Published:Updated:

முதுமையில் மறைந்திருந்து தாக்கும் நோய்களைக் கண்டறிவது எப்படி? | முதுமை எனும் பூங்காற்று

Senior Citizen
News
Senior Citizen

உயர் ரத்த அழுத்தமும் நீரிழிவு நோயும் அண்ணன் தங்கை போல கூடவே இருக்க வாய்ப்புண்டு. ஆகையால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் உயர் ரத்த அழுத்தம் உள்ளதா என்று அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

முதுமையில் மறைந்திருந்து தாக்கும் நோய்களைக் கண்டறிவது எப்படி? | முதுமை எனும் பூங்காற்று

உயர் ரத்த அழுத்தமும் நீரிழிவு நோயும் அண்ணன் தங்கை போல கூடவே இருக்க வாய்ப்புண்டு. ஆகையால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் உயர் ரத்த அழுத்தம் உள்ளதா என்று அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

Published:Updated:
Senior Citizen
News
Senior Citizen
50 வயதைக் கடந்த அனைவரும் வருடத்திற்கு ஒருமுறையாவது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பார்ப்பது அவசியம்.

முதுமை நோய்களின் மேய்ச்சல் காடு என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் அந்தக் காட்டில் விளையும் நோய்கள் எனும் பயிர்களை ஆரம்பநிலையிலேயே கண்டறிவது எப்படி? பொதுவாக நோய்கள் என்றாலே சில ஆரம்ப அறிகுறிகள் இருக்கும். ஆகையால் அவற்றை எளிதில் கண்டறிந்து அதற்கு தக்க சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இது இளையப் பருவத்தினருக்கு ஓரளவிற்கு பொருந்தும். ஆனால், முதுமையில் இருளில் ஒளிந்திருக்கும் திருடனைப் போல எந்த அறிகுறியும் இல்லாமல் பல மாதங்கள், ஏன் பல வருடங்கள் கூட மறைந்திருந்து தாக்கும். நோய் முற்றிய நிலையில் அந்நோய்களின் தொல்லைகளே அதன் ஆரம்ப அறிகுறிகள் போலத் தோன்றும். ஆகவே, முற்றிய நிலையில் நோய்களைக் கண்டறியும் பொழுது அதற்கு அளிக்கும் சிகிச்சையின் பலன் அவ்வளவு திருப்திகரமாக இருக்காது. அப்படியென்றால் அந்நோய்களை எப்படித்தான் கண்டறிவது? இதோ அதற்கான பதில்...

Senior Citizen
Senior Citizen

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீரிழிவு நோய்

உலகளவில் இந்தியா நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டதில் முதலிடம் பிடிப்பது மட்டுமல்லாமல், முதுமையில் மறைந்திருந்து தாக்கும் நோய்களில் இதுதான் முதலிடம் வகிக்கிறது. பொதுவாக நீரிழிவு நோய் என்றாலே உடல் இளைக்கும், தண்ணீர் தாகம் அதிகம் எடுக்கும், சிறுநீர் அடிக்கடி கழிக்க வேண்டியிருக்கும், புண்கள் எளிதில் ஆறாது போன்ற அறிகுறிகள் தான் முதலில் தோன்றும். இவற்றை வைத்து நோயை எளிதில் கண்டு கொள்ளலாம். இது இளைய பருவத்தினருக்கு பொருந்தும், ஆனால் முதுமைப் பருவத்திற்கு பொருந்தாது. முதுமையில் உடல் திடீரென்று இளைப்பது, பசி அதிகரிப்பது, மிக்க சோர்வு ஏற்படுவது மற்றும் தொற்று நேய்கள் ஏற்பட்டால் சிகிச்சையினால் குணம் பெற பல நாட்கள் ஆவது போன்றவைகளே நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். உங்கள் குடும்பதினருக்கு நீரிழிவு நோய் இருந்தால் உங்களுக்கு இந்நோய் வர வாய்ப்பு அதிகம். ஆகையால் 50 வயதைக் கடந்த அனைவரும் வருடத்திற்கு ஒருமுறையாவது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பார்ப்பது அவசியம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சிலருக்கு ஈ.சி.ஜி.யில் எந்த மாற்றமும் இல்லாமல் மாரடைப்பு வரலாம்.

உயர் ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தமும் நீரிழிவு நோயும் அண்ணன் தங்கை போல கூடவே இருக்க வாய்ப்புண்டு. ஆகையால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் உயர் ரத்த அழுத்தம் உள்ளதா என்று அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொதுவாக உயர் ரத்தம் உள்ளவர்களுக்கு தலைவலி, தலைபாரம், மற்றும் மயக்கம் போன்றவகைகளே இந்நோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். ஆனால், இவை ஏதுமின்றி திடீரென்று ஏற்படும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற தொல்லைகளே முதுமையில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தின் ஆரம்ப அறிகுறிகாக இருக்கலாம். ஆகவே ஆண்டுக்கு ஒரு முறையாவது உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதா என்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

Diabetes
Diabetes

மாரடைப்பு

"நேற்று காலையில் பார்த்தேன், என்னிடம் நன்றாகத்தான் பேசிக் கொண்டிருந்தார். ஆனால், இன்று காலை அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை என்னால் நம்பவே முடியவில்லையே...” இதுபோன்ற செய்திகளை நாம் அடிக்கடி கேட்பதுண்டு. ஆம், முதுமையில் நெஞ்சுவலி ஏதுமின்றி மாரடைப்பு ஏற்படலாம். அவருக்குத் தெரியாமலேயே நீரிழிவு நோயும் உயர் ரத்த அழுத்தமும் இருந்திருக்கலாம். அதற்கு தக்க சிகிச்சையளிக்காத நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம். நெஞ்சில் வலியின்றி உடல் சோர்வு, களைப்பு, மூச்சு வாங்குதல், மயக்கம், கீழே விழுதல் மற்றும் பக்கவாதம் போன்ற தொல்லைகளே முதுமையில் மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நெஞ்சுவலி அதிகம் இல்லாமலேயே மாரடைப்பு ஏற்படலாம். சற்று வேகமாக நடந்தால் நெஞ்சுப் பகுதியில் அடைப்பது போல அல்லது ஏதாவது ஒரு சங்கடம் தோன்றுவது மற்றும் மூச்சு இரைப்பது போன்றவை ஏற்பட்டால் உடனே மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும். நீங்களாகவே ஈ.சி.ஜி.யை எடுத்துக் கொண்டு அது சரியாக இருப்பதால் உங்களுக்கு மாரடைப்பு இல்லை என்று எண்ணவேண்டாம். சிலருக்கு ஈ.சி.ஜி.யில் எந்த மாற்றமும் இல்லாமல் மாரடைப்பு வரலாம். சிறப்பு மருத்துவர் தேவைப்பட்டால் ஈ.சி.ஜி. யோடு, டிரெட்மில் மற்றும் எக்கோ ஆகிய பரிசோதனைகளை செய்த பின்னர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்பதை அவரால் அறுதியிட்டுக் கூற முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல ஆண்டுகளாக மறைந்திருக்கும்... கடைசியில் எலும்பு முறிவு ஏற்படும்பொழுதுதான் இதன் விளைவே தெரிய ஆரம்பிக்கும்.

தைராய்டு தொல்லைகள்

பெண்களுக்கு நீரிழிவு நோய்க்கு அடுத்ததாக அதிகமாக காணப்படுவது தைராய்டு தொல்லைகளே. முதுமையில் தைராக்சின் நீர் குறைவாகச் சுரப்பதால் மிக்ஸ்சோடிமா (Myxoedema) என்ற நோய் ஏற்படுகிறது. இந்த நோய் மெதுவாக உடலைத் தாக்குவதால், முதியவரால் இதை எளிதில் கண்டு கொள்ள முடிவதில்லை. இந்த நோயின் பல தொல்லைகள் முதுமையின் விளைவாக இருப்பது போலவே தோன்றும். உதாரணம்: உடல் சோர்வு, மந்த நிலை, மனச் சோர்வு, சதை வலிமை இழத்தல், மலச்சிக்கல், காது கேளாமை மற்றும் உடல் பருமன். ஆகையால் இத்தகைய தொல்லைகள் ஏற்பட்டால் அது முதுமையின் விளைவு என்று எண்ணி அலட்சியப்படுத்தாமல், உடனே தைராய்டு பரிசோதனை செய்தால், இந்நோயை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து தக்க சிகிச்சையளிக்க முடியும்.

bone
bone

எலும்பு வலிமை இழத்தல்

ஒரு எலும்பிலுள்ள பொருள் திணிவு (bone mass) குறையும் பொழுது அது தன் வலிமையை இழக்கிறது. இதன் விளைவாக எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு அதிகமாகிறது. இந்த நோய்க்கென்று குறிப்பிடும்படியான தொல்லைகள் ஏதுமில்லை. பல ஆண்டுகளாக மறைந்திருக்கும்... கடைசியில் எலும்பு முறிவு ஏற்படும்பொழுதுதான் இதன் விளைவே தெரிய ஆரம்பிக்கும்.

பின் வருபவர்களுக்கு இத்தொல்லை வர வாய்ப்பு மிக அதிகம்.

- குடும்பத்திலுள்ள பெண்கள் யாருக்காவது எலும்பு முறிவு ஏற்படுதல்.

- மாதவிடாய் முன்னதாக நின்றுவிடும் பெண்களுக்கு.

- மாதவிடாய் ஏற்படும் காலத்தில் குறைந்த எடை உள்ள பெண்களுக்கு.

- குழந்தை இல்லாத பெண்களுக்கு, சுண்ணாம்புச் சத்துள்ள குறைந்த உணவு உண்பதினால்.

- தொடர்ந்து படுக்கையில் இருப்பவர்கள்.

- ஸ்டீராய்டு மருந்துகள் உபயோகிப்பவர்கள்.

- தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள்.

டெக்ஸா ஸ்கேன் (Dexa scan) பரிசோதனை மூலம் இந்நோயை மிக எளிதாக ஆரம்ப நிலையிலேயே கண்டு கொள்ள முடியும்.

வயதாகும்பொழுது உடலில் ஏதாவது திடீரென்று மாற்றங்கள் ஏற்பட்டால் அது புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

மறதி நோய்

முதுமையினால் ஏற்படும் மறதிக்கும், மறதி நோய்க்கும் ஆரம்ப நிலையிலேயே அதிக வித்தியாசம் இருக்காது. ஆகவே மறதி நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது சற்று சிரமம். வீட்டிலே உள்ள நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் தங்களிடம் இருக்கும் பெரியவர்களின் நடை, உடை, பாவனைகளில் ஏதாவது சிறிது மாற்றம் தெரிந்தால் கூட அது டிமென்சியாவாக இருக்கலாம் என்று உடனே சிறப்பு மருத்துவர்களை அணுக வேண்டும். சுமார் 70 வயதைக் கடந்தவர்கள் தாங்களாகவே ஒரு தடவையாவது சிறப்பு மருத்துவரிடம் சென்று மறதி நோயைக் கண்டறியும் பரிசோதனையை செய்து கொள்வதின் மூலம் ஆரம்பநிலையிலேயே உள்ள மறதி நோயைக் கண்டு கொள்ள முடியும். குடும்பத்தில் யாருக்காவது மறதி நோய் இருந்திருந்தால் அல்லது சிறுவயதில் தலைக்காயம் ஏற்பட்டிருந்தால் சுமார் 50 - 60 வயதிலேயே மறதி நோயைக் கண்டறியும் பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும்.

Cancer
Cancer

புற்று நோய்

புற்று நோயின் ஆரம்ப அறிகுறிகள்

வயதாகும்பொழுது உடலில் ஏதாவது திடீரென்று மாற்றங்கள் ஏற்பட்டால் அது புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என்று எண்ணி உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும். உதாரணம்:

- திடீரென்று தொடர்ந்து வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல்

- தொடர்ந்து ஆறாத புண்

- பெண்களுக்கு பிறப்புறுப்புகளிலிருந்து ரத்தக்கசிவு அல்லது வெள்ளைப் படுதல்

- மார்பகம் அல்லது உடலில் எந்த ஒரு பகுதியிலும் திடீரென்று கட்டி தோன்றுதல்

- எந்த விதமான (திரவம் அல்லது கட்டியான) உணவையும் விழுங்குவதற்கு சிரமப்படுதல்

- உடலில் உள்ள மச்சம் அல்லது மரு ஆகியவற்றின் நிறம் மாறுதல் மற்றும் அளவு அதிகரித்தல்

- தொடர்ந்து இருமல் அல்லது குரலில் மாற்றம் தோன்றுதல் (முக்கியமாக புகைப்பிடிப்பவர்களுக்கு)

- தொடர்ந்து எடை குறைதல், தொடர் காய்ச்சல், தொடர்ந்து தாங்கமுடியாத வலி

Dr V S Natarajan
Dr V S Natarajan

மேற்கண்ட வழிமுறைகளை தவறாமல் கவனத்துடன் கடைப்பிடித்தால், மறைந்து இருந்து தாக்கும் பல நோய்களை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து, அதற்கு தக்க சிகிச்சை பெற்று பல்லாண்டு காலம் நலமுடன் வாழலாம்!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism