Published:Updated:

கிடைத்திருக்கும் வெளிநாட்டு வேலை, திருமணத்துக்குக் கட்டாயப்படுத்தும் பெற்றோர்; எதை தேர்ந்தெடுப்பது?

Penn Diary
News
Penn Diary

இப்போது ஒரு வருடம் நான் வெளிநாடு சென்று வருவது, என் கரியரில் எனக்குப் பெரிய பூஸ்ட் ஆக அமையும். ஆனால், திருமணத்துக்குப் பின் குடும்பம், குழந்தை போன்ற சூழல்கள் வெளிநாட்டில் வேலைபார்ப்பதற்கான வாய்ப்பை இல்லாமலே ஆக்கிவிடும் என்பதுதான், பல பெண்களின் அனுபவம். #PennDiary-68

Published:Updated:

கிடைத்திருக்கும் வெளிநாட்டு வேலை, திருமணத்துக்குக் கட்டாயப்படுத்தும் பெற்றோர்; எதை தேர்ந்தெடுப்பது?

இப்போது ஒரு வருடம் நான் வெளிநாடு சென்று வருவது, என் கரியரில் எனக்குப் பெரிய பூஸ்ட் ஆக அமையும். ஆனால், திருமணத்துக்குப் பின் குடும்பம், குழந்தை போன்ற சூழல்கள் வெளிநாட்டில் வேலைபார்ப்பதற்கான வாய்ப்பை இல்லாமலே ஆக்கிவிடும் என்பதுதான், பல பெண்களின் அனுபவம். #PennDiary-68

Penn Diary
News
Penn Diary

நான் மிடில் க்ளாஸ் குடும்பத்தை சேர்ந்த பெண். அப்பா, அம்மா இருவரும் ஆசிரியர்கள். தங்கைகள் இருவரும் இரட்டை சகோதரிகள். நான் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, இப்போது சென்னையில் ஒரு எம்.என்.சி நிறுவனத்தில் பணிபுரிகிறேன். தங்கைகளும் வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள்.

Woman
Woman

இந்நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன் வீட்டில் எனக்கு வரன் பார்க்க ஆரம்பித்தனர். ஆனாலும் எந்த மாப்பிள்ளையும் சரியாக அமையவில்லை. இன்னொரு பக்கம், வேலையில் எனக்கு நல்ல வளர்ச்சி இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் வந்த ஒரு வரனை, எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்துப்போனது. எனக்கும் ஓ.கேதான். இப்போது, என் நிறுவனம் எனக்கு வெளிநாட்டில் ஒரு வருடம் பணிபுரிவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

இப்போது எனக்கு 25 வயதாகிறது. நான் வெளிநாட்டில் ஒரு வருடம் வேலைபார்த்துவிட்டு, பிறகு திருமணம் செய்துகொள்கிறேன் என்கிறேன். என் பெற்றோரோ, வயது கூடிவிடும், எனக்குப் பின் இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள், அவர்கள் திருமணமும் ஒரு வருடம் தாமதமாகும் என்கிறார்கள். மேலும், இரண்டு வருடங்களாகத் தேடி இப்போதுதான் நல்ல வரன் அமைந்திருக்கிறது, இதை தவறவிட்டால் இதுபோல் இன்னொரு முறை அமையாது என்றெல்லாம் காரணங்களை அடுக்குகிறார்கள்.

Mom and Daughter (Representational Image)
Mom and Daughter (Representational Image)

அவர்கள் காரணங்களுக்கு எல்லாம் என்னிடம் தீர்வு இருக்கிறது. 'எனக்காக தங்கைகள் திருமணத்தை தள்ளிப்போட வேண்டாம், அவர்கள் திருமணத்தை முதலில் நடத்துங்கள், பிறகு என் திருமணத்தை நடத்திக்கொள்ளலாம்' என்றேன். 'ஊர், உறவில் என்ன சொல்வார்கள்? நாளை அது உன் திருமணத்தில் பிரச்னை ஆகலாம்' என்கிறார்கள். 'ஒரு வருடம் கழித்து இதேபோல ஒரு நல்ல வரன் கிடைக்கும். கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. யாருக்கு யார் என்று ஏற்கெனவே எழுதிவைத்ததுதான்' என்றால், 'கண் முன் ஒரு நல்ல வாழ்க்கையை நழுவவிட நீ முடிவெடுக்கலாம். ஒரு பெற்றோராக நாங்கள்தான் உனக்கு புத்தி சொல்ல வேண்டும்' என்கிறார்கள்.

திருமணம் போலவே எனக்கு வேலையும் சம முக்கியத்துவம் வாய்ந்தது. இரண்டும் என் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கியக் காரணிகள்தான். இப்போது ஒரு வருடம் நான் வெளிநாடு சென்று வருவது, என் கரியரில் எனக்குப் பெரிய பூஸ்ட் ஆக அமையும். ஆனால், திருமணத்துக்குப் பின் குடும்பம், குழந்தை போன்ற சூழல்கள் வெளிநாட்டில் வேலைபார்ப்பதற்கான வாய்ப்பை இல்லாமலே ஆக்கிவிடும் என்பதுதான், பல பெண்களின் அனுபவம். எல்லா பெண்களையும் திருமணத்தை நோக்கியேதான் தள்ள வேண்டுமா? இதுபோன்ற வாய்ப்புகள் கைகளில் கிடைக்கப்பெறும் பெண்களையாவது 'கோ அஹெட்...' என்று அனுப்பக்கூடாதா?

அதற்காக, 'என் குடும்பம் வறுமையில் இருக்கிறது, நான்தான் என் தங்கைகளுக்குக் கல்யாணம் முடிக்க வேண்டும், நான் வெளிநாட்டு வேலைக்குச் சென்றே ஆக வேண்டும்' போன்ற காரணங்கள் எல்லாம் என்னிடம் இல்லை. வெளிநாட்டு வேலை என்பது என் கனவு; லட்சியம். அதற்கு ஒரு பாவமான பின்கதை எல்லாம் என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். ஓர் ஆண் ஃபாரினில் வேலைபார்க்கச் செல்லும்போது உவகையுடன் அனுப்பிவைப்பது போல, பெண்ணை ஏன் அனுப்புவதில்லை என்பதே என் கேள்வி.

Working woman (Representational image)
Working woman (Representational image)
Pexels

இதற்கு நடுவில், என் தங்கைகளில் ஒருத்தி காதலிக்கிறாள். என் திருமணம் முடிந்த பின்னர் அவள் காதலை வீட்டில் சொல்லக் காத்திருக்கிறாள். அவள் காதலிக்கும் பையன், வீட்டுக்கு ஒரே பையன் என்பதால் அவர் வீட்டில் திருமணத்தை அவசரப்படுத்துகிறார்களாம். எனவே அவள், 'சுயநலமாக யோசிக்காதே, வெளிநாட்டு வேலையை கொஞ்சம் விட்டுக்கொடு, எல்லோரையும் பற்றி கொஞ்சம் யோசி' என்கிறாள்.

என்ன முடிவெடுப்பது நான்?