Published:Updated:

வேலைக்குப் போகாத கணவர், மரியாதை இல்லாத வாழ்க்கை; விடிவு எப்போது? | #PennDiary98

#PennDiary
News
#PennDiary

என் சுயமரியாதை பற்றியோ, வேதனை பற்றியோ அவருக்குக் கவலையில்லை. கணவர் வேலையில்லாமல் தன் அண்ணனின் நிழலில் ஒண்டி இருக்கும்போது, குழந்தை பற்றி நான் எப்படி யோசிப்பது? அதனால், குழந்தை ஆசை இருந்தும் அதையும் நான் தவிர்த்து வருகிறேன்.

Published:Updated:

வேலைக்குப் போகாத கணவர், மரியாதை இல்லாத வாழ்க்கை; விடிவு எப்போது? | #PennDiary98

என் சுயமரியாதை பற்றியோ, வேதனை பற்றியோ அவருக்குக் கவலையில்லை. கணவர் வேலையில்லாமல் தன் அண்ணனின் நிழலில் ஒண்டி இருக்கும்போது, குழந்தை பற்றி நான் எப்படி யோசிப்பது? அதனால், குழந்தை ஆசை இருந்தும் அதையும் நான் தவிர்த்து வருகிறேன்.

#PennDiary
News
#PennDiary

நான் பொறியியல் பட்டதாரி. எனக்கு மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் முடிந்தது. என்னை பெண் பார்க்க வந்தபோது, மாப்பிள்ளை சுயதொழில் செய்துகொண்டிருப்பதாகக் கூறினார்கள். ஆனால், திருமணத்துக்குப் பின்னர் அவர் செய்து வந்த பிசினஸை நிறுத்துவிட்டார். இந்த இரண்டரை வருடங்களாக அவர் எந்த வேலைக்கும் போகவில்லை.

என் கணவர் வீட்டில், அவர் அம்மா, அண்ணன், அண்ணன் மனைவி உள்ளனர். கணவரின் தங்கையை திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். என் கணவர் தன் அண்ணன் சம்பாத்தியத்தில் வாழ்ந்து வருகிறார். அதனால், நானும் அவர் சம்பாத்தியத்தில் வாழ வேண்டிய கட்டாயம். இதனால், எனக்கு என்ன தேவை என்றாலும், அந்த வீட்டில் நான் கூனிக்குறுகி நின்றுதான் வாங்கிக்கொள்ள வேண்டும்.

பெண் டைரி
பெண் டைரி
மாதிரிப்படம்

உதாரணமாக, என் செருப்பு அறுந்து புது செருப்பு வாங்க வேண்டும் என்றால், என் கணவரிடம் சொன்னால், அவர் தன் அம்மாவிடம் கேட்கச் சொல்வார். என் மாமியாரிடம் சென்று கேட்டால், தன் பெரிய பையனிடம் கேட்டுச் சொல்வதாகச் சொல்வார். என் கணவரின் அண்ணனோ, தன் மனைவியிடம் பணம் வாங்கிகொள்ளச் சொல்வார். அவரோ, மிகவும் சலிப்பாக அந்த ஐந்நூறு ரூபாயை என்னிடம் கொடுப்பார். இப்போது புரிகிறதா இந்த வீட்டில் என் நிலைமை? கணவரின் தங்கை இங்கு வந்து செல்லும்போதெல்லாம், என் நிலைமை அறிந்து, என் கையில் சில நூறுகளைக் கொடுத்து, கூடவே அதற்கான அதிகாரத்தையும் எடுத்துக்கொள்ளும்போதெல்லாம் வெட்கித் தலைகுனிகிறேன். என் பெற்றோர் வீட்டிலும் என்னை ஆதரிக்கும் நிலையிலான பொருளாதாரச் சூழல் இல்லை.

நான் என் கணவரிடம் வேலைக்குச் செல்லும்படி எத்தனையோ முறை கூறிவிட்டேன். ஆனால், அவருக்கு ஒரு வேலையில், தொழிலில் கால் ஊன்ற வேண்டும் என்ற எண்ணமே இல்லை. ஊர் சுற்றிக்கொண்டே இருக்கிறார். சிகரெட், தண்ணீர் போன்ற கெட்ட பழக்கங்கள் எல்லாம் அவரிடம் இல்லை. ஆனால், சம்பாத்திய மில்லாமல் வெட்டியாக வாழ்க்கையைக் கழிப்பவரும் கெட்டவர்தானே? குறிப்பாக, தன்னை நம்பி வந்த மனைவியையும் மற்றவர்களிடம் கையேந்த விடும் கெட்டவர்.

ஆண் - பெண்
ஆண் - பெண்

இது பற்றி என் கணவரிடம் அழுது கூறிப் பார்த்தேன். கோபப்பட்டேன். எச்சரித்தேன். எதற்கும் அவர் மசிவதே இல்லை. `எங்க அண்ணன் என்னை பார்த்துக்குறான். இதுல உனக்கு என்ன பிரச்னை?’ என்கிறார். அவர் அண்ணன், தன் தம்பியை பார்த்துக் கொள்ளலாம். ஆனால், தம்பி மனைவியும் அவரை எதிர்பார்த்து இருக்க வேண்டிய சூழலில் உள்ள வலி, வேதனை அவமானம் எதுவும் அவருக்குப் புரியவில்லை. அல்லது புரிந்தும், என் சுயமரியாதை பற்றியோ, வேதனை பற்றியோ அவருக்குக் கவலையில்லை. கணவர் வேலையில்லாமல் அண்ணனின் நிழலில் ஒண்டி இருக்கும்போது, குழந்தை பற்றி நான் எப்படி யோசிப்பது? அதனால், குழந்தை ஆசை இருந்தும் அதையும் நான் தவிர்த்து வருகிறேன்.

நான் வேலைக்குச் செல்ல நினைத்தாலும், `என் பையன் வேலையில்லாம இருக்கும்போது நீ வேலைக்குப் போனா, பொண்டாட்டி சம்பாத்தியத்துல சாப்பிடுறான்னு அவனை கேவலமா பேசுவாங்க’ என்று அதற்கும் முட்டுக்கட்டை போடுகிறார் என் மாமியார்.

என்னதான் விடிவு எனக்கு?