'லேடி சச்சி்ன் ஆதிரா !'

'அசத்தல் பெண்கள்’ விழாவுக்கு முதல் நாள் கோவையில் கொட்டி தீர்த்துக் கொண்டிருந்தது கோடை மழை. 'விழாவுக்கு வாசகிகள் எப்படி வந்து சேரப் போகிறார்களோ...?’ என்ற நம் யோசனையை, மார்ச் 27 அன்று கோவை, மலையாளி சமாஜத்தை காலை ஒன்பது மணிக்கெல்லாம் 'ஹவுஸ்ஃபுல்’ ஆக்கி சிதறடித்தார்கள் நம் வாசகிகள்!
##~## |
அட்டகாச வணக்கத்தோடு என்ட்ரி கொடுத்த தொகுப்பாளர் சுமதி ராஜகோபால், மியூசிக்கல் சேர் போட்டியிலிருந்து பிள்ளையார் சுழி போட... கிரிவலம் சுற்றுவதைப் போல சேர்களை சுற்றிச் சுற்றி வந்த பெண்கள் கூட்டத்தில், நாற்காலியைக் கைப்பற்றியவர்... ஸ்ரீதேவி!
ஸ்கிப்பிங் போட்டியில் வழக்கமாக 50 கவுன்ட்ஸ் ஸ்கிப் செய்பவர்கள்தான் ஃபைனல் ஸுக்குப் போவார்கள். இங்கு கூட்டம் கலகலவென இருந்த தால் ''60 கவுன்ட்ஸ் ஸ்கிப் செய்பவர்கள்தான் ஃபைனல் ஸுக்கு'' என்று சுமதி அறிவிக்க, விடாமல் 82 கவுன்ட்ஸ் ஸ்கிப் செய்து வெற்றி பெற்றார் ஸ்ரீஜா!
பால் டேப்பிங்கில் செஞ்சுரி அடித்து ஜெயித்த ஆதிராவை 'லேடி சச்சின்’ என்று அரங்கம் கூவிப் பாராட்ட, அத்தனை பெருமிதம் அவர் முகத்தில். போட்டிகளுக்கு இடையே மேடை ஏறிய 'யோகி யோகா’ அமைப்பைச் சேர்ந்த சத்தியபாமா, சுமதி பெண்களுக்கு அத்தியாவசியமான சில எளிய யோகா பயிற்சிகளை 'டெமோ’ செய்து காட்டி விளக்க... கவனமாக உள்வாங்கிக் கொண்டார்கள் வாசகிகள்.

பக்கெட் பால் போட்டி எளிதாகத் தோன்றினாலும், விளையாடக் கடின மானதுதான். அதிலும் அசத்தலாக 3 பந்துகளைப் போட்டு முதலிடம் பெற்றார் நிர்மலா. தொடர்ந்த நடனப் போட்டியில், ஆடிட் டோரியமே ஆடியது! அதில், போட்டியாளர்கள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி, முதலிடம் பெற்றார் கோகிலப் பிரியா.
'பாட்டுக்குப் பாட்டு’ போட்டி யின்போது மேடையில் நெரிசல் அதிகமாக, போட்டியாளர்கள் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்து 'எங்கேயும் எப்போதும் சங்கீதம்’ என ஆரம்பித்து 'துள்ளுவதோ இளமையில்’-ல் முடித்தது செம ஜாலி ஹோலி!
நிகழ்ச்சியின் முடிவில் ஐ.டி.சி. நிறுவனத்தைச் சேர்ந்த செந்தில், வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்க, பங்கேற்ற வாசகிகள் அனைவருக்கும் சன்ஃபீஸ்ட் கிஃப்ட் பேக்குகளும், ஃப்ரேம் போட்டாக் களும் வழங்கப்பட்டன.