என்டர்டெயின்மென்ட்
ஹெல்த்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

அவள் விகடன் புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 9: பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி கொண்டாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
புதிர்ப் போட்டி கொண்டாட்டம்

லத்திகா சுகுமார்

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்ட இருக்கின்றன. அந்த வரிசையில் இதோ... இன்னொரு போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், ஃபேமிலி பாட்டு மாதிரி உங்க ஃபேமிலி ஸ்பெஷல் பாரம்பர்ய டிப்ஸை (அந்த விஷயம் பலருக்கும் பயன் தரக்கூடியதாக இருக்க வேண்டும்) ‘நச்’சென இரண்டே வரிகளில் சொல்லுங்கள். சரியான விடையுடன் டிப்ஸ் மற்றும் நச் வரிகளை எழுதும் 10 பேருக்கு தலா 500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

1. நான் யார் தெரியுமா?

நான் உங்களுக்குப் பயனுள்ளவன். அவசர நேரத்தில் என்னை சட்டென பயன்படுத்துவீர்கள். பல நேரத்தில் நான் ஒருவனே முழுமையாகப் பயன்படுவேன். ஆனாலும் பாருங்கள். இவ்வளவு நல்லவனான என்னை உடைக் காமல் நீங்கள் ஒருபோதும் பயன்படுத்துவதே இல்லை. நான் யார்?

2. ஏன் இப்படி?

பாதாளச் சாக்கடை மூடிகளும், அந்தக் குழிகளும் ஏன் வட்டமாகவே இருக்கின்றன?

3. எப்படி இப்படி இருக்க முடியும்?

மகனோடு காரில் சென்றுகொண்டிருந்தார் அவர். வழியில் திடீரென விபத்து நிகழ்ந்தது. சம்பவ இடத்திலேயே அப்பா இறந்துவிட, உயிருக்கு ஆபத் தான நிலையில் மகனை மருத்துவமனைக்குத்தூக்கிச் செல்கிறார்கள். அவசர அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. டாக்டர் அவன் முகத்தைப் பார்த்த அடுத்த நொடியே, `என்னால் ஆபரேஷன் செய்ய முடியாது. இவன் என் மகன்’ என்று கதறுகிறார். இது எப்படி சாத்தியம்?

அவள் விகடன் புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 9: பரிசு ரூ.5,000

புதிர்ப்போட்டி - 7 முடிவுகள்

பணம் போடும் ரோசி, பணம் எடுக்கும் ரேஷ்மா!

சரியான விடை: ரோசி பிறந்தது பிப்ரவரி 29. அதனால் அவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். ஆனால், ரேஷ்மாவுக்கு ஒவ்வோர் ஆண்டும் பிறந்தநாள் வரும். ரோசி தன் வாழ்நாளில் 10 முறை 250 ரூபாயை உண்டியலில் போட்டதால், 2,500 ரூபாய் சேர்ந்திருந்தது. ரேஷ்மா ஒவ்வொரு வருடமும் 50 ரூபாய் வீதம் 40 ஆண்டுகளில் 2,000 ரூபாயை எடுத்து விட்டார். அதனால் உண்டியலை உடைத்தபோது, 500 ரூபாய் மட்டுமே இருந்தது.

சரியான விடையுடன் 2.3.2021 இதழில் வெளியாகியிருக்கும் கட்டுரைகளில் உங்களுக்குப் பிடித்த மூன்று கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து 1, 2, 3 என்று வரிசைப்படுத்துங்கள். அதற் கான காரணங்களையும் எழுதுங்கள் என்று கேட்டிருந் தோம். அதன்படி சரியான விடையை எழுதி, சிறந்த கட்டுரைகளையும் தேர்ந்தெடுத்து ரூ.500 பரிசு பெறும் 10 பேர்...

1. பி.லதா, சேலம்

ஒவ்வொரு விதையும் விருட்சமா வளரணும்...

‘கல்வி இல்லா வீடு, கடவுள் இல்லா வீடு’ என்பதைப் புரிய வைத்து பலரின் வாழ்க்கைக்குக் கல்வி வெளிச்சம் தந்த பிரியாவின் பணிக்கு ராயல் சல்யூட்!

2. எஸ்.மீரா, வேலூர்

களைகட்டிய சமையல் போட்டி!

பெண்களின் திறமையை வெளியுலகத்துக்கு உணர்த்தும் விதமாகச் சமையல் போட்டி நடத்திய அவள் விகடனுக்கு வாழ்த்துகள்!

3. உமாதேவி ஜனார்த்தன், கோயம்புத்தூர்-12

அவங்கள கிண்டல் பண்றது தப்புதானே?!

சமூகத்தில் திருநங்கைகளுக்கான உணர்வைப் புரிய வைத்த அவர்களின் மதிப்பை மாற்றியமைத்த கட்டுரை!

4. வி.சுப்ரியா, திருமுடிவாக்கம், சென்னை-132

வளர்ப்பு... ஒரு பாடம்!

பிள்ளைகளைப் பொறுப்புடன் வளர்க்காதவர்கள், அதற்கான தண்டனையாகப் பிள்ளைகளால் பாதுகாக்கப்படாமல் போகும் நிலைக்கு ஆளாவார்கள் என்ற உண்மையை உணர்த்தியது கல்லூரி மாணவர்களின் 2கே கிட்ஸ் பக்கத்தில் வெளியான கட்டுரை.

5. ஜி.பாரதி, சென்னை-19

பொம்பள பூசாரியா இருக்கக் கூடாதா?

பின்னியக்காளின் சட்டப் போராட்டம்... தன்னம்பிக்கையின் உரம். ஒவ்வொரு விதையும் விருட்சமாகும் நிச்சயம்.

6. எஸ்.சுபா மணியன், வில்லிபுத்தூர்

மாற்றுத்திறன் சுமையல்ல... கெளரவம்!

நம்பிக்கையை - புத்துணர்ச்சியை - மாற்றங்களுக்கு வித்திடும் திறனைக் கொடுத்திருக்கிறார் லாரன் ஸ்பென்சர்.

7. எஸ்.அஸ்வினி, மதுரை-2

மனசுல இருந்த காயத்தையெல்லாம் பலகாரமா சுட்டுத்தள்ளிட்டேன்!

எத்தனை சோதனைகள் வந்தாலும் துவளாமல் எதிர்நீச்சல் போட்டு வெற்றிக்கனியைப் பறிக்க முடியும் என்று நம்பிக்கையூட்டுகிறார் செளந்தரம் ஆச்சி.

8. பிரபா டாக்கர், ஹைதராபாத்-4

எந்த வேதனையும் என் உள்ளத்தை அசைக்காது!

நம்பிக்கை மனுஷி கார்த்தீபாவின் வார்த்தைகள் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கமளிக்கும் தன்னம்பிக்கை விதைகள்.

9. கே.விஜயா மாதேஸ்வரன், தர்மபுரி

ரேஷன் கார்டு முதல் பாஸ்போர்ட் வரை - 32 பக்க இணைப்பு

மிக மிக அவசியமான, பாதுகாக்கப்பட வேண்டிய பயனுள்ள பொக்கிஷம்.

10. ராதா ஸ்வாமிநாதன், சென்னை-17

ஆண்களைப் புரிந்துகொள்வோம்!

ஆண் பத்து பிறவிகளில் உழைப்பதை, பெண் ஒரே பிறவியில் உழைத்துவிடுகிறாள் என்பதை நாசூக்காகச் சொல்லி பெண்ணின் அருமையைப் புரியவைத்த அவளுக்கு நன்றி.