Published:Updated:

மாமியார் குணம் காட்டும் அம்மா, போட்டிபோடும் அண்ணி; தவிக்கும் அண்ணனுக்கு நிம்மதி எங்கே? #PennDiary83

Penn Diary
News
Penn Diary

என் அண்ணி, `என்னதான் உங்கம்மா உங்களை கஷ்டப்பட்டு வளர்ந்திருந்தாலும், அதுக்காகவெல்லாம் நான் அவங்களை சகிச்சுக்கிட்டு போக முடியாது. எனக்குப் பிடிக்காத மாதிரி அவங்க நடந்தா, அவங்களுக்குப் பிடிக்காத மாதிரிதான் நான் நடந்துக்குவேன்’ என்று என் அண்ணனிடம் கூறிவிட்டார்.

Published:Updated:

மாமியார் குணம் காட்டும் அம்மா, போட்டிபோடும் அண்ணி; தவிக்கும் அண்ணனுக்கு நிம்மதி எங்கே? #PennDiary83

என் அண்ணி, `என்னதான் உங்கம்மா உங்களை கஷ்டப்பட்டு வளர்ந்திருந்தாலும், அதுக்காகவெல்லாம் நான் அவங்களை சகிச்சுக்கிட்டு போக முடியாது. எனக்குப் பிடிக்காத மாதிரி அவங்க நடந்தா, அவங்களுக்குப் பிடிக்காத மாதிரிதான் நான் நடந்துக்குவேன்’ என்று என் அண்ணனிடம் கூறிவிட்டார்.

Penn Diary
News
Penn Diary

நாங்கள் மிடில் க்ளாஸ் குடும்பம். அண்ணன், நான் என எங்கள் வீட்டில் இரண்டு பிள்ளைகள். அரசு வேலை பார்த்துவந்த அப்பா சிறு வயதிலேயே இறந்துவிட, அம்மாவுக்கு அந்த வேலை கிடைத்தது. சொந்தங்களின் ஆதரவோ, உதவியோ எதுவுமில்லாத சூழ்நிலையில், தனியொருத்தியாக இருந்து எங்களை வளர்த்தெடுத்தார் அம்மா. அண்ணாவும் நானும் நன்றாகப் படித்து, நல்ல வேலையில் அமர்ந்தோம். என் திருமணத்தை அம்மாவும் அண்ணனும் சிறப்பாக நடத்தினார்கள்.

Single Mother
Single Mother
Pexels

அண்ணன் ஒரு பெண்ணக் காதலித்தான். அம்மாவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் ஒற்றை மனுஷியாக அவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கிய தன் மகன், தனது திருமண முடிவை தன் கைகளில் கொடுக்கவில்லை என்ற ஏமாற்றமும், ஆற்றாமையும் அவரை பிடித்துக்கொண்டது. ’அம்மா, அண்ணனுக்கு உன் மேலான பாசத்திலோ, மரியாதையிலோ எந்த மாற்றமும் இல்லை. ஆனால், காதல் புத்தியைக் கேட்டு வருவதில்லை. இப்போதும் அவன் தானாகத் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவனுக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது, திருமணத்துக்கு உன் சம்மதம் கேட்டு வந்து நிற்கிறான். ஆசீர்வாதம் செய்’ என்று என் அம்மாவிடம் நான் நிறைய பேசியே, அவரை திருமணத்துக்கு சம்மதிக்க வைக்க முடிந்தது.

திருமணத்துக்குப் பிறகு, என் அம்மா, என் அண்ணனிடம் பொசஸிவ் ஆக ஆரம்பித்தார். அது, மருமகளிடம் மாமியார் குணத்தை காட்டுவதில் வந்து நிற்கிறது. இன்னொரு பக்கம், என் அண்ணியும் ஏட்டிக்குப் போட்டி குணம் உடையவராக இருக்கிறார். `என்னதான் உங்கம்மா உங்களை கஷ்டப்பட்டு வளர்ந்திருதாலும், அதுக்காகவெல்லாம் நான் அவங்களை சகிச்சுக்கிட்டு போக முடியாது. எனக்குப் பிடிக்காத மாதிரி அவங்க நடந்தா, அவங்களுக்குப் பிடிக்காத மாதிரிதான் நான் நடந்துக்குவேன்’ என்று என் அண்ணனிடம் கூறிவிட்டார்.

Love marriage(Representational image)
Love marriage(Representational image)
Pixabay

என் அண்ணனுக்குத் திருமணமாகி எட்டு மாதங்கள்தான் ஆகின்றன. ஆனால், அம்மாவுக்கும் அண்ணிக்கும் இடையே நடக்கும் மாமியார் - மருமகள் ஈகோ போரில் சிக்கிக்கொண்டு அவன் படும் பாடுகளைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது.

’அம்மா நமக்காக எவ்வளவோ தியாகங்கள் செஞ்சுதான் நம்மை வளர்த்தாங்க. ஆனா, இப்போ நான் அவங்களைவிட மனைவிதான் முக்கியம்னு நினைச்சிடுவேனோனு அவங்களா நினைச்சுட்டு, அந்த இன்செக்யூர்டுனெஸ்ல அவங்க நடந்துக்கிற விதம் எனக்குக் கஷ்டமா இருக்கு. இன்னொரு பக்கம், நம்ம வீட்டு நிலைமை, என் சூழல், குணம் எல்லாம் தெரிஞ்சும், என்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டவளும், அம்மாவோட வயசையும் மனசையும் புரிஞ்சுக்காம எதிரும் புதிருமா நிக்கும்போது வீடே நரகமாகுது. இவங்க ரெண்டு பேரும், ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுக்காத தங்களோட போக்கால என் நிம்மதி போகுதுங்கிறதை பத்தி யோசிக்கவே இல்ல’ என்று அண்ணன் வருந்துகிறான். மருகுகிறான்.

Depressed Man
Depressed Man
Pexels

என் அம்மாவுக்கும் அண்ணிக்கும் எப்படி புரியவைப்பேன்... உண்மையில் அன்பு என்ற பெயரிலான போட்டியில் அவர்கள் என் அண்ணன் வாழ்க்கையில் சந்தோஷம் இல்லாமல் ஆக்கிக்கொண்டிருப்பதை?