்க்கு பரிமாறப்படும் மதிய உணவை சாப்பிடலாம் என்று முடிவெடுத்துச் சென்ற நமது குழுவுக்கு, மெனு கார்டில் இருந்த உணவு வகைகளைப் பார்த்ததும் மனம் மாறியது. சாப்பாடுக்கு சிலரும், சைனீஸ், தந்தூரி பரோட்டா, கோபி மஞ்சூரியன், புலாவ், நூடுல்ஸ் என சிலரும் மாறிவிட்டோம். ரொம்பவும் காத்திருக்க வைக்காமல்... சுடச்சுட கொண்டு வந்து கொடுப்பதை பாராட்ட வேண்டும். சுவையில் குறையில்லாமல் செய்திருப்பவர்கள், உபசரிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். அடுத்து என்ன என்பதைச் சொல்வதற்காக பரிமாறுபவரை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

செட்டிநாடு உணவு வகைகள் நாவுக்கு சுவையைக் கொடுக்கின்றன. சாப்பிட்டு முடித்ததும்... வாழைப்பழம், ஐஸ்கிரீம், பீடா தயார். வகை வகையான ஐஸ்கிரீம் தேவை என்றால், அதற்காக தனியாக ஐஸ்கிரீம் கடை அங்கேயே இருக்கிறது. பழச்சாறுகளும் அதிலேயே கிடைக்கின்றன. உணவு வகைகளில் மசாலா, காரம் அதிகம் கலக்காமல் அளவோடு இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

- சுவைப்போம்...
படங்கள்: எல்.ராஜேந்திரன்

ரெவ்யூ டீமில் இம்முறை இடம் பெற்ற நெல்லை வாசகிகளின் விமர்சனம்...

ராமலட்சுமி (அரசு ஊழியர்): வெரைட்டி டிஷ்கள் இருக்கறதால... எது டேட்ஸ்டா இருக்கும், இந்த ஹோட்டலோட ஸ்பெஷல் அயிட்டம் என்னங்கறதையெல்லாம் சர்வர்கள் எடுத்துச் சொன்னா... சாப்பிட வர்றவங்களுக்கு வசதியா இருக்கும். தந்தூரி பரோட்டா, நாண், கோபி மஞ்சூரியன், பட்டர் பனீர் டேஸ்டா இருந்துச்சு. எதுலயுமே காரம் அதிகம் இல்லைங்கறத பாராட்டி சொல்லணும்!

கவிதா (இல்லத்தரசி): ரூஃப்டாப்பில் குடும்பத்தோட அமர்ந்து கோபுர தரிசனத்தோட சாப்பிடறதுக்காகவே இங்க வருவேன். குழந்தைகள் விளையாடவும் நிறைய இடம் ஒதுக்கி கொடுத்திருக்கறதால, அவங்களும் இங்க சாப்பிட ரொம்ப இஷ்டப்படுவாங்க. சாப்பாடு பரவாயில்லை. நாண்... நல்லா இருந்துச்சு. பொரிச்ச டிஷ்களில் ஆயில் அதிகம் இல்லாம இருந்தது... சிறப்பு.  

சாப்பிட வாங்க!

காந்திமதி ராமகிருஷ்ணன் (இல்லத்தரசி): கோபி 65-ல் எண்ணெய் அதிகம் இல்லாம இருக்கறது சூப்பர்! ஆனா, கொஞ்சம் தூக்கலா காரம் சேர்த்து இருக்கலாம். பட்டர் பனீர் மசாலாவும் ஓ.கே! சைனீஸ் அயிட்டங்களை டிரையா தர்றது போல... கிரேவியோடவும் செய்து கொடுக்கறாங்க. டிரையா வாங்கினா... மொறுமொறுனு சூப்பர் டேஸ்ட்!

சாப்பிட வாங்க!