Published:Updated:

அலுவலக ஆண் நண்பருக்குக் கொடுத்த கடன்; திருப்பிக் கேட்டால் வஞ்சகமாக மிரட்டுபவரை என்ன செய்வது?

Penn Diary
News
Penn Diary

பணத்தை விரைவில் தந்துவிடுகிறேன் என்று சாக்குகள் சொல்லியபடியே இருந்தார். ஒரு கட்டத்தில் நான் பொறுமையிழந்து, 'உங்களுக்குப் பாவம் பார்த்து உதவி செய்ததுக்கு எனக்கு தண்டனையா இது?' என்று கோபத்துடன் கேட்க, அப்போது அவர் வெளிக்காட்டிய முகத்தில் அதிர்ந்துபோய்விட்டேன். #PennDiary - 63

Published:Updated:

அலுவலக ஆண் நண்பருக்குக் கொடுத்த கடன்; திருப்பிக் கேட்டால் வஞ்சகமாக மிரட்டுபவரை என்ன செய்வது?

பணத்தை விரைவில் தந்துவிடுகிறேன் என்று சாக்குகள் சொல்லியபடியே இருந்தார். ஒரு கட்டத்தில் நான் பொறுமையிழந்து, 'உங்களுக்குப் பாவம் பார்த்து உதவி செய்ததுக்கு எனக்கு தண்டனையா இது?' என்று கோபத்துடன் கேட்க, அப்போது அவர் வெளிக்காட்டிய முகத்தில் அதிர்ந்துபோய்விட்டேன். #PennDiary - 63

Penn Diary
News
Penn Diary

ஒரு தனியார் அலுவலத்தில் 10 வருடங்களாகப் பணிபுரிகிறேன். டீம் லீடர் பொறுப்பு, நல்ல சம்பளம், அன்பான குடும்பம் என நிம்மதியான வாழ்க்கை. அலுவலகத்திலும் நல்ல நட்பு வட்டம். அதில் ஒரு நண்பர் கடன் கேட்க, கொடுத்ததால் இப்போது நான் என் வேலையையே விடும் நிலைக்கு வந்துள்ளேன்.

Office (Representational image)
Office (Representational image)
Pixabay

அந்த நண்பர் இதே அலுவலகத்தில் 8 வருடங்களாகப் பணிபுரிபவர். வேறு டீமை சேர்ந்தவர். என்றாலும், ஒரே ஊர்க்காரர், ஒத்த ரசனை எனப் பல விஷயங்களால் நாங்கள் நல்ல நண்பர்கள் ஆனோம். ஒரு வருடத்துக்கு முன், குடும்பத்தில் உள்ள பிரச்னைகளால் தனக்குக் கடன் இருப்பதாகவும், மிகவும் இக்கட்டான சூழலில் இருப்பதாகவும் கூறி, என்னிடம் 50,000 ரூபாய் கடனாகக் கேட்டார். நான் என் சேமிப்புப் பணத்தில் இருந்து அதை எடுத்துக்கொடுத்தேன்.

அடுத்த ஆறு மாதங்களில், குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவமனையில் அட்மிட் செய்திருப்பதால் அவசர தேவை என்று சொல்லி 30 ஆயிரம் வாங்கினர். மற்றொரு சூழலில், குடியிருந்த வாடகை வீட்டை ஹவுஸ் ஓனர் காலி பண்ணச் சொல்லிவிட்டதால், புதிய வீட்டுக்கு அட்வான்ஸ் தொகை கொடுக்கக் கூடுதல் தொகை தேவைப்படுவதால் 20,000 கொடுக்கும்படி மிகவும் வேண்டி வாங்கினார்.

Working woman (Representational image)
Working woman (Representational image)
Pexels

ஒவ்வொரு முறை பணம் வாங்கும்போதும், வெகு விரைவில் பெர்சனல் லோன் அப்ளை செய்யப் போவதாகவும், அப்ரூவல் ஆனதும் என் பணத்தை திருப்பித் தந்துவிடுவதாகவும் கூறினார். முதல் முறை நான் அதை நம்பிப் பணம் கொடுத்தாலும், அடுத்தடுத்த இரண்டு சூழல்களில் எனக்கு அவர் மீது நம்பிக்கை போய்விட்டதுதான். என்றாலும், குழந்தைக்கு சிகிச்சை, வீட்டுக்கு அட்வான்ஸ் என்று அவர் சொன்ன காரணங்களால் தவிர்க்க இயலாமல் பரிதாபப்பட்டு பணம் கொடுத்துவிட்டேன்.

பணம் கொடுத்து ஒரு வருடம் ஆன நிலையில், என கணவர், எங்களுக்கு கார் வாங்குவதற்காக, என் சேமிப்பில் இருந்த இரண்டு லட்சம் ரூபாயைக் கேட்க, அதில் ஒரு லட்சத்தை என் நண்பரிடம் கொடுத்திருந்ததால், பதறி அவரிடம் சூழலைச் சொல்லி பணத்தை திருப்பிக் கேட்டேன். ஆரம்பத்தில், விரைவில் தந்துவிடுகிறேன் என்று சாக்குகள் சொல்லியபடியே இருந்தார். ஒரு கட்டத்தில் நான் பொறுமையிழந்து, 'உங்களுக்குப் பாவம் பார்த்து உதவி செய்ததுக்கு எனக்கு தண்டனையா இது?' என்று கோபத்துடன் என் பணத்தைக் கேட்க, அப்போது அவர் வெளிக்காட்டிய முகத்தில் அதிர்ந்துபோய்விட்டேன்.

colleagues (Representational image)
colleagues (Representational image)
Pixabay

'பணத்தைக் கொடுக்க முடியாது. யார்கிட்ட வேணும்னாலும் போய் சொல்லிக்கோங்க. ஆபீஸ்ல யாராச்சும் என்னை வந்து கேட்டா, 'அவங்களுக்கும் எனக்கும் 'பெர்சனலா' சில விஷயங்கள் இருக்கு, அதுலதான் பணம் கொடுக்கல், வாங்கல் எல்லாம் வந்தது. அதெல்லாம் உங்களுக்குத் தெரியாம வந்து பேசாதீங்க'னு சொல்லிடுறேன். உன் வீட்டுல யாராச்சும் வந்து கேட்டாலும் இதையேதான் சொல்வேன்' என்று, என் கேரக்டரை சேதப்படுத்தி விடுவதாகச் சொல்லி மிரட்டினார். நான் உடனே அஞ்சிவிடாமல், 'இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன், ஸ்டேஷன்ல நான் கம்ப்ளெயின்ட் கொடுப்பேன்' என்றேன். 'என்கிட்ட கொடுக்கக் காசு இல்ல. என் மானம் போறதை பத்தியும் எனக்குக் கவலை இல்ல. ஆனா, உங்க மானத்தையும் போக வைப்பேன்' என்று மீண்டும் மிரட்டினார்.

நான் அவருக்குப் பணம் கொடுத்தபோது, அலுவலகத்தில் அவர் மரியாதையைக் காப்பாற்ற எண்ணி, அதைப் பற்றி பிற நண்பர்களிடம், தோழிகளிடம் பகிரவில்லை. அதேபோல, அவர் பணத்தை விரைந்து கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையில், என் கணவரிடமும் சொல்லவில்லை. இப்போது நான் போய் அலுவலக நண்பர்கள், கணவரிடம் நான் ஏமாந்த கதையைச் சொல்லும்போது, அவர்கள் கேட்கும் முதல் கேள்வி, 'இதை ஏன் முதல்லயே எங்ககிட்ட சொல்லலை' என்பதாகத்தான் இருக்கும். அப்போது அந்த நண்பர் வந்து என்னை கேரக்டர் அசாஸினேட் செய்வதுபோல ஏதாவது சொன்னால், அலுவலக நண்பர்கள் அனைவரும் அதை நம்பிவிட மாட்டார்கள் என்றாலும், அதை நம்புபவர்கள் சிலரும் இருக்கத்தானே செய்வார்கள் என்று அச்சமாக உள்ளது. மேலும், என் கணவர் என்னை முழுமையாக நம்புவார் என்றாலும், நான் இப்படி ஒரு பிரச்னையில் சிக்குவது அவருக்குக் கொடுக்கக் கூடிய கோபம், மனஉளைச்சல் என்னவாக இருக்கும் என்பதையும் யோசிக்க வேண்டி இருக்கிறது.

A sad woman
A sad woman
freepik

என்ன செய்வது என்றே புரியாத இக்கட்டான சூழல். வேறு வழி இல்லாமல், எனது நகை ஒன்றை விற்று, கணவரிடம் பணத்தைக் கொடுத்து இப்போதைக்கு சமாளித்துவிட்டேன். என்றாலும், என்றாவது ஒருநாள் அவர் அந்த நகையைப் பற்றிக் கேட்கும்போது, மீண்டும் பிரச்னைதான். இன்னொரு பக்கம், அந்த நண்பர் தந்த அதிர்ச்சி, மனஉளைச்சலால் இந்த அலுவலகத்தில் தொடர்ந்து பணிபுரியவே எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது. மேலும், இப்போது மட்டுமல்ல, எப்போதும் நான் அந்தப் பணத்தை திருப்பிக் கேட்டுவிடக் கூடாது என்று அவ்வப்போது விதவிதமான மிரட்டலை அவர் தொடர்ந்தபடியேதான் இருக்கிறேன். கிட்டத்தட்ட வேலையை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்துவிட்டேன். இன்னொரு பக்கம், தவறு செய்தவர் தைரியமாக இருக்கும்போது, உதவி செய்த நாம் ஏன் இப்படி முடிவெடுக்க வேண்டும் என்று ஆதங்கமாகவும் இருக்கிறது. என்றாலும், துஷ்டரிமிருந்து நாம்தான் தூர விலக வேண்டும் என்று தோன்றுகிறது.

வேறு வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். சரியா?