Published:Updated:

இனி எல்லாம் ருசியே! - 11

எண்ணெய் சேர்க்காமல் எளிய சைட் டிஷ்!சந்தேகங்களும்... தீர்வுகளும் விஜயலட்சுமி ராமாமிர்தம்ஃபுட்ஸ்

##~##

 மையல் செய்து முடித்த பின்னர், சிறிதளவு எடுத்து நாக்கில் வைத்துப் பார்த்து, சுவை சரியாக இருந்தால், 'அப்பாடா’ என்று ஒரு பெருமூச்சு வரும். ஆம்... தினந்தோறுமே எக்ஸாம் டைம்தான் இல்லத்தரசிகளுக்கு! இந்தப் பரீட்சையில் நீங்கள் நூற்றுக்கு நூறு வாங்கும் வகையில்... உங்கள் சமையல் சிறப்பாக அமைய உறுதுணை புரியவும், சமையல் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு விடையளிக்கவும் சமையல் கலை வித்தகர்கள் களம் இறங்கும் பகுதி இது.

இந்த இதழில் உங்களுக்கு உற்ற தோழியாக, உளமார்ந்த அன்புடன் உதவிக்கு வருபவர் விஜயலட்சுமி ராமாமிர்தம்.

முழுசாக வேக வைத்த  உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் போன்ற காய்களைத் துண்டுகளாக்கும் போது, சீராக வராமல் உடைந்து போகிறது. இதற்கு என்ன செய்யலாம்?

ஒரு தட்டில் ஒரு டீஸ்பூன் எண் ணெய் ஊற்றி அருகில் வைத்துக் கொள்ளுங்கள். வெந்த காய்களைத் துண்டுகளாக்கும் முன், கத்தியின் இருபுறமும் விரலால் எண்ணெயைத் தடவி நறுக்கினால், பிரச்னை தீர்ந்தது. இடையிடையே கத்தியில் இப்படி எண்ணெய் தடவிக்கொண்டால் சீராக துண்டுகள் போடலாம்.

இனி எல்லாம் ருசியே!  - 11

இட்லி, வடை ஆகியவற்றைத் தயாரித்த பின் உப்பு குறைவாக இருப்பது தெரிந்தால் என்ன செய்யலாம்?

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளியுங்கள்.  அதில் இட்லிகளை உதிர்த்துப் போட்டு கொஞ்சம் உப்பும் சேர்த்து, ஒரு கிளறு கிளறினால், ஐந்து நிமிடங்களில்  உப்பில்லா இட்லிகளை உப்புமாவாக மாற்றிவிடலாம். விரும்பினால் வெங்காயமும் சேர்க்கலாம். வடை யாக இருந்தால், ஒரு ஃபோர்க்கினால் ஓரிரு முறை குத்திவிட்டு, உப்பு கலந்த வெந்நீரில் ஒரு நிமிடம் போட்டு விட்டு, பின் தயிரில் ஊற வைத்தால் அருமையான தயிர் வடை ரெடி!

எண்ணெய் சேர்க்காமல் ஒரு எளிய சைட் டிஷ் சொல்ல முடியுமா?

ஒரு பிரஷர் பேன் அல்லது கடாயில் இரண்டு ஆழாக்கு தண்ணீர் விட்டு, அரை ஆழாக்கு பயத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய 2 தக்காளி, இரண்டு பச்சை மிளகாய், கைப்பிடி கறிவேப் பிலை இவற்றைச் சேர்த்து, அடுப்பில் குறைந்த தீயில் வேகவிடுங்கள். நடுவில் ஓரிரு முறை தண் ணீர் வற்றிவிடாமல் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். பருப்பு வெந்ததும், உப்பு சேர்த் துக் கலக்கினால்... இட்லி, தோசை, பொங்கல், சப்பாத்தி ஆகியவற்றுக்கு ஏற்ற எண்ணெயில்லாத சைட் டிஷ் ரெடியாக இருக்கும்

இட்லி, தோசை மாவுகளில் வெந்தயம் கண்டிப்பாக சேர்த்து அரைக்க வேண்டுமா?

இட்லியை ஆவியில் வேக வைப்பதால் உளுந்தினால் வரும் வாயுத் தொல்லையோ, எண்ணெயினால் வரும் கொலஸ்ட்ராலோ இருக் காது. அதனால், இட்லி மாவு அரைக்கும்போது வெந்தயம் சேர்க்க வேண்டியது கட்டாயமில்லை. ஆனால், தோசைக்கு மணத்தைக் கொடுப்ப தோடு, உளுந்தினாலும் எண்ணெயினாலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தோசை மாவில் வெந்தயம் சேர்ப்பது நல்லது. வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்து வைத்துக் கொண்டால், தோசை வார்க்கும் முன் மாவில் ஒரு டீஸ்பூன் கலந்து கொள்ளலாம்.

உப்பு, காரம் சேர்த்து செய்யும் உணவுப் பதார்த்தங்களில்கூட சர்க்கரை அல்லது வெல்லம்  சேர்க்கிறார்கள். எந்தப் பதார்த்தத்தில் இவற்றைச் சேர்க்கலாம்?

புளி சேர்த்து செய்யும் குழம்பு வகைகள், சாம்பார், பிட்ளை, ரசம் போன்ற திரவ வடிவிலுள்ள உணவு வகைகளிலும், புளிக்காய்ச்சல், தோசை மிளகாய்ப்பொடி போன்றவற்றிலும் சின்ன நெல்லிக்காய் அளவு வெல்லம் சேர்த்தால் சுவை பிரமாதமாக இருக்கும். கீரை, கத்திரிக் காய், கொத்தவரங்காய், அவரைக்காய், பாகற்காய் போன்ற காய்களில் பச்சை நிறம் மாறாமல் இருக்கவும், கசப்பு - துவர்ப்பு சுவைகள் தெரியாமல் இருக்கவும் சிறிது சர்க்கரையைத் தூவலாம்.

இனி எல்லாம் ருசியே!  - 11

தினமும் ஒரு சத்தான துவையல் சாப்பிட சுலபமான வழி சொல்லுங்களேன்..!

உளுத்தம்பருப்பு - ஒரு ஆழாக்கு, மிளகாய் வற்றல் - 15, பெருங்காயத்தூள் - சிறிதளவு ஆகியவற்றை எண்ணெ யில் வறுத்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ளுங்கள். துவையல் தேவைப்படும்போது இதிலிருந்து இரண்டு ஸ்பூன் பருப்பு, மிளகாய் - 2 எடுத்து மிக்ஸி ஜாரில்

இனி எல்லாம் ருசியே!  - 11

போட்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, சின்ன வெங்காயம், துருவிய தேங்காய் இவற்றில் ஏதாவது ஒன் றையும் (பச்சையாகவே) சேர்த்து, சுண்டைக்காய் அளவு புளி மற்றும் உப்பையும் சேர்த்து அரைத்தால், தினமும் வெரைட்டியாக துவையல் ரெடியாகிவிடும்!

கைவசம் தோசை மாவு குறைவாக இருக்கிறது. அதன் அளவை அதிகரிக்க, என்ன மாவு சேர்க்கலாம்?

மாவு வகைகளைச் சேர்ப்பதைவிட இப்படி செய்து பாருங்களேன். ஒரு பாத்திரத்தில் கையில் உள்ள தோசை மாவை ஊற்றுங்கள். அதில் இரண்டு மடங்கு தண்ணீரையும் ஊற்றுங்கள். தோசை மாவு எவ்வளவு இருந்ததோ... அதில் பாதி அளவு சம்பா கோதுமை ரவையை சேர்த்து, கொஞ்சம் உப்பும் சேர்த்து நன்கு கலக்கி, 10 நிமிடங்கள் ஊறவிடுங் கள். இதை மெல்லிய தோசைகளாக வார்த்தால், பேப்பர் ரோஸ்ட் போல முறுகலாக, அருமையாக இருக்கும்.