Published:Updated:

கணவருக்கு அறிமுகப்படுத்திய தோழி, வலுக்கும் நட்பு... விலக்கப்படுகிறேனா நான்?| #PennDiary81

Penn Diary
News
Penn Diary

என் கணவர், குழந்தைகள் என எல்லோரிடமும் நன்றாகப் பழகினாள் தோழி. எல்லோருக்கும் அவளை பிடித்துவிட்டது. அவளுக்கும் எங்கள் அனைவரையும் பிடித்துவிட்டது. குறிப்பாக, என் கணவர் ஜோக்ஸ் அடிப்பது, கேலி செய்வது, வம்பிழுப்பது என அவளிடம் பேசியதை பார்த்தபோது எனக்கே ஆச்சர்யம்.

Published:Updated:

கணவருக்கு அறிமுகப்படுத்திய தோழி, வலுக்கும் நட்பு... விலக்கப்படுகிறேனா நான்?| #PennDiary81

என் கணவர், குழந்தைகள் என எல்லோரிடமும் நன்றாகப் பழகினாள் தோழி. எல்லோருக்கும் அவளை பிடித்துவிட்டது. அவளுக்கும் எங்கள் அனைவரையும் பிடித்துவிட்டது. குறிப்பாக, என் கணவர் ஜோக்ஸ் அடிப்பது, கேலி செய்வது, வம்பிழுப்பது என அவளிடம் பேசியதை பார்த்தபோது எனக்கே ஆச்சர்யம்.

Penn Diary
News
Penn Diary

அன்பான கணவர், இரண்டு ஆண் பிள்ளைகள், வசதியான குடும்பம். நான் இல்லத்தரசி. கணவர் கட்டுமானத் தொழிலில் இருக்கிறார். பெரிய நகரில் ஒன்றில் வசிக்கிறோம். கணவர் என் மீதும், பிள்ளைகள் மீதும் மிகவும் அன்புடன் இருப்பார். பொறுப்பான குடும்பத்தலைவர். கடுமையான உழைப்பாளி.

Happy Family
Happy Family

இந்நிலையில், ஒரு வருடத்திற்கு முன் என் கல்லூரித் தோழி ஒருத்தி, நாங்கள் வசிக்கும் நகரத்துக்கு ஒரு திருமணத்துக்காக குடும்பத்துடன் வருவதாக என்னிடம் கூறினாள். அவளையும் அவள் குடும்பத்தையும் வீட்டுக்கு அழைத்திருந்தேன். பரஸ்பரம் குடும்ப நண்பர்கள் ஆனோம்.

பின்னர், ஒரு பெர்சனல் வேலையாக அவள் மட்டும் எங்கள் ஊருக்கு வந்திருந்தபோது, நான் அவளை என் வீட்டிலேயே தங்கிக்கொள்ள வற்புறுத்தி அழைத்தேன். ஒரு வாரம் அவள் எங்கள் வீட்டில் தங்கியபோது, என் கணவர், குழந்தைகள் என எல்லோரிடமும் நன்றாகப் பழகினாள். எல்லோருக்கும் அவளை பிடித்துவிட்டது. அவளுக்கும் எங்கள் அனைவரையும் பிடித்துவிட்டது. குறிப்பாக, என் கணவர் ஜோக்ஸ் அடிப்பது, கேலி செய்வது, வம்பிழுப்பது என அவளிடம் பேசியதை பார்த்தபோது எனக்கே ஆச்சர்யம். ஏனெனில், வீட்டில் ஜாலியாக இருந்தாலும் என் கணவர் வெளியாள்களிடம் அவ்வளவாகப் பழகமாட்டார். இதை என் தோழியிடம் சொல்லி, ‘உங்கிட்ட அவர் இவ்ளோ ஃப்ரெண்ட்லி ஆனது ஆச்சர்யம்’ என்றேன். அவளும், ‘ரொம்ப நல்ல மனுஷன், யூ ஆர் லக்கி’ என்றாள். பின்னர் என் தோழி ஊருக்குத் திரும்பிவிட்டாள்.

Friends (Representational Image)
Friends (Representational Image)
Pixabay

ஆனால், என் தோழியும் கணவரும் சாட், போன் கால் என தொடர்பில் இருக்க ஆரம்பித்தனர். எனக்கு அனுப்பும் அதே மீம்ஸ், புகைப்படங்கள், ஃபார்வேர்டுகளை என் கணவருக்கும் என் தோழி அனுப்ப ஆரம்பித்தாள். ‘இந்த நியூஸ் பார்த்தீங்களா?’ என்று நான் என் கணவரிடம் கேட்டாள், ’உன் ஃப்ரெண்ட் அனுப்பினதுதானே? அந்த மொக்கையை எனக்கும் அனுப்பியிருந்தாங்க, படிச்சுட்டேன்’ என்று சிரிப்பார். ஆனால், அப்போது அது எனக்கு உறுத்தலாகத் தெரியவில்லை.

ஆறு மாதங்களுக்கு முன், என் மூத்த மகனின் ஃப்ரெண்டுடைய பிறந்த நாள் பார்ட்டியை ஒரு பெரிய ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார்கள். காரில் கிளம்பிய பின்னர், அந்த ஹோட்டலின் பெயரை நான் மறந்துவிட, என் மகன் தன் ஃப்ரெண்டுக்கு போன் செய்து ஹோட்டல் பெயரை கேட்டு, டிரைவரிடம் சொன்னான். அப்போது டிரைவர், ‘அக்கா, அந்த ஹோட்டல்லதானே உங்க ஃப்ரெண்டு போன மாசம் குடும்பத்தோட வந்தப்போ தங்கியிருந்தாங்க..? சார்தானே ரூம் போட்டுக் கொடுத்தாங்க?’ என்று சொல்ல, ‘எந்த ஃப்ரெண்ட்..?’ என்று கேட்க நினைத்து, என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டேன். பின்னர், என் கல்லூரித் தோழிதானே அது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் விதமாக, ‘ஆமா. நம்ம வீட்டுல ஒரு வாரம் தங்கினா இல்ல... ஆனா போன தடவை வீட்டுக்கு வராம இங்கேயே தங்கிட்டுப் போயிட்டா’ என்று நான் சொல்ல, ‘ஆமாக்கா...’ என்று டிரைவர் ஆமோதித்ததில், அது அவள்தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன்.

Sad woman(Representational image)
Sad woman(Representational image)
Pexels

என் கணவரிடம் சென்று, ‘என் தோழி குடும்பத்தோடு ஊருக்கு வந்திருக்கா, அவளுக்கு நீங்கதான் ரூம் அரேஞ்சு பண்ணி கொடுத்திருக்கீங்க. ஆனா இதைப் பத்தி அவளோ, நீங்களோ ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லல. எனன் நடக்குது?’ என்று சண்டை போட்டேன். அவர், ‘இதுக்கு எதுக்கு நீ சீரியஸ் ஆகுற? வேலை டென்ஷன்ல சொல்லாம மறந்திருப்பேன்’ என்று மழுப்பலாக பதில் சொன்னார்.

என் தோழியிடம், ‘நீ ஊருக்கு குடும்பத்தோட வந்தப்போ, என் வீட்டுக்காரர்தான் உனக்கு ஹோட்டல்ல ரூம் அரேஞ்சு பண்ணிக் கொடுத்திருககர். ஆனா, இதை பத்தி நீ ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லல? ஏன்?’ என்றேன் கோபத்துடன். ‘அய்யோ... உன் ஹஸ்பண்ட் உன்கிட்ட சொல்லியிருப்பார்னு நினைச்சேன். அப்போ என் குடும்பத்தோட ஒரு டைட்டான ஷெட்யூல்ல வந்திருந்தேன். டிராவலுக்கே நேரமில்ல. அதான் உங்கிட்ட பேசக்கூட முடியல, வீட்டுக்கு வர முடியல’ என்று சமாளித்தாள்.

Being cheated
Being cheated

இருவர் சொன்னதை கேட்ட பிறகும், ‘நம்புற மாதிரியா இருக்கு?’ என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் தான் எனக்கும். என் கேள்விக்கு பதிலளித்தபோது, இருவரிடமும் நான் ஒரு மாற்றத்தை உணர்ந்தேன். என்னதான் கூலாக பேசினாலும், அவர்களிடம் ஒரு பதற்றம் இருந்தது. அதற்குப் பிறகும், அவர்களிடம் தொடர்ந்து மாற்றத்தை உணர்ந்து வருகிறேன். அவர்கள் நட்பு வலுக்கிறது, நான் விலக்கப்படுகிறேன் என்று தோணுகிறது. என்ன செய்ய வேண்டும் நான்?