ஸ்பெஷல் 1
ரெகுலர்
Published:Updated:

குட்டீஸ் குறும்பு!

ரீடர்ஸ், ஓவியங்கள்: ஹரன்

##~##

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு!

150

 நான்கு வயது லக்கேஜ்!

அப்போது என் பையன் ராம்ஸுக்கு நான்கு வயது. விளை யாட்டு சாமான்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்வதுடன் வீட்டுப் பொருட்களையும் பொறுப்பாகப் பார்த்துக் கொள்வான். ஒருமுறை நாங்கள் ரயிலில் மும்பை சென்ற போது, அவனிடம் அடிக்கடி ''நம்ம லக்கேஜ்களை எல்லாம் பத்திரமா பார்த்துக்கடா...'' என்று சொல்ல, ஒவ்வொரு முறை தூங்கி எழுந்த பின்னும் லக்கேஜ்களை ஒரு பார்வை பார்த்துவிட்டே அமர்வான். மும்பை சென்று சேர்ந்தபோது, சில லக்கேஜ் களுடன் முதலில் இறங்கிய என் கணவர், ''மீதி சாமான்களை பத்திரமா பார்த்துக்கடா... நான் இதையெல்லாம் கீழ வெச்சுட்டு வந்துடறேன்...'' என்று சொல்ல, உடனே ராம்ஸ், ''அப்பா நான்

குட்டீஸ் குறும்பு!

மீதி சாமான்களை பத்திரமா பார்த்துக்குறேன்... ஆனா, மறக்காம என்னையும் நீங்க ரயில்ல இருந்து இறக்கி விட்டுடுங்க..!'' என்று கவலை யுடன் சொல்ல, வெடித்துச் சிரித்து விட்டோம்!

- என்.விசாலாட்சி, விருகம்பாக்கம்

மாட்டுக்கு ஜட்டி!

தங்கை பேத்தி வர்ஷினிக்கு 4 வயதுதான் ஆகிறது. எதையும் கூர்ந்து கவனிப்பாள். பின் எதையாவது சொல்லி அனைவரையும் சிரிக்க வைப்பாள். அன்று மாடு சாணி போட்டது. அதை அவளுடைய அம்மா எடுத்து தூரப்போட்டு, பிறகு மாட்டுக்கு புல்

குட்டீஸ் குறும்பு!

வைத்தாள். அதைப் பார்த்த வர்ஷினி, ''முதல்ல மாட்டுக்கு கக்கா கழுவி ஜட்டி போடும்மா... அப்புறமா சாப்பாடு கொடு. இதுகூட உனக்குத் தெரியலையா..?'' என்று கேட்க, வீடே கெக்கேபிக்கேதான்!

- சு.கண்ணகி, மிட்டூர்

'காக்கா பாவம்!’

மூன்று வயதாகும் என் பேரனுக்கு தோசை ஊட்டியபோது, முழுவதும் சாப்பிட்டுவிட்டு இன்னொரு தோசை வேண்டுமெனக் கேட்டான். அப்போது அவனுக்கு வயிற்றுக்கு கொஞ்சம் சரியில்லாமல் இருந்ததால், ''இன்னும் சாப்பிட்டா உனக்கு வயிறு வலிக்கும்...'' என்றேன். மறுநாள் காலை காக்கைக்கு அவனை சாப்பாடு வைக்கச் சொல்ல,

குட்டீஸ் குறும்பு!

எப்போதும் அதை ஜாலியாக செய்பவன் அன்று ''காக்காக்கு சாப்பாடு வேண்டாம்...'' என்றான், மறுத்து. 'ஏன்’ என்று கேட்க, ''தாத்தா ஏற்கெனவே காக்காக்கு தோசை கொடுத்துட்டார். இன்னொரு தோசை சாப்பிட்டா அதுக்கு வயிறு வலிக்கும்!'' என்று விளக்கம் சொல்ல, சிரித்து சிரித்து வயிறு வலி வந்தது எனக்கு தான்!

- ஜெயலட்சுமி வசந்தராசன், கிருஷ்ணகிரி

கடவுளின் பாட்டில்!

குட்டீஸ் குறும்பு!

பிள்ளையாரின் படங்கள் சிலவற்றில் அவர் தும்பிக்கையில் சின்னதாக ஒரு குடம் இருப்பதைப் பார்க்கலாம். இதை அமிர்த கலசம் என்பர். அப்படி ஒரு படம் எங்கள் வீட்டுக் காலண்டரில் உள்ளது. பாசம், அங்குசம், தாமரை, மோதகம் என நான்கு கரங்களில் வெவ்வேறு பொருட்கள் இருக்கும் அந்தப் படத்தை பார்த்த என் சின்ன பெண் அவளது அண்ணனிடம், ''பிள்ளையார் ஏன் தும்பிக்கையில் பானை வெச்சிருக்கார்?'' என்று கேட்டாள். உடனே அவன், ''பிள்ளையார் நிறைய லட்டு, மோதகம் எல்லாம் சாப்பிடறார் இல்லையாடி... அப்ப தண்ணி குடிக்க வேண்டாமா? அதுக்குதான் நாம வாட்டர் பாட்டில் வெச்சிருக்கற மாதிரி பிள்ளையாரும் சொம்புல தண்ணி வெச்சுட்டு இருக்கார்!'' என்று தன் தங்கைக்கு புரியவைக்க(!), சமயோஜிதத்தை ரசித்துச் சிரித்தது எங்கள் வீடு!

- பூர்ணிமா, பெங்களூரு