ஃபேஷன்
##~## |
பலரின் 'ஹார்ட்த்ராப்’ ஷாரூக் உடன், கூடுதல் குஷியளித்தது, சென்னை ஐ.டி.சி. சோழாவில் சமீபத்தில் நடந்த 'சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி... 'பாலம் சில்க்ஸ்’, தன் பத்தாவது ஆண்டைக் கொண்டாடும் விதத்தில் சேலைகளுக்கும் புத்தம் புதிய திசைகளைக் காட்டியது கலக்கலான ஃபேஷன் ஷோ ஒன்றுடன்!
முழுக்கவும் ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ராவின் படைப்புகளை மேடையேற்றிய இவ்விழாவில் மற்றுமொரு சிறப்பு, மிஸ்.மீனா அழகிப் போட்டி (சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகாவின் படுகோனின் பெயர் 'மீனா’)! தேசிய அளவில் நடந்த இப்போட்டியின் முடிவுகளை ஷாரூக் மற்றும் தீபிகா இருவரும் அறிவிக்க, வெற்றி பெற்ற மூன்று பெண்களும் ஷாரூக்குடன் ஒரு ஜாலி ராம்ப் வாக்கினர்!
'பாலம் சில்க்ஸ்’ முகூர்த்தப்பட்டு கலெக்ஷன்களை பெண்கள் உடுத்தி அழகாக மேடையேற, ஷாரூக் மேலும் அழகூட்டினார் அப்பட்டுக்கு. 'லுங்கி டான்ஸ்’ பாடலில் தான் உடுத்தும் லுங்கிக்கு பதிலாக, ஒரு பட்டுத்துணியை உடுத்தி நடனமாடி, 'ரஜினிக்கு காணிக்கை' என்றும் கூறி பலமாகச் சிரித்தார் ஷாரூக். கூடவே நடந்த தீபிகாவும் தன் மெல்லிய சந்தன நிற சேலையில் ஆஸ்யூஷ§வல் அழகு!

இப்படி பாலிவுட்டின் முக்கியப் புள்ளிகள் விழாவை சிறப்பிக்க, நம் தமிழாட்கள் சிம்பு, சுஹாசினி, தன்ஷிகா, சின்மயி ஆகியோரின் வருகையும் 'பெப்’ கூட்டியது!
இதற்கு மேல் வேறு என்ன கேட்பார் 'பாலம் சில்க்ஸ்’ உரிமையாளர் ஜெய்ஸ்ரீ, தன் கடையின் பத்தாம் ஆண்டு விழாவில்!
- உ.கு.சங்கவி
படங்கள்: ஆ.முத்துக்குமார்