Published:Updated:

காதலனின் மரணம், திருமண வெறுப்பு, வற்புறுத்தும் பெற்றோர்; எப்படி புரியவைக்க? #PennDiary95

#PennDiary
News
#PennDiary

அடுத்து என்ன நடக்க வேண்டுமோ அதுவே நடந்தது. மூன்று மாதங்களில் நானும் அவரை காதலிப்பதாகத் தெரிவித்தேன். பரஸ்பர அன்பு, மரியாதை, சந்தோஷம், சிரிப்பு, அக்கறை, ஊக்குவிப்பு என எல்லாமே அமைந்த முழுமையான காதலாக இருந்தது எங்கள் காதல்.

Published:Updated:

காதலனின் மரணம், திருமண வெறுப்பு, வற்புறுத்தும் பெற்றோர்; எப்படி புரியவைக்க? #PennDiary95

அடுத்து என்ன நடக்க வேண்டுமோ அதுவே நடந்தது. மூன்று மாதங்களில் நானும் அவரை காதலிப்பதாகத் தெரிவித்தேன். பரஸ்பர அன்பு, மரியாதை, சந்தோஷம், சிரிப்பு, அக்கறை, ஊக்குவிப்பு என எல்லாமே அமைந்த முழுமையான காதலாக இருந்தது எங்கள் காதல்.

#PennDiary
News
#PennDiary

நான் கல்லூரியில் படித்தபோது, சீனியர் ஒருவரை காதலித்தேன். நான்தான் அவரிடம் புரொபோஸ் செய்தேன். அப்போது ஃபைனல் இயர் படித்துக்கொண்டிருந்த அவர், ‘இப்போ நீ செகண்ட் இயர்தான் படிக்கிற. உன் வாழ்க்கையில இன்னும் நிறைய பசங்க வருவாங்க. படிப்பை முடி. இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சும், அவங்கள்ல எல்லாம் நான்தான் பெஸ்ட்னு உனக்குத் தோணினா அப்போ வந்து சொல்லு. என் வாழ்க்கையிலும் அதேபோல, நான் கடந்த பெண்கள்ல எல்லாம் நீதான் எனக்கு பெஸ்ட் சாய்ஸ்னு அப்போ எனக்குத் தோணினா அப்போ ரெண்டு பேரும் லவ் பண்ணுவோம்’ என்றார்.

காதலனின் மரணம், திருமண வெறுப்பு, வற்புறுத்தும் பெற்றோர்; எப்படி புரியவைக்க? #PennDiary95

என் தோழிகள் எல்லாம், ‘ரொம்ப ஓவரா பண்ணுறான், ஏதோ சினிமா மாதிரி டயலாக் பேசுறான், விட்டுடு அவனை’ என்றார்கள். ’ஒருவேளை அவர் வேற யாரையாவது லவ் பண்றாரோ, நம்மளை வெயிட்டிங் லிஸ்ட்ல வைக்கிறாரோ’ என்று எனக்கும் தோன்றியதால், அதோடு என் காதல் எண்ணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். அவர் படிப்பை முடித்து, வேலையில் சேர்ந்துவிட்டார். நான் படிப்பை முடிக்கும்வரை, எங்காவது பார்த்தால் ‘ஹை’, ‘பை’ என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒரு ஃபார்மல் ஃப்ரெண்ட்ஷிப்பில் இருந்தோம்.

இந்நிலையில், நான் வேலையில் சேர்ந்தபோது, அவர் என்னிடம் புரொபோஸ் செய்தார். இடைப்பட்ட காலத்தில் தனக்கு ஒரு பிரேக் அப் நேர்ந்ததையும் கூறினார். இம்முறை நான், ‘முடிவெடுக்க டைம் வேணும்’ என்றேன். ‘அதுவரை ஃப்ரெண்ட்ஸா இருப்போம்’ என்றார். அடுத்து என்ன நடக்க வேண்டுமோ அதுவே நடந்தது. மூன்று மாதங்களில் நானும் அவரை காதலிப்பதாகத் தெரிவித்தேன். பரஸ்பர அன்பு, மரியாதை, சந்தோஷம், சிரிப்பு, அக்கறை, ஊக்குவிப்பு என எல்லாமே அமைந்த முழுமையான காதலாக இருந்தது எங்கள் காதல்.

Lovers
Lovers
Pixabay

வழக்கமான காதலர்கள்போல இல்லாமல், அவர் எங்களை ஆக்கபூர்வமாக வளர்த்தெடுத்தார். இருவரின் வேலைக்கும் தேவைப்பட்ட, நாங்கள் அடுத்த நிலைக்குச் செல்ல உதவக்கூடிய கோர்ஸில் இருவரும் சேர்ந்து படித்து முடித்தோம். ஒருவரின் பணிரீதியான முன்னேற்றத்துக்கு மற்றவர் பக்கபலமாக இருந்தோம். இப்படியே இரண்டு வருடங்கள் கடந்த பின்னர் எங்கள் வீடுகளில் எங்கள் காதல் பற்றி சொன்னோம். அவர் வீட்டில் சுபம், சம்மதம். எங்கள் வீட்டில் என் அக்காவுக்கு அப்போது வரன் பார்த்துக்கொண்டிருந்ததால், அவள் திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் கழித்து எங்கள் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்றார்கள்.

இதற்கிடையில், எங்கள் சம்பளம் உயர்ந்திருந்தது. இருவருக்குமே, வீட்டுக்குப் பணம் கொடுக்க வேண்டிய தேவையில்லை, எங்கள் பெற்றோர்கள் வெல் செட்டில்டுதான் என்பதால், ‘கல்யாணத்துக்கு முன்னாடி நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு இடம் வாங்குவோம். அது நம்ம கல்யாணத்துக்கு நமக்கு நாமே கொடுத்திக்கிற கிஃப்ட். அந்த லோனை ரெண்டு பேரும் சேர்ந்து அடைப்போம். கல்யாணத்துக்கு அப்புறம், இந்த லோன் முடிஞ்சதும், நாம ரெண்டு பேரும் மறுபடியும் லோன் போட்டு அதுல வீடு கட்ட ஆரம்பிப்போம்’ என்றெல்லாம் 10 வருடங்களுக்கான திட்டமிடலுடன் வாழ்க்கையை அணுகினோம். எங்கள் பெற்றோரும் எங்களை பாராட்டினர்.

காதலர்கள்
காதலர்கள்

அதன்படி, கொஞ்சம் அவுட்டரில் ஒரு கிரவுண்ட் இடத்தை 10 லட்சத்துக்கு லோனில் நாங்கள் வாங்கினோம். என் பெயரில் பத்திரம் பதிந்து, இருவருமாக அந்த லோனை பகிர்ந்துகட்டி வந்தோம். ஒரு கட்டத்தில் என் அக்காவின் திருமணமும் முடிந்தது. அடுத்த ஆறு மாதங்களில் எங்கள் திருமணத்துக்குத் தேதி குறிக்கலாம் என்றார்கள் பெற்றோர். அந்த நாளுக்காக நாங்கள் காத்துக்கொண்டிருந்தபோதுதான், அது நடந்தது. ஒரு விபத்தில் அவர் உயிரிழந்துவிட்டார்.

தனிமை, மனஅழுத்தம், ஒரு கட்டத்தில் தற்கொலை முயற்சி வரை சென்றுவிட்டேன் நான். பல கட்ட கவுன்சலிங்குக்குப் பிறகு, இந்த வாழ்வை வாழ்ந்துதான் தீர்க்க வேண்டும் என்ற ஏற்பு எனக்கு வந்தது. வேறு ஊரில், வேறு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தேன். என் காதலரை மறக்க முடியவில்லை என்றாலும், அவர் நினைவுடன் நாள்களை நகர்த்த கற்றுக்கொண்டேன். இப்படியே நான்கு வருடங்கள் கடந்துவிட்டன.

காதலனின் மரணம், திருமண வெறுப்பு, வற்புறுத்தும் பெற்றோர்; எப்படி புரியவைக்க? #PennDiary95
Pexels

இப்போது எனக்கு 31 வயதாகிறது. திருமணத்துக்கு என் பெற்றோர் வற்புறுத்துவது வாடிக்கை என்றாலும், இப்போது அது தீவிரமாக உள்ளது. ‘நாங்க இருக்கும்போதே உன்னை செட்டில் செய்யலைன்னா, எங்களால நிம்மதியா சாகக் கூட முடியாது. நீ சம்மதிக்கலைன்னா நான் தற்கொலை பண்ணிப்பேன்’ என்றெல்லாம் எமோஷனல் பிளாக்மெயில் செய்கிறார் என் அம்மா. நான் சம்பாதிக்கிறேன், என்னை சுயமாக, பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள முடியும். அப்படித்தான் இருக்கிறேன் இந்த மூன்று வருடங்களாக. கூடவே, என்னால் என் கடந்தகாலத்தை கடந்துவரமுடியவில்லை. அவர்கள் திருமணப் பேச்சை எடுத்தாலே கோபமாக, வெறுப்பாக இருக்கிறது. அது என்னை மன அழுத்தத்தில் தள்ளுகிறது. எப்படி புரியவைப்பது?