கட்டுரைகள்
Published:Updated:

தமிழன் Run சேலஞ்ச்

தமிழன் Run சேலஞ்ச்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழன் Run சேலஞ்ச்

ஒவ்வொரு கேள்விக்கும் என்ன பதில்னு குறிச்சுக்கங்க.

கொரோனா 360 டிகிரில தாக்கினாலும், டெம்பிள் ரன், பப்ஜி-னு கேமிங் மோடுலயே இருக்கிற தமிழர்களுக்கு ஒரு ஜாலி சேலஞ்ச். கடந்த மார்ச்ல இருந்து லாக் டௌன்ல சிக்கிக் கிடக்குறோம். வீட்டைவிட்டு வெளியே எட்டிக்கூடப் பார்க்க முடியலை. இந்தக் காலகட்டத்துல ஒரு தமிழனா நீங்க சந்திச்ச சவால்களை எப்படி சமாளிச்சீங்க? அதைப் பரிசோதிக்கத்தான் இந்தத் தமிழன் Run சேலஞ்ச். ஒவ்வொரு கேள்விக்கும் என்ன பதில்னு குறிச்சுக்கங்க. அப்புறம் இந்த சவால்ல நீங்க ஜெயிச்சீங்களா, இல்லையான்னு புத்தகத்தைத் தலைகீழாகப் புரட்டிப் பார்க்கவும்.

தமிழன் Run சேலஞ்ச்

1. இ-பாஸ் பத்தி என்ன நினைக்கிறீங்க?

  • அப்ளை செய்தேன். ரிஜெக்ட் ஆனேன்.

  • அதெல்லாம் எடுக்கணுமா என்ன?

  • வீட்டை விட்டே வெளிய வரல பாஸ்!

2. OTT-ல அக்கவுன்ட் இருக்கா?

  • பொழப்பே அதுலதான் ஓடுது

  • OTTன்னா..?

  • இருக்கு, ஆனா ரெகுலரா பார்க்கிறதில்லை.

3. ஜூம் கல்யாணத்துல கலந்துகிட்ட அனுபவம் எப்படி?

  • செலவு மிச்சம். இப்படித்தான் இருக்கணும்!

  • என்ன இருந்தாலும் கல்யாணம்னா கலகலப்பா இருக்கணும். சரிப்படாது.

  • லாக்டௌன் முடிஞ்சாத்தான் கல்யாணம்!

4. இந்த சீசனின் ‘அப்டியே ஷாக் ஆகிட்டேன்’ மொமன்ட் எது?

  • வனிதா விஜயகுமார் அட்ராசிட்டீஸ்.

  • மீரா மிதுன் பஞ்சாயத்துகள்.

  • ஜெ. தீபாவுக்குக் கிடைத்த போயஸ் வீடு.

5. தமிழக அரசின் சாதனை எது?

  • எஸ்.வி.சேகருக்கு பால் பாக்கெட் கொடுத்தது.

  • நான்கு மாதங்களுக்கு ரேசனில் 1000 ரூபாய் கொடுத்தது.

  • ‘ஏழைகளுக்குக் கொரோனா வராது’ என அள்ளு கிளப்பியது.

6. இந்த ஆறுமாத காலத்தில் நீங்கள் அதிகம் நொந்தது?

  • ‘கோ கொரோனா கோ’ கூத்துகள்

  • டிக்டாக் தடை

  • கொரோனா சமயமும் சோஷியல் மீடியாவில் விஜய்-அஜித் ரசிகர்கள் சண்டை ஓயாதது.

7. வொர்க் ஃப்ரம் ஹோம்ல என்ன புரிஞ்சது?

  • ஆபீஸே தேவலாம்.

  • போராட வேண்டியது கொரோனாவுக்கு எதிராகத்தான். மனைவிக்கு எதிராக அல்ல.

  • ஹவுஸ் வொஃய்ப்-களுக்குக் கோயில் கட்டிக் கும்பிடணும்.

8. நீங்க அதிகம் மிஸ் செய்த நிகழ்ச்சி எது?

  • பிக் பாஸ்

  • ஐ.பி.எல்

  • நமக்கு சீரியல்தாங்க

9. கொரோனா உங்களுக்கு உணர்த்தியது என்ன?

  • தமிழ்நாட்டிலும் டாஸ்மாக்கை மூட முடியும்!

  • OTT-யில் பார்த்தாதான் தெரியுது, நம்ம ஊரைத் தாண்டி நல்ல படங்கள் நிறைய!

  • பிக் பில்லியன் டே-ல வாங்காமலும் உயிர் வாழ முடியும்.

10. இந்தச் சூழலில் உங்கள் எடை?

  • அதிகமாகியிருக்கிறது

  • குறைந்திருக்கிறது

  • ஃபிரிட்ஜ்ல வெச்ச மாதிரி அப்படியே இருக்கேன்

11. கொரோனாவுக்குப் பிறகும் எதைத் தொடர்வீர்கள்?

  • சிக்கன வாழ்க்கை

  • ஜங்க் ஃபுட்டுக்குக் கும்பிடு!

  • வீட்டு வேலைகளைப் பகிர்ந்துசெய்வது.

ஓ.கே... உங்க பதில்களை குறிச்சுக்கிட்டு, கீழே இருக்கிற பாக்ஸை புரட்டிப் படிங்க. சவால்ல ஜெயிச்சீங்களா இல்லையானு தெரிஞ்சுக்கலாம்!

தமிழன் Run சேலஞ்ச் முடிவு!

மிழன்Runசேலஞ்சில் கலந்துகொண்டமைக்கு நன்றி. பதில்களை படிச்சப்போ உங்களையே நினைச்சு சிரிச்சுக்கிட்டீங்களா? அதான் விடை! இந்தச் சூழல் ரொம்பவே கடினமானதுதான். ஆனா, நாம எல்லாம் சுனாமியிலேயே ஸ்விம்மிங் போட்டவைங்க. இந்தக் கொரோனாவுக்கு ஒரு குட்பை சொல்ல மாட்டோமா? எவ்ளோ பெரிய பிரச்னையா இருந்தாலும், ஒரு கப் காபி கொடுத்து அனுப்பி வெச்சுடணும்னு ஒரு மஹான் சொல்லியிருக்கார். கொரோனாவுக்கு ஒரு கப் சானிட்டைசர கொடுப்போம். மத்தபடி ரிலாக்ஸா இருங்க. அன்பைப் பகிருங்க. பாசிட்டிவ் எனர்ஜிய பரப்புங்க. நம்ம ஜாலிவாலி மாதிரி ஜாலியா இருப்போம்!