ஸ்பெஷல் 1
Published:Updated:

நினைவுகளே... நினைவுகளே....

நினைவுகளே... நினைவுகளே....

நாச்சியாள்

வெயில் சோதித்துக் கொண்டிருந்த ஒரு முற்பகலில், நடிகை சச்சு வீட்டுக்குள் நுழைந்தோம். படுஃபிரெஷ்ஷாக, வாய்   கொள்ளா சிரிப்புடன் ''வாங்க!’' என்று அவர் சொன்ன வார்த்தையில், நாமும் ஃபிரெஷ்ஷா னோம். கையில் தயாராக வைத்திருந்த புகைப்படத்தை நம்மிடம் காண்பித்த கணம், 'குமாரி’ சச்சு... குழந்தையாகவே மாறிப் போயிருந்தார்!

நினைவுகளே... நினைவுகளே....
##~##

''ஜெயாம்மாகூட சேர்ந்து எத்தனையோ போட்டோ எடுத்திருந்தாலும், இந்த போட்டோ ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா... ஜெயாம்மாகூட என் அண்ணன்கள் மணி, கிருஷ்ணமூர்த்தி, தம்பி சாய்ராம், தங்கச்சி சித்ரானு எல்லாருமே இருக்கறதுதான்!

ஜெயாம்மாக்கு என் நாடகம்னா ரொம்ப இஷ்டம். அப்ப அவங்க சினிமாவுல அவ்ளோ பிஸி. இருந்தாலும், ஃப்ரீ டைம்ல போன் பண்ணி, 'அக்கா... இன்னிக்கு உங்க நாடகம் எந்த சபாவுல?’னு கேட்டுட்டு, 'டான்’னு கிளம்பி வந்துடுவாங்க.

நான், முத்துராமன் அண்ணன், மனோரமா ஆச்சி, ஸ்ரீகாந்த்னு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிச்ச 'காசேதான் கடவுளடா' டிராமாவை, தேனாம்பேட்டை, எஸ்.ஐ.ஈ.டி காலேஜ் ஆடிட்டோரியத்துல 1968-ம் வருஷம் போட்டிருந்தோம். அங்க ஹாஸ்டல்ல தங்கி இருந்த பொண்ணுங்க எல்லாம்... ஜெயாம்மா வந்திருக்காங்கனு தெரிஞ்சதும் கூட்டமா கூடிட்டாங்க. அதையெல்லாம் சமாளிச்சு, என்

நினைவுகளே... நினைவுகளே....

கூடப்பிறந்தவங்க அத்தனை பேரும் அவங்களோட சேர்ந்து எடுத்துக்கிட்ட போட்டோ இது.

ஜெயாம்மா முதல் முறையா தமிழக முதலமைச்சரா பதவிக்கு வந்தப்ப, வாழ்த்துச் சொல்றதுக்காக நானும் தங்கையும் போயிருந்தோம். 'என்ன சித்ரா... நல்லா இருக்கியா? எத்தனை குழந்தைகள், என்ன படிக்கறாங்க, என்ன பண்றாங்க?’னு அவங்க ஸ்பெஷலா விசாரிச்சதும், என் தங்கச்சிக்கு ஒரே ஆச்சர்யம். ஒண்ணு, ரெண்டு தடவைதான் அவளப் பார்த்து இருக்காங்க. ஆனா, பேரை ஞாபகமா சொன்னதும் அவளுக்கு சந்தோஷம். ஜெயம்மாவுக்கு அந்தளவுக்கு மெமரி பவர்!

மறக்காம இந்தத் தடவையும் பதவி ஏற்பு விழாவுக்கு இன்விடேஷன் அனுப்பினது ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதுதானே நட்புக்கு மரியாதை!'' என்று நெகிழ்ந்து உருகினார் சச்சு!

படம்: ச.இரா.ஸ்ரீதர்