Published:Updated:

தவறான வழிகளில் சம்பாதிக்கும் அண்ணன், தடுக்காத அண்ணி, ஆபத்துகளை புரிந்துகொள்வார்களா?#PennDiary91

Penn Diary
News
Penn Diary

`இதுக்கு முன்னாடி மாத சம்பளம் வாங்கும்போது சம்பாதிச்சதைவிட 10 மடங்கு இதுல கிடைக்குது. அதனால, இன்னும் அஞ்சு வருஷம் மட்டும் இதுல முடியுறவரை சம்பாதிச்சுட்டு அப்புறம் இதுல இருந்து ஒதுங்கிடலாம்’ என்கிறார்கள்.

Published:Updated:

தவறான வழிகளில் சம்பாதிக்கும் அண்ணன், தடுக்காத அண்ணி, ஆபத்துகளை புரிந்துகொள்வார்களா?#PennDiary91

`இதுக்கு முன்னாடி மாத சம்பளம் வாங்கும்போது சம்பாதிச்சதைவிட 10 மடங்கு இதுல கிடைக்குது. அதனால, இன்னும் அஞ்சு வருஷம் மட்டும் இதுல முடியுறவரை சம்பாதிச்சுட்டு அப்புறம் இதுல இருந்து ஒதுங்கிடலாம்’ என்கிறார்கள்.

Penn Diary
News
Penn Diary

எங்கள் வீட்டில் அண்ணன், நான் என இரண்டு பிள்ளைகள். மிடில் க்ளாஸ் குடும்பம். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. நானும் அண்ணனும் தனியார் நிறுவனங்களில் வேலைபார்த்து வந்தோம். இரண்டு வருடங்களுக்கு முன்பு, அண்ணனுக்கு ஊரில் ஒரு பெரிய ரௌடியுடன் நட்பு ஏற்பட்டது. அதிலிருந்து, கொஞ்சம் கொஞ்சமாக அவர் அந்த கும்பலுடன் சேர்ந்து, அவர்கள் செய்த சட்டத்துக்குப் புறம்பான காரியங்களில் தானும் ஈடுபட ஆரம்பித்தார்.

Crime
Crime

என் அண்ணி, மிடில் க்ளாஸ் வாழ்க்கையில் சலிப்புற்றவர். அண்ணன் அந்த ரௌடி கும்பலுடன் சேர்ந்து சில அடாவடி செயல்களில் ஈடுபட்டு கொண்டு வரும் பணம், அண்ணனின் மாத சம்பளத்தைவிட பல மடங்கு அதிகம். எனவே, அண்ணனை இந்த தவறான செயல்களில் இருந்து தடுக்கவோ, அவருக்குத் தடைபோடவோ இல்லை அண்ணி.

அடிதடிக்கு செல்வது, நிலத்தகராறுகளில் கமிஷனுக்கு அடாவடி வேலைகள் செய்வது, சட்டவிரோத மணல் குவாரிகளில் ஈடுபடுவது, சீட்டாட்ட கிளப் நடவடிக்கைகள், பெரிய திருட்டு சம்பவங்களில் உதவுவது, கொலை வழக்குகளில் சம்பந்தப்படுவது வரை அனைத்து குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார் அண்ணன். அவர் பிரதானமாக இதை செய்யவில்லை என்றாலும், இதனை செய்யும் பெரிய குற்ற கும்பலுடன் தொடர்பில் இருக்கிறார், பங்குகொள்கிறார். அனைத்து குற்றங்களிலும் கூலி, கமிஷன் என்று வாங்குகிறார்.

குற்றம் கைது
குற்றம் கைது

உறவினர்கள், நட்பு வட்டத்தில் எல்லாம் எங்கள் குடும்பம் மீதான மரியாதை குறைய ஆரம்பித்தது. அண்ணனின் போக்கை சிலர் உரிமையுடன் கண்டித்தார்கள். பலர், பணத்துக்காக தவறான வழிகளில் அவர் செல்வதையும், அதற்கு அண்ணியும் மறுப்புத் தெரிவிக்காமல், அவரை நல்வழிப்படுத்தாமல் இருப்பதையும் தங்களுக்குள் பேசி வருகிறார்கள்.

நான் என் அண்ணனிடமும், அண்ணியிடமும் இது குறித்து நேரடியாகவே பேசினேன். ’இதெல்லாம் நமக்கு தேவையில்லாத பழக்கம். நேர்மையாக சம்பாதிப்பதே நிலைக்கும். குற்றச் செயல்களில் வரும் பணம் பாவங்களையும் கொண்டு வரும். நிறைய பணம் கிடைக்கிறது என்று நினைத்து ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு ஒரு பையன் இருக்கிறான். அவனுக்கு சொத்துகளைவிட முக்கியம் நல்ல பெற்றோராக நீங்கள் இருப்பது’ என்று எல்லாவற்றையும் எடுத்துக் கூறினேன். ஆனால் அண்ணனும், அண்ணியும் எதற்கு செவிசாய்ப்பதாக இல்லை. ’இதுக்கு முன்னாடி மாத சம்பளம் வாங்கும்போது சம்பாதிச்சதைவிட 10 மடங்கு இதுல கிடைக்குது. அதனால, இன்னும் அஞ்சு வருஷம் மட்டும் இதுல முடியுறவரை சம்பாதிச்சுட்டு அப்புறம் இதுல இருந்து ஒதுங்கிடலாம்’ என்கிறார்கள்.

இந்நிலையில், லோக்கலில் நடந்த அரிசி கடத்தல் சம்பவம் தொடர்பான ஒரு வழக்கில், என் அண்ணனும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த திருட்டை நடத்திய கும்பலே வழக்கையும் நடத்துகிறது. என் அண்ணி முதலில் கொஞ்சம் கலங்கிப்போனாலும், ‘இப்படிப் போயிட்டா இதெல்லாம் சகஜம்தானாம். அதெல்லாம் உங்க அண்ணன் பத்திரமா வந்துடுவார்’ என்று எனக்கு ஆறுதல் கூறுவது, ஆச்சர்யமாகவும், கோபமாகவும் உள்ளது. இதற்கிடையில், சில மாதங்களுக்கு முன் என் அண்ணன் நிலத்தகராறு தொடர்பாக அடிதடிக்கு சென்றதில், எதிர் தரப்பினர் என் அண்ணனை பதிலுக்குத் தேடி வந்து அடித்து, அவர் எட்டு தையல்கள் போடும் அளவுக்குச் சென்றதும் நடந்து முடிந்திருக்கிறது.

police
police

இன்று இந்த தவறுகள், நாளை இன்னும் பெரிதாக என்னென்ன குற்றங்களில் என் அண்ணன் ஈடுபடப்போகிறாரோ, சிக்கப்போகிறாரோ என்று எனக்கு பதைபதைப்பாக உள்ளது. காவல்துறை வழக்குகள் முதல் கொலை மிரட்டல் வரை ஆபத்துகள் என் கண்களுக்குத் தெரிகின்றன. அண்ணனையும் அண்ணியையும் எப்படி நல்வழிப்படுத்துவது?