Published:Updated:

பூமியின் காயங்களைக் குணப்படுத்தும் தேவதை! விகடனின் தற்சார்பு பயிற்சியில் பங்கேற்க நீங்கள் தயாரா?

தற்சார்பு வாழ்க்கை - சித்திரிப்பு படம்
News
தற்சார்பு வாழ்க்கை - சித்திரிப்பு படம்

``தற்சார்பு வாழ்க்கையை நான் தேர்ந்தெடுத்த பிறகு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பிரெட், ஜாம், சாஸ், பட்டர், டீ பேக் எனப் பல பொருள்கள் வாங்குவதை அடியோடு நிறுத்திவிட்டேன்.

பூமியின் காயங்களைக் குணப்படுத்தும் தேவதை! விகடனின் தற்சார்பு பயிற்சியில் பங்கேற்க நீங்கள் தயாரா?

``தற்சார்பு வாழ்க்கையை நான் தேர்ந்தெடுத்த பிறகு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பிரெட், ஜாம், சாஸ், பட்டர், டீ பேக் எனப் பல பொருள்கள் வாங்குவதை அடியோடு நிறுத்திவிட்டேன்.

Published:Updated:
தற்சார்பு வாழ்க்கை - சித்திரிப்பு படம்
News
தற்சார்பு வாழ்க்கை - சித்திரிப்பு படம்

``நகர்ப்புறத்தில் வாழ்ந்தபோது என் வாழ்க்கையை வாழ நான் அதிகமாக வாங்கிக் குவிக்க வேண்டியிருந்தது. கிராமப்பகுதிக்கு வந்த பிறகுதான் ஏற்கெனவே என்னிடம் நிறைய இருக்கிறது; அதற்கு மேல் வாங்கிக் குவிப்பது வீண் என்ற தெளிவு ஏற்பட்டது. கிராமத்தில் இயற்கையின் மடியில் கிடைக்கும் செல்வங்களை நம்பி வாழ ஆரம்பித்த பிறகு, வாழ்க்கைத்தரம் அதிகரித்து, வாங்கும் செலவு குறைந்தது” என்கிறார், வடக்கு அட்லான்டிக் பகுதியின் செழிப்பான தீவான அயர்லாந்தில் வசிக்கும் இளம்பெண்.

தற்சார்பு வாழ்க்கை
தற்சார்பு வாழ்க்கை

`குறைவே நிறைவு!’ - என்பதைத் தன் தாரக மந்திரமாகக் கொண்டு வெற்றிகரமான யூடியூபராக மட்டுமல்ல; தற்சார்பு வாழ்க்கையின் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் இவர். இவரது சேனலின் பெயர் ஃபேரிலேண்டு காட்டேஜ் (Fairyland cottage). ``இந்தப் பூமியிடம் இருந்து வளங்களைப் பறித்துக் கொள்வதற்குப் பதில் அதன் காயங்களைக் குணப்படுத்துகிறேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் வேளாண் மக்களோடு வாழ்ந்தபோது, நிலைத்த வேளாண்மை (Permaculture) என்ற கொள்கையால் ஈர்க்கப்பட்டேன். மினிமலிசம், ஸீரோ வேஸ்ட், இயற்கையோடு வாழ்க்கை போன்றவற்றில் ஈடுபாடு அதிகமாகவே கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் என் குடும்பத்துக்குச் சொந்தமான, அவர்கள் பயன்படுத்தாமல் விட்டிருந்த நிலத்தைச் சீராக்கி விவசாயம் செய்யத் திட்டமிட்டேன்.

தற்சார்பு வாழ்க்கை
தற்சார்பு வாழ்க்கை

அந்த நிலத்தைப் பண்படுத்தி இயற்கை முறையில் பழங்கள், காய்கறிகள் பயிரிட்டு சோலையாக மாற்றியிருக்கிறேன்" என்பவர், எந்தப் பொருளையும் வீணாக்காமல் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்த வீடியோக்களை அதிகமாக வெளியிட்டிருக்கிறார்.

``தற்சார்பு வாழ்க்கையை நான் தேர்ந்தெடுத்த பிறகு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பிரெட், ஜாம், சாஸ், பட்டர், டீ பேக் எனப் பல பொருள்கள் வாங்குவதை அடியோடு நிறுத்திவிட்டேன். செல்போனைக்கூட ப்ரீபெய்டாக மாற்றிவிட்டேன். தேவை என்றால் மட்டும் ரீசார்ஜ் செய்கிறேன்.

ஆடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் என அனைத்தையும் செகண்டு ஹேண்டில்தான் வாங்கிப் பயன்படுத்துகிறேன்” என்பவர், அவருக்கான அழகு சாதனப் பொருள்களான டியோடரண்ட், டூத்பேஸ்ட், சோப்பு என அனைத்தையும் சமையல் அறை பொருள்களைப் பயன்படுத்தியே தயாரித்துக் கொள்கிறார்.

தற்சார்பு வாழ்க்கை
தற்சார்பு வாழ்க்கை

வீடு, கழிவறையைச் சுத்தம் செய்வதற்கான திரவங்களையும் அவரே இயற்கை முறையில் தயாரிக்கிறார். தனது ஹவுஸ் டூர் தொடங்கி, ஆரோக்கியமான ரெசிப்பிகள், அழகுக் குறிப்புகள், செலவுகளைக் குறைப்பதற்கான வழிமுறைகள், தோட்டமிடல் என அனைத்தையும் வீடியோவாக்கி வெளியிடுகிறார். அவரின் வீடியோவை பார்ப்பவர்களுக்கு அவரைப் போன்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று ஓர் அடியாவது முன்னே எடுத்து வைப்பார்கள்.

தற்சார்பு வாழ்க்கையின் அனுபவத்தை உங்களுக்கு நேரடியாக அளிக்கும் வகையில், அவள் விகடன் மற்றும் பசுமை விகடன் இணைந்து, `நல்வாழ்வு நம் கையில்!' என்ற தற்சார்பு வாழ்வியல் பயிற்சியை ஆகஸ்ட் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடத்துகிறது.

தற்சார்பு வாழ்வியல் பயிற்சி
தற்சார்பு வாழ்வியல் பயிற்சி

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு மலைத் தொடரில் அமைந்திருக்கும் பாபநாசம் சித்தர் கலைக்கூடத்தில் தற்சார்பு வாழ்வியல் பயிற்சி நடைபெறவுள்ளது. 3 பகல், 2 இரவுகள் என நடைபெறும் இந்தப் பயிற்சியில் தென்மேற்குப் பருவமழையின் சாரலை அனுபவித்தவாறே வாழ்வை நிறைவாக வாழ்வதற்கான விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

பயிற்சியில் பங்கேற்க க்ளிக் செய்யவும்.

பயிற்சியில் என்னென்ன சிறப்புகள்?

* தற்சார்பு வாழ்வியலின் முக்கியத்துவம்.

* உடலினை உறுதி செய்யும் மந்திரம்.

* நோய்களை விரட்டும் மூலிகைத் தோட்டம் அமைத்தல்.

* ஆற்றில் நீராடல்.

* நிலாச்சோறு.

* யோகா, எளிய உடற்பயிற்சி.

மூன்று நாள்களும் அறுசுவைமிக்க ஆர்கானிக் உணவு வழங்கப்படும்.
தற்சார்பு வாழ்வியல் பயிற்சி
தற்சார்பு வாழ்வியல் பயிற்சி

* மூலிகை உலா.

* அவசர காலத்தில் கைகொடுக்கும் மருந்தில்லா வர்ம மருத்துவம்.

* தற்சார்பு வாழ்க்கை - Spot Visit.

* பாரம்பர்ய விளையாட்டு.

இன்னும் பல ஆச்சர்ய அனுபவங்கள் காத்திருக்கின்றன.

பொதிகை மலையும், சலசலத்து ஓடும் ஆறும், மூலிகைகளின் நடுவில் நடைபெறும் பயிற்சியும் நினைவிலிருந்து அழிக்க முடியாத அனுபவங்களைத் தர காத்திருக்கின்றன.

கட்டணம் எவ்வளவு?

நபர் ஒருவருக்கு பயிற்சி, தங்குமிடம், உணவு, Spot Visit என அனைத்துக்கும் சேர்த்து சிறப்பு சலுகைக் கட்டணம் ரூ.6,999 (ஜி.எஸ்.டி உட்பட).

பயிற்சிக்கு மொத்தம் 40 இடங்கள் மட்டுமே. இடங்கள் வேகமாக நிரம்பி வருவதால், உங்கள் இடத்தை சீக்கிரம் முன்பதிவு செய்யுங்கள்.

பயிற்சி நடைபெறும் இடத்தில் ஒரு பகுதி
பயிற்சி நடைபெறும் இடத்தில் ஒரு பகுதி

இயற்கையின் வழியில் வாழ்க்கையைத் தொடங்க வேண்டுமா? அவள் விகடன் மற்றும் பசுமை விகடன் இணைந்து நடத்தும் `நல்வாழ்வு நம் கையில்' - தற்சார்பு வாழ்வியல் பயிற்சியில் கலந்துகொள்ளுங்கள்.

முன்பதிவு விவரங்களுக்கு :

90035 55441

பயிற்சியில் பங்கேற்க க்ளிக் செய்யவும்.