ஸ்பெஷல் 1
Published:Updated:

டிரெஸ்ஸிங் ரூம் !

டிரெஸ்ஸிங் ரூம் !

 'ஆடை அலங்கார நிபுணர்’
அனுராதா பிஸானி

 வெள்ளை நிற ஆடைகளுக்கு தனி மகத்துவம் உண்டு. இது தேவதை களுக்குப் பிடித்த நிறம் என்பதால், மேலை நாடுகளில் திருமணங்களுக்குப் பெரும்பாலும் வெள்ளை நிற ஆடைகளைத்தான் தேர்ந்தெடுக் கிறார்கள். நமது நாட்டிலும் வெள்ளை 'ஆடைகளை’ தூய்மை என்கிற குணத்தோடுதான் அர்த்தப்படுத்திப் பார்க்கிறோம்.

டிரெஸ்ஸிங் ரூம் !

வெள்ளை நிறத்துக்கு விஞ்ஞான பூர்வமான ஒரு மகத்துவமும்      உண்டு. 'சுள்’ என்று அடிக்கும் வெயிலின் வெப்பத்தை வெண்ணிற ஆடைகள் பெரும்பாலும் தனக்குள் வைத்துக் கொள்ளாமல் உடனடியாக பிரதிபலித்துவிடுவதால், வெயில் காலத்தில் அணிவதற்கு ஏற்ற ஆடையாக அவை பரிந்துரைக்கப் படுகின்றன. அந்த வெண்ணிற ஆடை, காட்டனாகவும் இருந்து உடம்பை இறுக்கி பிடிக்காத வகையில் காற்றோட்டம் கொண்டதாகவும் இருந்துவிட்டால்... வெயிலுக்கு இதைவிட சிறந்த டிரெஸ் இல்லை.

##~##

எனது மகள் என்ற அடையாளத்தை தாண்டி, படத்தில் இருக்கும் பிரதாவுக்கு என சில அடையாளங்கள் உண்டு. ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்காது என்றாலும் எங்கள் வீட்டில் இரண்டு டிசைனர்கள் இருக்கிறோம். ஆம். பிரதாவும் ஒரு டிசைனர்தான். தனது கல்லூரி நண் பர்கள் என்ற வட்டத்தில் மட்டுமே அறிமுகமான டிசைனர். அவள் இந்த தலைமுறையைச் சேர்ந்தவள் என்ப தால், டிசைனிங் விஷயத்தில் என்னிடம் பல கருத்துகளில் மாறுபடுவாள். சில கருத்துக்களில் ஒன்றுபடவும் செய் வோம். அப்படி நாங்கள் ஒன்றுபட் டிருக்கும் ஒரு சில டிசைன்களில் அவள் இங்கே அணிந்திருக்கும் வெள்ளை நிற மிடியும் ஒன்று.

மாலை வேளைகளில் நடைபெறும் விழாக்களுக்கு அணிந்து கொண்டு போக சௌகரியமானது என்பதால், இதை 'ஈவ்னிங் வேர்’ எனலாம். இந்த மிடியை மட்டுமே அணிந்தால் சௌகரியமாகத்தான் இருக்கும். ஆனால், மரியாதைக்குரிய நண்பர்களும் உறவினர்களும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு போவதாக இருந்தால்... இதோடு லூஸான ஒரு 'த்ரீ ஃபோர்த்' பைஜாமாவை அணிந்து செல்வது மரியாதையைக் கூட்டும்.

பிரதா முதல் படத்தில் அணிந்திருக்கும் காலணிக்கும்... இரண்டாவது படத்தில் அணிந்திருக்கும் காலணிக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். இந்த உடைக்கு இரண்டாவது படத்தில் இருக்கும் காலணிதான் பொருத்தமாக இருக்கிறது இல்லையா? அதேபோல ஒரே ஒரு செயின் இந்த டிரெஸ்ஸின் மதிப்பை எப்படி ஒரேயடியாக கூட்டி விடுகிறது என்பதையும் இரண்டாவது படம் காட்டுகிறது இல்லையா?!

                          - ஜொலிக்கும்...
படங்கள்: கே.ராஜசேகரன்