Published:Updated:

ஹலோ, ஜாக்கிரதை !

உறவுக்கு உலை!

வாசகிகள் பக்கம்

ஹலோ, ஜாக்கிரதை !

 'அம்மா மாதிரி’, 'தங்கச்சி மாதிரி’, 'அண்ணன் மாதிரி’... இப்படி வெளி உலகத்திடம் அரிதாரம் பூசாமலே நடித்து ஏமாற்றும் ஆண்-பெண் உறவுகள் இங்கு ஏராளம். என் கணவர் எதிர் வீட்டினரோடு அந்நியோன்யமாகப் பழகி வந்தார். அந்த வீட்டுப் பெண்மணி தனக்கு அம்மா மாதிரி என்றும், அவரின் இரண்டு மகள்களும் தனக்கு தங்கைகள் போல என்றும் சொல்வார். ''பாவம் ஆம்பள இல்லாத வீடு...'' என்று சொல்லி, அந்த வீட்டின் மூத்த பெண்ணுக்கு இவர்தான் வரன் பார்த்து திருமணம் முடித்தார். ஆனால், இரண்டாவது பெண்ணுடன் இவர் பழகிய விதம் எனக்குச் சந்தேகத்தை தந்தது. அவருடைய செல்போனில் அந்தப் பெண்ணின் தோளில் மிக நெருக்கமாக கை போட்டபடி போட்டோக்கள் எடுத்திருந்தார். கேட்டதற்கு, ''ரெண்டு பொம்பளப் பிள்ளைங்க இருக்கு நமக்கு. என்னைப் போய் நீ சந்தேகப்படலாமா..? அவ என் தங்கை மாதிரி'' என்று தலையில் அடித்து சத்தியம் செய்தார். ஆனாலும், நாளாக ஆக என் சந்தேகம் ஊர்ஜிதமானது. வீட்டில் நடந்த சண்டை போலீஸ் ஸ்டேஷன் வரைப் போக, ஒரு கட்டத்தில் அவர் நிரந்தரமாக என்னையும், என் குழந்தைகளையும் விட்டுப் பிரிந்து, அந்தப் பெண்ணுடன் செட்டில் ஆகிவிட்டார். அவள் அம்மாவும் இதற்கு உடந்தை. இப்போது என் சம்பாத்தியத்தில் இரண்டு பெண் குழந்தைகளையும் காப்பாற்றி வரும் நான், ஊர் வாயை மூட, மாமியார் வீட்டில் வசித்து வருகிறேன்.

மனைவியைத் தவிர, தோள் சாய வேறு துணை தேடிக்கொண்டேதான் இருக்கும் ஆண் வர்க்கம். அவர்களுக்கு வளைந்து கொடுத்துப் போகும் பேராபத்து மிக்க பெண்களும் நம்கூடவேதான் இருக்கிறார்கள் இங்கு. கவனம்..!

- வருத்தத்துடன் ஒரு வாசகி

இப்படி உங்களுக்கும்  ஏதாவது அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். அதை  எல்லாம் இங்கே இறக்கி வையுங்கள். அது, உங்கள் மனபாரத்தை இறக்கி  வைப்பதோடு, மற்ற தோழிகளுக்கு  எச்சரிக்கையாகவும்  அமையப்போகிறது.! உங்கள் அடையாளங்கள்  எதையுமே நீங்கள் தரத் தேவையில்லை.  ரகசியத்துக்கு நாங்கள்  100% கியாரன்டி! உடனே, உங்கள் செல்போனிலிருந்து  04442890003 என்ற எண்ணை அழுத்துங்கள். இணைப்பு கிடைத்தவுடன்,  கணினி குரல் ஒலிக்கும்.

 

பீப் ஒலிக்குப் பிறகு,  உங்களுடைய அனுபவத்தை சொல்லுங்கள்.  நினைவிருக்கட்டும்... இரண்டே நிமிடங்களுக்குள் சொல்ல வேண்டும்.  வழக்கமான செல்போன் கட்டணங்களுக்கு உட்பட்டது.